மே.19 வரைக்கும் எந்த போனும் வாங்கிடாதீங்க.. 7000mAh பேட்டரி உடன் பக்கா பட்ஜெட்டில் புது Moto மாடல் வருது!
மோட்டோரோலா (Motorola) நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய அறிமுகங்களுக்கான தனது வேகத்தை குறைப்பதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை, ஏன் காட்ட வேண்டும்? சமீபத்திய ஐடிசி அறிக்கையின்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (Q1 2026) இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் இந்த பிராண்ட் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வேகத்திற்கு அதன் தீவிரமான ஸ்மார்ட்போன் அறிமுக உத்தியே முக்கிய காரணமாகும். அந்த வெற்றியை தொடர்ந்து, மோட்டோரோலா இப்போது இந்தியாவில் மோட்டோ ஜி37 (Moto G37) மற்றும் மோட்டோ ஜி37 பவர் (Moto G37 Power ) என்கிற இரண்டு புதிய பட்ஜெட் மாடல்களை அறிமுகப்படுத்துவதை உறுதி செய்துள்ளது.

மோட்டோ ஜி37 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன? மோட்டோ ஜி37 மற்றும் ஜி37 பவர் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற மே 19 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அறிமுகத் தேதியுடன், இந்த ஸ்மார்ட்போன்கள் பிளிப்கார்ட்டில் வாங்க கிடைக்கும் என்பதும், சில முக்கிய அம்சங்கள் மற்றும் கலர் ஆப்ஷன்களும் கூட வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மோட்டோ ஜி37 மற்றும் ஜி37 பவர் - என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? மோட்டோ ஜி37 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், மீடியாடெக் டைமென்சிட்டி 6400 சிப்செட்டுடன், ஒரு பிரம்மாண்டமான 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்று மோட்டோரோலா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போன்களில் கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் ப்ரொடெக்ஷன் மற்றும் MIL-STD-810H ராணுவத் தரச் சான்றிதழும் இடம்பெறும்.
இது, பொதுவாக மோட்டோரோலாவின் உயர் ரக ஸ்மார்ட்போன்களில் காணப்படும் ஒரு அம்சம் ஆகும். இது, இந்த ஸ்மார்ட்போன்கள் அன்றாட ட்ராப்கள், கீறல்கள் மற்றும் கடினமான பயன்பாட்டிற்கு எதிராக மேம்பட்ட நீடித்துழைப்பை வழங்கும் என்பதை குறிக்கிறது. தற்போது ராணுவத் தர நீடித்துழைப்பு இல்லாத அதன் போட்டியாளர்களை விட, இது இந்த சீரிஸுக்கு ஒரு கூடுதல் நன்மையையும் அளிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
மேலும், மோட்டோ ஜி37 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ப்ளூ மற்றும் டர்க்கைஸ் கிரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும் என்பதையும் மோட்டோரோலா டீசர் உறுதிப்படுத்துகிறது. இந்த போன்கள் மோட்டோரோலாவின் வழக்கமான வடிவமைப்பு மொழியை தக்கவைத்துக் கொள்கின்றன. ரியர் பேனலுடன் தடையின்றி இணையும் ஒரு உயர்த்தப்பட்ட சதுர கேமரா மாட்யூலில், நான்கு தனித்தனி கேமரா ரிங்குகள் வைக்கப்பட்டுள்ளன, மேலும் நவீன தோற்றத்திற்காக ஒப்பீட்டளவில் தட்டையான எட்ஜ்களும் உள்ளன.
சில அறிக்கைகள் இந்த இரண்டில் மோட்டோ G37 பவர் மாடல் மட்டுமே 7,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்கின்றன. இது விரைவாக சார்ஜ் செய்வதற்கான 30W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். மேலும் ஒரு முழு சார்ஜ் 78 மணிநேரம் வரை பயன்பாட்டை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. மறுகையில் உள்ள மோட்டோ ஜி37 மாடல் 5200mAh பேட்டரியுடன் 20W டர்போபவர் சார்ஜிங் மற்றும் 6W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங் உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹலோ யுஐ
- 6.67-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 4ஜிபி LPDDR4X ரேம் + 128ஜிபி / 256ஜிபி ஸ்டோரேஜ்
- 50எம்பி ப்ரைமரி கேமரா
- 8எம்பி செல்பீ கேமரா
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், ஹை-ரெஸ் ஆடியோ
- ப்ளூடூத் 5.4, டூயல்-பேண்ட் வைஃபை, 3.5மிமீ ஹெட்போன் ஜாக்
- பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ஐபி64 நீர் மற்றும் தூசி எதிர்ப்புத்திறன்
மோட்டோ ஜி37 சீரிஸ் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பாவில் அறிமுகமாகின. அங்கே மோட்டோ ஜி37 பவர் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.31,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல மோட்டோ ஜி37 ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் சுமார் ரூ.27,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற விலைகளை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications