Home
Gadgets

ஏன் தெரியாம கூட வாங்கிட கூடாது? ஏன் நம்பி வாங்கலாம்? Nothing Ear 2 விற்பனை ஆரம்பம்!

கடந்த வாரம் அறிமுகமான நத்திங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் இயர்பட்ஸான நத்திங் இயர் 2 (Nothing Ear 2) இந்திய விற்பனை இன்று முதல் (மார்ச் 28) தொடங்கியது. மேலோட்டமாக பார்ப்பதற்கு பழைய நத்திங் இயர் 1-ஐ போலவே இருக்கும் இந்த லேட்டஸ்ட் நத்திங் இயர்பட்ஸை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

நத்திங் இயர் 2-வை ஏன் நம்பி வாங்கலாம்? இந்த லேட்டஸ்ட் இயர்பட்ஸின் நிறைகளை பொறுத்தவரை இது காதுகளில் நன்றாக பொருந்தும்படியான மற்றும் மிகவும் நேர்த்தியான வடிவமைப்பை (Comfortable Fit and Good Design) பெற்றுள்ளது; கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற நல்ல சவுண்ட் குவாலிட்டியை (Good Sound Quality) வழங்குகிறது.

Nothing Ear (2) விற்பனை ஆரம்பம்.. வாங்கலாமா? வேண்டாமா?

மேலும் இது "நியாயமான" நாய்ஸ் கேன்சலேஷன் (Reasonable Noise Cancelling), சிறந்த காலிங் குவாலிட்டி (Good Calling Quality), போதுமான கண்ட்ரோல்ஸ் (Decent controls), லேட்டஸ்ட் ப்ளூடூத் 5.3 மற்றும் க்ராஸ்-பிளாட்ஃபார்ம் (Cross Platform) பயன்பாடு, ஐபி54 ரேட்டிங் போன்ற பல நிறைகளை கொண்டுள்ளது. இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டால் நத்திங் இயர் 2-வை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!

நத்திங் இயர் 2-வை ஏன் வாங்காமல் தவிர்க்கலாம்? முதல் மற்றும் முக்கிய காரணம் - இதன் விலை உண்மையிலேயே மிகவும் அதிகமாக இருக்குறது; ஒரு ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸிற்காக ரூ.10,000 செலவு செய்ய வேண்டுமா என்று கேட்டால்.. தேவையில்லை என்பதே எங்களின் பதிலாக இருக்கும். நினைவூட்டும் வண்ணம் நத்திங் இயர் 2-வின் விலை ரூ.9,999.

நத்திங் இயர் 2-வின் மற்ற குறைகளை பொறுத்தவரை, இதன் பேட்டரி லைஃப் இன்னும் கொஞ்சம் மேம்படுத்தப்பட்டு இருக்கலாம்; இதன் ஆட்டோமெட்டிக் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) சீரற்றதாக உள்ளது; நத்திங் எக்ஸ் ஆப் வழியாக வரையறுக்கப்பட்ட கஸ்டமைசேஷன் அம்சங்கள் மட்டுமே கிடைக்கிறது; கடைசியாக, இதன் கேஸ் பழைய நத்திங் இயர் 1-ஐ விட மோசமாக இருக்கிறது!

நத்திங் இயர் 2-வின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி நத்திங் இயர் 2-வின் இந்திய விலை ரூ.9,999. இது சிங்கிள் ஒயிட் கலர் ஆப்ஷனில் பிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) போன்ற இ-காமர்ஸ் சேனல்கள் மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக இன்று முதல் (மார்ச் 28, 12 மணி முதல்) வாங்க கிடைக்கிறது.

நத்திங் இயர் 2-வின் முக்கிய அம்சங்கள்: நத்திங்கின் இந்த புதிய இயர்பட்ஸ் ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ் (Hi-Res Audio certification) மற்றும் LHDC 5.0 தொழில்நுட்பத்துடன் வருகின்றன. 36 மணிநேர பிளேடைமை வழங்கும் இந்த இயர்பட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் (Fast Charging) ஆதரிக்கிறது.

நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி, நத்திங் இயர் 2 இயர்பட்ஸானது சிறந்த நாய்ஸ் கேன்சலேஷன் தொழில்நுட்பத்துடன் வருகிறது. மேலும் இது பயனர்கள் இருக்கும் சுற்றுச்சூழலை அடிப்படையாக கொண்டு, நாய்ஸ் கேன்சலேஷனின் அளவை தானாக சரிசெய்யக்கூடிய அடாப்டிவ் மோட் (Adaptive Mode) என்கிற அம்சத்தையும் கொண்டுள்ளது.

11.6 மிமீ டைனமிக் ட்ரைவர்களுடன் வரும் நத்திங் இயர் 2 மாடலானது அதிக ப்ரெக்வென்ஸிஸ் (High Frequencies) மற்றும் மேம்பட்ட பாஸை (Improved bass) வழங்குவதாகவும் நத்திங் குறிப்பிடுகிறது. இது டூயல் கனெக்டிவிட்டியையும் வழங்குகிறது. இந்த அம்சம் ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களுடன் இணைக்கவும், அவற்றுக்கிடையே தடையின்றி 'ஸ்விட்ச்' ஆகவும் உதவுகிறது.

கடைசியாக நத்திங் இயர் 2 இயர்பட்ஸானது ஐபி54 ரேட்டிங் உடன் வருகிறது. அதாவது இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான சான்றிதழை கொண்டுள்ளது. நத்திங் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, நத்திங் இயர் 2-வை தொடர்ந்து நத்திங் போன் 2-வும் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Good And Bad Things About Nothing Ear 2 TWS Earbuds As Its Open Sale Started in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X