Home
Mobile

7100mAh பேட்டரி உடன் புதிய பட்ஜெட் OnePlus போன் அறிமுகம்.. ஜூலை 12 முதல் விற்பனை.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2025 சம்மர் லான்ச் வெளியீட்டு நிகழ்வில் - மிகவும் எதிர்பார்க்கப்பட்ட - ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின. இந்த சீரிஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) என 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை, சலுகைகள் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை தேதி மற்றும் அறிமுக சலுகைள் (OnePlus Nord CE 5 Price, Sale Date and Offers): இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

7100mAh பேட்டரி உடன் புதிய பட்ஜெட் OnePlus போன் அறிமுகம்!

இதே ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.26,999 மற்றும் ரூ.28,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது Black Infinity, Marble Mist மற்றும் Nexus Blue ஆகிய 3 கலர்களில் வருகிற ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வரும்.

தகுதியான பேங்க் கார்டுகளை பயன்படுத்தி ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூ.2,000 உடனடி தள்ளுபடியை பெறலாம் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா, ஒன்பிளஸ் நிறுவனத்தின் சொந்த வலைத்தளம் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள பிற கடைகள் வழியாக விற்பனை ஜூலை 12 முதல் விற்பனை செய்யப்படும்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications and Features): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12GB வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிவைஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.5×76×8.2மிமீ உள்ளது மற்றும் எடையில் 199 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5 with 7100mAh Battery Launched in India Price Specifications Sale Starts July 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X