இனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.!

இனிமேல் நமக்கு தேவையே படாத ஒருசில கேட்ஜெட்டுக்கள் இருக்கின்றது. அவை என்ன என்று பார்போம்

By Siva
|

டெக்னாலஜி உலகில் நாளுக்கு நாள் புதுப்புது வசதிகளுடன் கொண்ட ஸ்மார்ட்போன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. முன்பெல்லாம் ஒரு போனில் பல அம்சங்கள் இருக்காது. அதனால் தனியாக எப்.எம், ரேடியோ, மியூசிக் ப்ளேயர் என வாங்கி கொண்டிருந்ததை பார்த்திருப்பீர்கள்.

இனிமேல் நமக்கு தேவைப்படாத 7 முக்கியமான கேட்ஜெட்ஸ்.!

ஆனால் தற்போது யாரும் அவைகளை தனியாக வாங்குவதில்லை. ஏனெனில் இந்த அம்சங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட அனைத்து மாடல் ஸ்மார்ட்போனிலும் இருக்கின்றது. ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் நம் வீட்டில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களும் இருக்கும் நிலை தற்போது உள்ளது.

அதிரடி விலைக்குறைப்பில் லெனோவா இசெட்2 பிளஸ்.!

எனவே இனிமேல் நமக்கு தேவையே படாத ஒருசில கேட்ஜெட்டுக்கள் இருக்கின்றது. அவை என்ன என்று பார்போம்

பேசிக் மாடல் போன்கள்:

பேசிக் மாடல் போன்கள்:

தற்போது அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் ஒரு புதிய வார்த்தை 4G. இந்த 4G ஸ்மார்ட்போனில் வேகமாக இண்டர்நெட், வேகமான டவுன்லோடு, வீடியயோ ஸ்டீர்மிங் உள்பட பல வசதிகள் இருப்பதால் பலர் 4G மாடல் ஸ்மார்ட்போனுக்கு மாறி வருகின்றனர். எனவே இன்னும் ஒருசில ஆண்டுகளில் பேசிக் மாடல் போன்கள் யாருக்கும் தேவையில்லை என்ற நிலை வந்துவிடும் என்பதே உண்மை

MP3 மியூசிக் ப்ளேயர்ஸ்:

MP3 மியூசிக் ப்ளேயர்ஸ்:

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மெமரி கார்டு பயன்படுத்தி MP3 மியூசிக் ப்ளேயர்ஸ் மூலம் பாட்டு கேட்டு கொண்டே பயணம் செய்பவர்களை பார்த்து இருப்பீர்கள். அப்போது வந்த போனில் ஸ்டோரேஜ் அதிகம் இல்லாததே இதற்கு காரணம். MP3 மியூசிக் ப்ளேயரில் நூற்றுக்கணக்கான பாடல்களை பதிவு செய்யலாம் என்ற காரணத்தால் அதை தனியாக வாங்கி உபயோகித்தோம்.

ஆனால் தற்போது நிலைமை வேறு. 128 GB, 256 GB வரை மெமரி கார்ட் போடும் வசதியுள்ள ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துவிட்டதால் நூற்றுக்கணக்கில் என்ன ஆயிரக்கணக்கில் பாடல்களை பதிவு செய்யலாம். முழு திரைப்படங்கள் பலவற்றை டவுன்லோடு செய்யலாம். எனவே இனிமேல் வருங்காலத்தில் யாருக்கும் MP3 மியூசிக் ப்ளேயர்ஸ் தேவைப்படாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜிபிஎஸ் யூனிட்:

ஜிபிஎஸ் யூனிட்:

வழிகாட்டு ஜிபிஎஸ் யூனிட்டை பலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அனைத்து ஸ்மார்ட்போனிலும் தற்போது நேவிகேஷன் ஆப் இருப்பதால் இந்த ஜிபிஎஸ் யூனிட்டுக்கு அவசியம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. தனியாக ஜிபிஎஸ் கருவி வாங்காமலேயே நேவிகேஷன் மூலம் டிராபிக் தகவல்கள், வழிகள், மற்றும் பல விஷயங்களை நாம் இப்போது தெரிந்து கொள்கிறோம்

யூஎஸ்பி ஃபிளாஷ் டிரைவர்ஸ்

யூஎஸ்பி ஃபிளாஷ் டிரைவர்ஸ்

முக்கிய பைல்களை சேமித்து வைக்க, பாதுகாத்து வைக்க கடந்த சில ஆண்டுகளாக பலர் பயன்படுத்தி வருவது யூஎஸ்பி ஃபிளாஷ் டிரைவர்ஸ் என்பது தெரிந்ததே. குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு இது பெரும் உபயோகமாக இருந்தது.

ஒரு சிறிய சாதனத்திற்குள் தங்களுடைய அனைத்து டேட்டாக்களையும் ஸ்டோர் செய்து வைத்து கொள்வதோடு ஒருவருக்கொருவர் டேட்டாக்களை பகிர்ந்து கொள்வதற்கும் உபயோகமாக இருந்தது.

ஆனால் தற்போது கூகுள் டிரைவ், டிராப் பாக்ஸ் உள்பட பல ஆன்லைன் டிரைவ்கள் வந்துவிட்டதால் இந்த சாதனம் அவசியம் இல்லாமல் போய்விட்டது. மேலும் ஆன்லைன் மூலமே இந்த டிரைவ்ஸ் மூலம் டேட்டாக்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பது கூடுதல் வசதி

டிஜிட்டல் பாய்ண்ட் டு பாயிண்ட் கேமிராக்கள்:

டிஜிட்டல் பாய்ண்ட் டு பாயிண்ட் கேமிராக்கள்:

டிஜிட்டல் பாய்ண்ட் டு பாயிண்ட் கேமிராக்களை புரபொசனல் கேமிரான்கள் உள்பட பலர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது வெளிவரும் உயர்ந்த வகை ஸ்மார்ட்போன்களில் இதைவிட தெளிவாகவும் நவீன தரத்திலும் புகைப்படம் மற்றும் 4K வீடியோக்களை எடுத்து வருவதால் இந்த சாதனம் இனிமேல் தேவையில்லாத ஒரு சாதனமாக மாறிவிட்டது

டிவிடி பிளேயர்ஸ்:

டிவிடி பிளேயர்ஸ்:

கடந்த சில ஆண்டுகளாக நாம் பயன்படுத்தி வரும் மற்றொரு சாதனம் டிவிடி பிளேயர். ஆனால் இதற்கும் கூடிய விரைவில் மூடுவிழா நடைபெற உள்ளது. தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஸ்மார்ட் டிவியில் பலவகை ஆப்ஸ்களை பயன்படுத்தி நேரடியாக யூடியூபில் இருந்து ஹை ரெசலூசன் வீடியோக்களை தெள்ள தெளிவாக வேகமான இண்டர்நெட் மூலம் பார்க்கலாம்.

மேலும் ஒரு பென் டிரைவில் பல திரைப்படங்களை பதிவு செய்து அதை தொலைக்காட்சியில் இணைத்து பார்க்கும் வசதியும் தற்போது உண்டு. எனவே தற்போது குறைவான உபயோகத்தில் இருக்கும் இந்த டிவிடி பிளேயர்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் காணாமல் போய்விடும்

லேண்ட்லைன் போன்:

லேண்ட்லைன் போன்:

லேண்ட்லைன் போனின் உபயோகம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஒரு வீட்டில் எத்தனை நபர்கள் இருக்கின்றோமோ அத்தனை பேரிடத்திலும் மொபைல் போன் இருப்பதால் வீடுகளில் தற்போது லேண்ட்லைன் போனுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது.

ஆனாலும் லேண்ட்லைன் போன் முழுதாக மறைந்துவிட்டதாக கூற முடியாது. அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இன்னும் லேண்ட்லைன் போனின் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Useful gadgets such as feature phones, GPS units, USB flash drives, landline phones, DVD and Blu-ray players, landline phones, etc. have become almost obsolete. Read more...

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X