அதிரடி விலைக்குறைப்பில் லெனோவா இசெட்2 பிளஸ்.!
இரண்டு மாறுபாடுகளில் கிடைக்கும் லெனோவா இசெட்2 பிளஸ் கருவிகளுக்கு எவ்வளவு விலை குறைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன.?
சீன மொபைல் தயாரிப்பு நிறுவனமான லெனோவா இந்தியாவில் அதன் லெனோவா இசெட்2 பிளஸ் ஸ்மார்ட்போனில் விலைக்குறைப்பு நிகழ்த்தியுள்ளது. சமீபத்தில் தன ரூ.1,999/-க்கு லெனோவா பி2 ஸ்மார்ட்போன் கிடைக்கும் வண்ணம் ப்ளிப்கார்டில் அதிரடி எக்ஸ்சேன்ஜ் சலுகை ஒன்று அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாறுபாடுகளில் கிடைக்கும் லெனோவா இசெட்2 பிளஸ் கருவிகளுக்கு எவ்வளவு விலை குறைப்புஏற்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இக்கருவிகள் அம்சங்கள் என்னென்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.!

விலைக்குறைப்பு
ரூ.17,999/-க்கு அறிமுகமான லெனோவா இசெட்2 பிளஸ் (32 ஜிபி மாடல்) கருவி ரூ.3,000/- விலைக்குறைப்பிற்கு உளளக்கப்பட்டு தற்போது ரூ.14,999/-க்கு கிடக்கிறது. மறுபக்கம் ரூ.19,999/-க்கு அறிமுகமான லெனோவா ஈஸ்ட்2 பிளஸ் (64ஜிபி மாடல்) ரூ.2,500/- விலைக்குறைப்பிற்கு உள்ளாக்கப்பட்டு இப்போது ரூ.17,499/-க்கு கிடைக்கிறது.

பிரத்தியேகமாக
லெனோவா இசெட்2 பிளஸ் ஸ்மார்ட்போனின் கருப்பு மற்றும் வெள்ளை நிற மாறுபாடுகள் அமேசான் இந்தியா ஃப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கின்றது. கடந்த திங்கள் அன்று நிகழ்த்த விற்பனையுடன் லெனோவா இசெட்2 பிளஸ் கருவி அமேசான் பிரத்தியேகமாக கிடைக்கப்பெறவில்லை.

டிஸ்ப்ளே
நினைவுகோரும் வண்ணம் லெனோவா இசெட்2 பிளஸ் கருவி கடந்த 2016, செப்டம்பர் மாதம் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இக்கருவியின் அம்சங்களை பொருத்தமட்டில் இரட்டை சிம் (4ஜி + 3ஜி) ஆதரவு, ஒரு 5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்), 441பிபிஐ பிக்சல் அடர்த்தி கொண்ட டிஸ்ப்ளே, மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 820 செயலி மூலம் இயக்கப்படுகிறது.

சேமிப்பு
மேலே குறிப்பிட்டுள்ளது போல லெனோவா இசெட்2 பிளஸ் கருவி 32ஜிபி + 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி + 4ஜிபி ரேம் ஆகிய இரண்டு சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும். கேமிரா துறையை பொருத்தமட்டில் பிடிஏஎப் (PDAF), எல்இடி ப்ளாஷ் மற்றும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 3 மெகாபிக்சல் பின்புற கேமிரா மற்றும் 8 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா கொண்டுள்ளது.

பேட்டரி
3500 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டுள்ள லெனோவா இசெட்2 பிளஸ் கருவியானது ஒரு அறிவார்ந்த சார்ஜ் கட்-ஆப் அம்சமும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொருத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், மற்றும் 4ஜி ஆகியவைகள் அடங்கும்.

ஆண்ட்ராய்டு
ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ கொண்டு இயங்கும் இக்கருவி முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாக படிகள், தூரம், உடல் இயக்கம் மற்றும் பிற உடல் நடவடிக்கைகள் தரவு மூலம் கண்காணிக்கும் யூ- ஹெல்த் ஆப் திகழ்கிறது. உடன் ஸ்மார்ட்போன் ஹோம் பட்டனில் யூ டச் 2.0 கைரேகை சென்சார் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
ரூ.13,000/-க்கு 4000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்டீல் 2.!


Click it and Unblock the Notifications