Home
Gadgets

உப்புக்கு சப்பாணி கீபோர்ட் இல்ல.. மெக்கானிக்கல் கீபோர்ட்-ஐ அறிமுகம் செய்த OnePlus.. என்ன விலை?

இன்று (அதாவது பிப்ரவரி 7 ஆம் தேதி) நடந்த க்ளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) மட்டுமின்றி, இந்நிறுவனத்தின் முதல் கீபோர்ட்டும் (First Keyboard) கூட இந்தியாவில் அறிமுகமானது. அதுவும் சாதாரண கீபோர்ட் அல்ல - மெக்கானிக்கல் கீபோர்ட்!

OnePlus-ன் முதல் கீபோர்ட்டின் பெயர் என்ன?

ஒன்பிளஸ் நிறுவனம் தனது முதல் கீபோர்ட்டை - ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோ (OnePlus Keyboard 81 Pro) என்று அழைக்கிறது. இந்த பெயர் கீபோர்டில் உள்ள 81 கீகளிலிருந்து வந்துள்ளது மற்றும் இந்த 81 கீகளில் முழு அளவிலான ஏரோ க்ளஸ்டர் (Arrow Cluster) மற்றும் ஃபங்க்ஷன் ரோவும் (Function Row) அடங்கும்.

OnePlus-ன் புதிய மெக்கானிக்கல் கீபோர்ட் அறிமுகம்.. என்ன விலை?

Keychron உடன் கூட்டு சேர்ந்த OnePlus!

ஒன்பிளஸ் தனது முதல் கீபோர்ட்டை கீக்ரான் (Keychron) உடன் இணைந்து தயாரித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அறியாதோர்களுக்கு கீக்ரான் - ஒரு புகழ்பெற்ற ஹை-எண்ட், ப்ரீ-பில்ட் மெக்கானிக்கல் கீபோர்ட் பிராண்டாகும்.

இந்த பிராண்டின் கீக்ரான் க்யூ1 (Keychron Q1) கீபோர்டும், ஒன்பிளஸின் முதல் கீபோர்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வடிவமைப்பை பெற்றுள்ளன என்றால் அது மிகையாகாது!

இரண்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் என்ன?

வேறுபாடுகளை பொறுத்தவரை ஒன்பிளஸ் மாடலில், சாலிட் பிளாஸ்டிக் கலருக்கு பதிலாக கிளியர் ஆன கிரிஸ்டலின் க்னோப் (Crystalline knob) உள்ளது மற்றும் எஸ்கேப் (Esc) கீயில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் "1+" பிராண்டிங் உள்ளது.

OnePlus Keyboard-ல் வேறு என்ன ஸ்பெஷல்?

யூ.எஸ்.பி-சி வயர்டு மற்றும் ப்ளூடூத் வயர்லெஸ் என இரண்டு வகையான கனெக்டிவிட்டி மோட்களுடன் வரும் இந்த ஒன்பிளஸ் கீபோர்ட்டில் உள்ள இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இது விண்டோஸ் (Windows) மற்றும் மேக் (Mac) ஆகிய இரண்டையுமே ஆதரிக்கும்.

அதுமட்டுமின்றி, இந்த ஒன்பிளஸ் கீபோர்ட் ஆனது க்யூஎம்கே (QMK) மற்றும் விஐஏ (VIA) எனப்படும் ஓப்பன் சோர்ஸ் யூட்டிலிட்டிகள் / ஆப்களை பயன்படுத்தி - ஃப்ரிம்வேர் லெவலில் - ரீபுரோகிராமிங் கீஸ் (Reprogramming Keys) மற்றும் க்னோப் ஃபங்க்ஷன்ஸை (Knob Functions) ஆதரிக்கிறது. அதாவது கீ பைண்டிங்ஸ் (Key Bindings) அல்லது புரோகிராம் மேக்ரோஸை (Program Macros) வசதிக்கேற்ப கஸ்டமைஸ் செய்யலாம்!

கலக்கலான கலர்ஸ்!

கலர் காம்பினேஷனை பொறுத்தவரை, இதில் சில்வர், ஒயிட் மற்றும் ரெட் போன்ற வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பெரும்பாலான கீகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திலேயே உள்ளன. ரிட்டர்ன் (Return) மற்றும் எஸ்கேப் (Esc) கீகள் மட்டும் மிகவும் அழகான, அடர் சிவப்பு நிறத்தில் உள்ளன. மேலும், இந்த கீபோர்டில் உள்ள அனைத்து கீகளுமே மிகவும் வசதியான மற்றும் மென்மையான அனுபவத்தை வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன.

என்ன விலை.. எப்போது விற்பனை?

விலையை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நிறுவனம் எந்த வகையான தகவலையும் பகிரவில்லை. ஆனால் ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோவின் ப்ரீ-ஆர்டர் ஆனது வருகிற 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் தொடங்கும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் டேப்லெட்டிற்கும் கூட இதே நிலைதான்.

அதாவது ஒன்பிளஸ் பேட்டின் விலை விவரம் வெளிப்படுத்தப்படவில்லை. ஆனால் அது ஏப்ரல் மாத வாக்கில் இந்தியாவில் வாங்க கிடைக்கும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது!

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus First Mechanical Keyboard Launched in India Check OnePlus Keyboard 81 Pro Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X