ஆளுக்கு 1 ஆர்டர் உறுதி.. 48 மணிநேர பேட்டரி, IP54, 55dB ANC ஆதரவுடன் புது இயர்பட்ஸ்.. Moto மிரட்டலடி!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம், மோட்டோ ஜி37 மற்றும் மோட்டோ ஜி37 பவர் ஆகிய 2 புதிய ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து, மோட்டோ பட்ஸ் 2 (Moto Buds 2) இயர்பட்ஸ் மாடலையும், வருகிற மே 19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளது.
இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடலை தொடர்ந்து, மோட்டோ பட்ஸ் 2 இயர்பட்ஸ்கள் ஆனது ஆடியோ, பேட்டரி மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் என பல முக்கிய அம்சங்களின் நீண்ட பட்டியலுடன் வருகிறது. நினைவூட்டும் வண்ணம் மோட்டோ பட்ஸ் 2 கடந்த மார்ச் மாதத்தில் உலகளவில் அறிமுகமானது. ஆகையால் அம்சங்கள் குறித்து எந்த குழப்பமும் இல்லை.

மோட்டோ பட்ஸ் 2-வின் முக்கிய அம்சங்கள்:
- 11மிமீ டைனமிக் டிரைவர் மற்றும் 6மிமீ மைக்ரோ பிளானர் மேக்னடிக் டிரைவர்
- உயர்தர ப்ளூடூத் ஆடியோவிற்காக LHDC (லோ-லேட்டன்சி ஹை-டெஃபினிஷன் ஆடியோ கோடெக்)
- 360-டிகிரி சவுண்ட் எபெக்ட் உடன் கூடிய ஸ்பேஷியல் ஆடியோ
- 55dB வரையிலான டைனமிக் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
- வெளிப்புற ஒலியை உள்ளே அனுமதிக்க ஸ்மார்ட் டிரான்ஸ்பரன்சி மோட்
- இஎன்சி (Environmental Noise Cancellation) மற்றும் ஹை சிக்னல்-டு-நாய்ஸ் ரேஷியோ (high signal-to-noise ratio) ஆதரவு
- சிக்ஸ் மைக் செட்டப்
- லோ லேடன்சி கேமிங் மோட் (low-latency gaming mode)
- ஒவ்வொரு இயர்பட்டிலும் 62mAh பேட்டரி
- கேஸில் 520mAh பேட்டரி
- ஒருமுறை சார்ஜ் செய்தால் 11 மணிநேரம் வரையிலும், கேஸ் உடன் 48 மணிநேரம் வரையிலும் பயன்படுத்தலாம்
- ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 3 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்
- ப்ளூடூத் 6.0 மற்றும் டூயல் கனெக்டிவிட்டி (இரண்டு டிவைஸ்களுக்கு இடையில் மாறி மாறி பயன்படுத்தலாம்)- - வியர் டிடெக்ஷன் (wear detection)
- சரிசெய்யக்கூடிய கண்ட்ரோல்கள்
- பேஸ் பூஸ்டுடன் கூடிய கஸ்டமைசபிள் இக்யூ (EQ)
- ரிங் மை பட்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட் ட்ரிக்கர், ஆடியோ ஷேர் மற்றும் மோட்டோ ஏஐ ஆதரவு
- தூசி மற்றும் நீர் தெறிப்புகளை தாங்கும் IP54 ரேட்டிங்
மோட்டோ பட்ஸ் 2 எதிர்பார்க்கப்படும் விலை: இங்கிலாந்தில், மோட்டோ பட்ஸ் 2 மாடலின் விலை £70 ஆகும். இது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.9,000 க்கு சமம். இருப்பினும், இம்மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் மாடலின் விலை ரூ.5,999 ஆக உள்ளது, எனவே அதற்கு கீழ் வரும் மோட்டோ பட்ஸ் 2 ஆனது இன்னும் குறைந்த விலையில் (ரூ.5000 க்குள்) அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் முக்கிய அம்சங்கள்: இந்த இயர்போன்ஸ் - சவுண்ட் பை போஸ் (Sound by Bose) தொழில்நுட்பத்துடன் ட்யூன் செய்யப்பட்ட ஹைப்ரிட் டூயல்-டிரைவர் சிஸ்டம், LHDC கோடெக்குடன் கூடிய ஹை-ரெஸ் ஆடியோ ஆதரவு மற்றும் 55dB வரையிலான அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆகியவற்றை வழங்குகின்றன.
மேலும், இது ப்ளூடூத் 6.0 இணைப்பு, இரண்டு டிவைஸ்களை இணைக்கும் வசதி, மற்றும் சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தம் 40 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி லைஃப் ஆகியவற்றையும் வழங்குகின்றன. ரூ.5,999 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள மோட்டோ பட்ஸ் 2 பிளஸ் இயர்போன்ஸ் - பேன்டோன் கூல் ஒயிட் மற்றும் பேன்டோன் சில்ஹவுட் ஆகிய 2 கலர்களில் பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications