புதிய OnePlus Buds அறிமுகம்! 45 மணிநேர பேட்டரி, அடாப்டிவ் ANC, AI மொழிபெயர்ப்பு.. ஜூலை 12 முதல் ஆபர் விலையில்!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் சம்மர் லான்ச் ஈவென்ட் 2025 இல் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, அதன் புதிய இயர்பட்ஸ் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மாடலையும் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 விலை, விற்பனை தேதி மற்றும் சலுகை: கடந்த ஜனவரி 2024 இல் அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஆனது ரூ.5,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது Storm Grey மற்றும் Zen Green ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய TWS இயர்போன்ஸ் ஆனது வருகிற ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும். முதல் விற்பனையின் போது ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் மீது ரூ. 500 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது; அதாவது ரூ.5,499 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடக்கம்.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 மீது ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை ஒன்பிளஸ் இந்தியா இ-ஸ்டோர் (OnePlus India e-store), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் (OnePlus Experience Stores) வழியாக ஜூலை 12 ஆம் தேதி முதல் வாங்கலாம்
ஒன்பிளஸ் பட்ஸ் 4 முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஆனது சிலிகான் இயர்டிப்களுடன் "பாரம்பரியமான" இன்-இயர் டிசைனை கொண்டுள்ளது. இது 11மிமீ 30-லேயர் செராமிக்-மெட்டல் வூஃபர்கள் மற்றும் இடூயல் DAC யூனிட்களுடன் இணைக்கப்பட்ட 6மிமீ பிளாட் ட்வீட்டர்களுடன் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் இது ஹை-ரெஸ் வயர்லெஸ் ஆடியோ சான்றிதழ் மற்றும் ஒன்பிளஸ் 3டி ஆடியோவுடன் வருகின்றன.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய TWS இயர்போன்ஸ் ஆனது கோல்டன் சவுண்ட் அனுபவத்தை வழங்குவதாக கூறப்படுகிறது. அதாவது இயர்போன்கள் தனிப்பயனாக்கப்பட்ட ஆடியோவிற்கான இயர் கேனலை மேப் செய்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பட்ஸ் 55dBஅடாப்டிவ் ANC வரை ஆதரிக்கிறது மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட்-ஐயும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இயர்பட்டும் தெளிவான கால்களை வழங்க த்ரீ-மைக் ஏஐ-பேக்டு கால் நாய்ஸ் ரிடெக்ஷன் சிஸ்டமை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஆனது ப்ளூடூத் 5.4, டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது. ஸ்டெடி கனெக்ட் தொழில்நுட்பத்திற்கான ஆதரவுடன் வறுத்தால் இந்த ஹெட்செட்டுகள் நிலையான ப்ளூடூத் இணைப்பை வழங்குவதாக (குறிப்பாக வெளிப்புறங்களில்) கூறப்படுகிறது. லேக் -ஐ குறைப்பதற்காக இதில் 47ms வரையிலான அல்ட்ரா-லோ லேட்டன்சியுடன் கூடிய பிரத்யேக கேமிங் மோட் ஒன்றும் உள்ளது .
பேட்டரி மற்றும் சார்ஜிங்கை பொறுத்தவரை, கேஸ் கேஸ் உட்பட ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஆனது மொத்தமாக 45 மணிநேரம் வரை பிளேபேக் டைம்-ஐ வழங்குவதாகக் கூறப்படுகிறது. ANC இல்லாமல், இயர்போன்களை மட்டும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில், கேஸில் 10 நிமிடங்கள் விரைவாக சார்ஜ் செய்வது 11 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. இந்த இயர்போன்கள் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடையும், வால்யூம் ஸ்வைப் கட்டுப்பாட்டையும் வழங்குகின்றன. கூடவே ஐபி55 ரேட்டிங் தூசி மற்றும் நீர்-எதிர்ப்பு கட்டமைப்பையும் கொண்டுள்ளன. கடைசியாக சிங்கிள் டேப்பின் கீழ் நிகழ்நேர ஏஐ மொழிபெயர்ப்பையும் ஆதரிக்கின்றன.


Click it and Unblock the Notifications








