Just In
- 10 hrs ago
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- 11 hrs ago
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- 11 hrs ago
அடி தூள்: சோனி கேமரா சென்சார் வசதியுடன் களமிறங்கும் 2 புதிய விவோ போன்கள்.!
- 12 hrs ago
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
Don't Miss
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Movies
கமல் கொடுத்த மெகா ஆஃபர்... கண்டுகொள்ளாத விஜய்... வருத்தத்தில் லோகேஷ் கனகராஜ்?
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வித்தியாசமான Dyson Zone: உலகத்திலேயே இது மாதிரி வேற 1 இல்ல.! ஒரே ஹெட்போன்ல 2 ஸ்பெஷாலிட்டி.!
இப்படி ஒரு ஹெட்போன்ஸ் (Headphones) + ஏர் பியூரிபையர் (Air purifier) இணைந்து செயல்படும் அட்வான்ஸ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஒரு ஹெட்போன்ஸ் சாதனத்தை நீங்கள் இதற்கு முன் எங்கும் பார்த்திருக்க முடியாது. டைசன் (Dyson) நிறுவனம் தனது முதல் ஏர் பியூரிபையர் உடன் இயங்கும் ஹெட்ஃபோன்ஸ் மாடலை அறிவித்துள்ளது. இதை நிறுவனம் டைசன் ஜோன் ஹெட்போன்ஸ் (Dyson Zone headphones) என்று அழைக்கிறது.

உலகத்திலேயே மிகவும் வித்தியாசமான Dyson Zone ஹெட்போன்ஸ்.!
இந்த Dyson Zone ஹெட்போன்ஸ் ஒரு ஆடியோ சாதனம் மட்டுமல்லாமல், தீங்கு விளைவிக்கும் தூசி துகள்களையும் பில்டர் செய்து உங்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட காற்றை சுவாசிக்க வழங்கும் ஏர் பியூரிபையராகவும் (Air purifier) செயல்படுகிறது.
சுருக்கமாக சொன்னால், Dyson Zone ஹெட்ஃபோன்கள் அதனுடன் இணைக்கப்பட்ட ஏர் பில்டர்களுடன் (Air filter) வருகின்றன. இது ஒரு வித்தியாசமான வடிவமைப்பு.!

எந்தவொரு பிராண்டும் மேற்கொள்ளாத பியூச்சர்ஸ்டிக் டிசைன்
எந்தவொரு ஆடியோ பிராண்டிலும் இதுபோன்ற தயாரிப்பை முயற்சிக்காததால், இந்த சாதனம் தொழில்நுட்ப துறையில் முதன்மையானதாகத் திகழ்கிறது.
ஏர் பில்டர் உடன் கூடிய இந்த ஹெட்ஃபோன்கள் வாங்குவதற்கு எப்போது கிடைக்கும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களை Dyson இப்போது வெளிப்படுத்தியுள்ளது.
இதன் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றி விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Dyson Zone ஹெட்போன்ஸ் எப்போது? எங்கெல்லாம் வாங்க கிடைக்கும்?
இந்த Dyson Zone ஹெட்போன்ஸ் சாதனம் ஜனவரி முதல் சீனாவிலும், மார்ச் மாதம் முதல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஹாங்காங் SAR மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் முதற்கட்டமாகக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இது இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்ற தகவல் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், இதற்கு முன் வெளியான தகவலின் படி, இது இந்தியாவிலும் களமிறக்கப்படும்.

பூமியில் உள்ள இரண்டு மாசுபாடுகளையும் உங்களிடம் அண்டாமல் தடுக்கிறது.!
Dyson Zone ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation) மற்றும் ஏர் பியூரிஃபையர் அம்சத்துடன் வருகிறது. இது குறிப்பாக நகர்ப்புற நாய்ஸ் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாட்டின் இரட்டை சவால்களை சமாளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தில் 11 மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டிருப்பதாக நிறுவனம் வெளிப்படுத்துகிறது. ANC அமைப்பு, நகரின் ஒலியை 38 dB வரை குறைக்க, எட்டு அமைப்பு பயன்படுத்துகிறது.

டெல்லி போன்ற மாசுபட்ட நகரங்களில் இதன் தேவை அதிகமாகிறது.!
இந்த மைக்ரோபோன்கள் உங்களை சுற்றியுள்ள ஒலிகளை ஒரு நொடிக்கு 384,000 முறை கண்காணிக்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஹெட்ஃபோன்களைப் பற்றிய சிறந்த அம்சம் இதில் இருக்கும் ஏர் பில்டர்கள் தான் - இது எல்லா வகையான சூழ்நிலைகளிலும் சிறப்பாக வேலை செய்கிறது மற்றும் பயணத்தின்போது உங்களைப் பாதுகாக்கிறது;
டெல்லி போன்ற மாசுபட்ட நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு, இந்த ஏர் பில்டர் ஹெட்போன்ஸ் மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

இந்த ஹெட்போன்ஸ் எப்படி காற்றை இழுத்து சுத்திகரிக்கிறது?
ஒவ்வொரு இயர்கப்பிலும் உள்ள கம்ப்ரசர்கள் இரட்டை அடுக்கு பில்டர் மூலம் காற்றை இழுத்து, சுத்திகரிக்கப்பட்ட காற்றின் இரண்டு ஸ்ட்ரீம்களை அணிந்தவரின் மூக்கு மற்றும் வாய்க்கு நேராக இருக்கும் பேன் மூலம் வழங்குகிறது.
இது தொடர்பில்லாத துண்டிக்கக்கூடிய வைசர் வழியாக அனுப்பப்படுகிறது. எலெக்ட்ரோஸ்டேடிக் வடிகட்டிகள் 99% துகள் மாசுபாட்டை 0.1 மைக்ரான் 2 வரை கைப்பற்றுகின்றன.
பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

பரவலான அமில வாயுக்களை குறிவைக்கின்றன.!
அதே நேரத்தில் K-கார்பன், பொட்டாசியம்-செறிவூட்டப்பட்ட கார்பன் பில்டர்கள் NO2 மற்றும் SO2 உட்பட நகர மாசுபாட்டுடன் தொடர்புடைய பரவலான அமில வாயுக்களை குறிவைக்கின்றன என்று டைசன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இத்தனை ஆடம்பரமான அம்சங்களும் சாதனத்தின் பேட்டரி ஆயுளைப் பாதிக்குமா என்று இப்போது நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், உங்கள் கேள்வி நியாயமானது தான்.

50 மணி நேர பேட்டரி ஆயுளா? அடேங்கப்பா.!
இந்த Dyson Zone headphone சாதனம் USB-C சார்ஜிங் ஆதரவுடன் மேம்பட்ட லித்தியம்-அயன் பேட்டரிகளால் இயக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
இந்த ஹெட்ஃபோன்கள் 50 மணிநேர ஆடியோ மட்டும் இயங்கும் நேரத்தை வழங்குகின்றன. ஏர் பில்டர் உடன் பயன்படுத்தும் போது இது 4 மணிநேர ரன்-டைம் ஐ வழங்குகிறது.
இது முழுமையாக 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது.

Dyson Zone ஹெட்போன்ஸ் விலை என்ன?
Dyson Zone ஹெட் போன்ஸ் விலை பற்றி பார்க்கையில், இது £749 (அமெரிக்காவில் $949) என்ற விலையில் ஜனவரி 2023 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் என்றும் Dyson இப்போது வெளிப்படுத்தியுள்ளது.
Dyson Zone US, UK, Ireland, Hong Kong மற்றும் மார்ச் 2023 இல் சிங்கப்பூர் போன்ற இடங்களில் விற்பனை வாங்கக் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது.
Dyson நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பல சாதனங்களை அறிமுகம் செய்துள்ளதால், இதுவும் இந்தியாவிற்குக் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470