இந்தியா: 12நாட்கள் பேட்டரி பேக்கப் வசதியுடன் ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்.!
இந்தியாவில் தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களில் அதிநவீன ஸ்மார்ட் வாட்ச்கள் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளது, அதன்படி ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
குறிப்பாக இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது 1.2-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, பின்புகார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

12 ஸ்போர்ட்ஸ் மோட்டர்கள்
அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச்-ல் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது, இந்த வாட்ச் ஸ்டான்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரிஅதிகபட்சம் 12நாட்கள் பேட்டரி லைஃப் வழங்ககும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 இன்ச் டிவி ரூ10000: தீபாவளிக்கு அதிக தள்ளுபடி- தெறிக்கவிடும் சியோமி டிவி.!

இந்த புதிய ஸ்மார்ட் பல்வேறு நிறங்களில் கிடைக்கும்,பின்பு இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம். மேலும் இந்தியாவில் அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் 42.6எம்.எம் ஸ்மார்ட்வாட்ச் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதன்த்தின் பல்வேறு சிறப்பம்பசங்களைப் பார்ப்போம்.

அமேஸ் ஃபிட் ஜி.டி.ஆர் அம்சங்கள்
1.2-இன்ச் யஅழடநன டிஸ்பிளே (390x390 பிக்சல்)
ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ் 10.0 தளங்களுக்கான ஆதரவு
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஏஎப் கோட்டிங்
பயோ டிராக்கர் பிபிஜி பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார்
6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
ஏர் பிரெஷர் சென்சார்
கேபாசிட்டிவ் சென்சார்
ஆம்பியன்ட் லைட்
பிரைட்னஸ் சென்சார்
ப்ளூடூத் 5.0
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
195எம்ஏஎச் பேட்டரி

அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர் ஸ்மார்ட் வாட்ச்-ன் உண்மை விலை ரூ.9,999-ஆக உள்ளது, மேலும் கருப்பு, வெள்ளை, பிங்க் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications