விசித்திரமான கேமரா.. வெறியான ஃபாஸ்ட் சார்ஜிங்.. OnePlus-ன் முதல் டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?
மிகவும் சாதாரணமாக ஸ்மார்ட்போன் சந்தைக்குள் நுழைந்து.. "வாங்கினால் ஒரு ஒன்பிளஸ் போனை தான் வாங்குவேன்" என்று பலரையும் அடம்பிடிக்க வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள சீன நிறுவனமான ஒன்பிளஸ், கெத்தாக டேப்லெட் சந்தைக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது!
OnePlus Pad - இந்நிறுவனத்தின் முதல் டேப்லெட்!
ஒன்பிளஸ் நிறுவனம் இன்று நடந்த க்ளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில் பல வகையான புதிய தயாரிப்புகளோடு சேர்த்து தனது முதல் டேப்லெட்டையும் (First Tablet) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) என்று அழைக்கப்படும் இந்த டேப்லெட் என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதன் விலை நிர்ணயம் என்ன? எப்போது முதல் விற்பனை தொடங்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!
திடமான டிசைன்.. விசித்திரமான கேமரா!
ஒன்பிளஸ் பேட் ஆனது சிஎன்சி-மெஷின்டு அலுமினிய அலாய் சேஸை பெற்றுள்ளது. இது திடமான டிசைன் உடன் சேர்த்து பிரீமியம் லுக்கையும் வழங்குகிறது.
இந்த டேப்லெட்டின் மற்றொரு சிறப்பம்சம் - இதன் 13எம்பி பின்பக்க கேமராவாகும். இது மிகவும் வித்தியாசமாக.. லேண்ட்ஸ்கேப் மோடில், டேப்லெட்டின் மேல் பக்கத்தின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்தவரை 8எம்பி செல்பீ கேமரா உள்ளது!
OnePlus Pad-ன் டிஸ்பிளே சைஸ் என்ன?
இந்த டேப்லெட் 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோவுடனான 11.6-இன்ச் என்கிற அளவிலான 144ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளே உள்ளது.
88% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோவுடன் வரும் இந்த டேப்லெட்டின் அனைத்து பக்கங்களிலும் 6.54 மிமீ என்கிற அளவிலான மிகவும் மெல்லிய பெஸல்களே உள்ளன!
பெரும்பாலான ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் பிளாக் அல்லது க்ரே நிறத்தில் மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் பேட் ஆனது ஹாலோ கிரீன் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வெயிட்டான பேட்டரி.. வெறியான ஃபாஸ்ட் சார்ஜிங்!
12ஜிபி வரையிலான ரேம் மற்றும் மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப் உடன் வரும் இந்த ஒன்பிளஸ் டேப்லெட், 9510mAh என்கிற அளவிலான பேட்டரி பேக் செய்கிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த பேட்டரி 14.5 மணிநேர வீடியோ பிளேபேக் டைம் மற்றும் 30 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமை வழங்கும்.
கூடுதல் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த பேட்டரி 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது சுமார் 80 நிமிடங்களில் 0 - 100 சதவீதம் சார்ஜ் செய்யுமாம்.
என்ன விலை.. எப்போது முதல் விற்பனை?
ஒன்பிளஸ் பேட் உடன், ஒன்பிளஸ் ஸ்டைலஸ் மற்றும் ஒன்பிளஸ் மேக்னெட்டிக் கீபோர்ட் போன்ற அதன் சொந்த ஆக்சஸெரீஸ்களும் அறிமுகமாகும்; தனித்தனியாக வாங்க கிடைக்கும் என்பதில் சந்தகமே வேண்டாம்.
இருப்பினும் ஒன்பிளஸ் பேட் மற்றும் அதன் ஆக்சஸெரீஸ்களின் விலை விவரங்கள் எதுவுமே பகிரப்படவில்லை. தற்போது வரையிலாக ஒன்பிளஸ் பேட்டின் ப்ரீ-ஆர்டர் வருகிற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது!


Click it and Unblock the Notifications








