பூமியின் மிக பெரிய மிதக்கும் நகரம்.! 60000 பேர் தங்க கூடிய பிரமாண்டமான ஆமை வடிவ கப்பல்.!

|

Turtle Shaped Floating City Pangeos Yacht: மனிதனுடைய மூளை எல்லோருக்கும் ஒரே மாதிரியாக தான் இருக்கிறது. அதாவது, ஏறக்குறைய பூமியில் உயிர் வாழும் அணைத்து மனிதர்களுக்கும் மூளையின் எடை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. இதில் ஆண்களின் மூளை 1336 கிராம் என்ற எடையிலும், பெண்களின் மூளை 1198 என்ற எடையுடனும் இயங்குகிறது. இந்த மூளையை எவ்வளவு சிறப்பாக பயன்படுத்துகிறோம் என்பது அவர்-அவர் திறமை மற்றும் கற்பனையைப் பொறுத்தது.

மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமிக்கத்தக்க படைப்புகள்.!

மனிதனால் உருவாக்கப்பட்ட பிரமிக்கத்தக்க படைப்புகள்.!

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் முதல், முக்கு கடை அண்ணாச்சி வரை எல்லோருக்கும் ஒரே அளவிலான மூளை தான் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதைத் திறம்பட எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது அவரவர் விருப்பமே.! மனிதன் முதன்முதலில் நெருப்பை உருவாக்கியதில் இருந்து, இன்று வரை பல-பல புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டே தான் இருக்கிறான். அதில் சில கண்டுபிடிப்புகள் உண்மையிலேயே பிரமிக்கத்தக்கவை.!

தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் விதிமுறைகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மிதக்கும் நகரம்.!

தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் விதிமுறைகளால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மிதக்கும் நகரம்.!

இப்படி பூமியில் இது வரை பல பிரமிக்கத்தக்கப் படைப்புக்களை மனிதன் உருவாக்கி இருந்தாலும், இதுவரை இல்லாத அளவில் ஒரு வியக்கத்தக்க மற்றும் பிரமிக்கத்தக்கப் படைப்பை இப்போது மனிதன் உருவாக்கி இருக்கிறான். ஆம், பூமியில் இதுவரை இல்லாத வகையில், ஏராளமான தொழில்நுட்பங்கள் மற்றும் அறிவியல் விதிமுறைகளை ஒன்றிணைத்து ஒரு பிரமாண்ட படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அது தான் பூமியின் முதல் இராட்சச 'மிதக்கும்' நகரம்.

4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!

60,000 நபர்கள் ஒன்றாகத் தங்கக்கூடிய மிதக்கும் Pangeos கப்பல்.! இது கப்பலா இல்லை நகரமா?

60,000 நபர்கள் ஒன்றாகத் தங்கக்கூடிய மிதக்கும் Pangeos கப்பல்.! இது கப்பலா இல்லை நகரமா?

ஆம், சரியாக தான் படித்தீர்கள், பூமியின் முதல் மிதக்கும் இராட்சச நகரமாக 60,000 நபர்கள் ஒன்றாகத் தங்கக்கூடிய வசதியுடன் ஒரு புதிய பிரமாண்டமான படகை இப்போது உருவாக்கியுள்ளனர். இந்த படகின் மூலம், சவூதி அரேபியா விரைவில் பாங்கியோஸ் (Pangeos) என்ற மாபெரும் ஆமை வடிவ மிதக்கும் நகரத்தின் தாயகமாக மாறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் மாபெரும் கப்பலாக இது மாறப்போகிறது.

உலகின் மிகப்பெரிய டெராயாச்ட் (Terayatch) திட்டம்.!

உலகின் மிகப்பெரிய டெராயாச்ட் (Terayatch) திட்டம்.!

200 மில்லியனிலிருந்து 335 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாங்கியா என்ற சூப்பர் கண்டத்தின் பெயரால் இந்த ஆமை வடிவ மிதக்கும் நகரம் பாங்கியோஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. டெராயாச்ட் (Terayatch) என்ற இந்த திட்டத்தின் மூலம் சுமார் 60,000 பேர் வரை இந்த மிதக்கும் படகில் தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய, ஒரு குட்டி நகரத்தின் மக்கள் தொகையை இதனுள் அடக்கிவிடலாம்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

பூமியில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பு

பூமியில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பு

இந்த ஆமை வடிவ இராட்சச மிதக்கும் நகரம் தற்போது கட்டுமானத்தில் உள்ளது. மேலும், இதன் கட்டுமானம் முடிவடைந்தவுடன், பூமியில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட மிகப்பெரிய மிதக்கும் கட்டமைப்பாக இந்த டெராயாச்ட் மாறும் என்று அரேபியன் பிசினஸ் தெரிவித்துள்ளது. இந்த மிதக்கும் நகரத்தைச் செலவு செய்து உருவாக்கி வருவது சவூதி அரேபியா என்றாலும், இதை வடிவமைத்தது வேற நாடாகும்.

இந்த Pangeos மிதக்கும் நகரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

இந்த Pangeos மிதக்கும் நகரத்தின் அளவு எவ்வளவு தெரியுமா?

இந்த ஆடம்பர திட்டத்தை இத்தாலிய வடிவமைப்பு ஸ்டுடியோ லாஸரினி வடிவமைத்து உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிதக்கும் நகரத்தின் நீளம் சுமார் 1,800 அடியாக இருக்கிறது என்று Lazzariniஅறிக்கை தெரிவித்துள்ளது. Pangeos அதன் அகலமான இடத்தில் - அதாவது அதன் இறக்கைகள் விரிந்து இருக்கும் நேரத்தில், 2,000 அடி அளவிடும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?

என்னங்க சொல்றீங்க.! இதில் சொகுசு வீடு.. அபார்ட்மெண்ட்லாம் இருக்கா?

என்னங்க சொல்றீங்க.! இதில் சொகுசு வீடு.. அபார்ட்மெண்ட்லாம் இருக்கா?

மேலும், இந்த மிதக்கும் ராட்சச படகில் ஒவ்வொரு ஆமை இறக்கையிலும் 19 வில்லாக்கள் மற்றும் 64 அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் என்று செய்தி அறிக்கை கூறியது. ஆம், 19 ஆடம்பர தனி சொகுசு வீடுகள் இடம்பெற்றுள்ளது. இது தவிர, பாங்கியோஸின் அம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இது ரூப் டாப் கார்டன், ஷாப்பிங் மால், தியேட்டர், விளையாட்டு மைதானம் மற்றும் பீச் கிளப் போன்றவற்றைக் கொண்டுள்ளது.

'டெராஷிப்யார்ட்' என்றால் என்ன தெரியுமா? இப்படி ஒரு விஷயத்தை பூமியில யாருமே செய்யலை.!

'டெராஷிப்யார்ட்' என்றால் என்ன தெரியுமா? இப்படி ஒரு விஷயத்தை பூமியில யாருமே செய்யலை.!

இந்த ஆமை வடிவ மிதக்கும் நகரத்தின் தனித்துவமான கட்டமைப்பு என்று ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், இதில் உள்ள 'டெராஷிப்யார்ட்' ஐ நாம் கட்டாயம் கவனிக்க வேண்டும். இந்த டெராஷிப்யார்ட் 650 மீட்டர் அகலமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட உள்கட்டமைப்பைக் கொண்டிருக்கும் நேரடி வழியாகக் கடலுடன் இணைகிறது. இது, இந்த கப்பலில் இருந்து நேரடியாகக் கடலுக்கு அணுக அனுமதிக்கும் அணுகலை வழங்குகிறது.

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

கப்பலில் ஓட்டை விழுந்தா என்னாகும்? இங்கே கப்பலுக்குள் கால்வாய்யே வச்சுருக்காங்க எப்படி?

கப்பலில் ஓட்டை விழுந்தா என்னாகும்? இங்கே கப்பலுக்குள் கால்வாய்யே வச்சுருக்காங்க எப்படி?

ஆம், நேரடியாக கடலில் இருந்து வரும் சிறிய படகுகள் மூலம், இந்த வழியாக பாங்கியோஸின் மையத்தை மக்கள் அணுகலாம் என்பது மிகவும் சிறப்பான விஷயமாகும். பொதுவாகக் கப்பலில் ஒரு சிறிய ஓட்டை விழுந்தாலே, அந்த கப்பல் முழுமையாக நீரிற்குள் மூழ்கிவிடும். ஆனால், பாங்கியோஸின் திறமையான வடிவமைப்பின் மூலம், கடலுடன் நேரடியாக இணைக்கும் ஒரு பெரிய கால்வாயை கப்பலுக்குள் உருவாக்கியுள்ளனர்.

என்ன? இந்த மிதக்கும் நகரம் உலகம் முழுவதும் இடைவிடாமல் பயணம் செய்ய போகுதா?

என்ன? இந்த மிதக்கும் நகரம் உலகம் முழுவதும் இடைவிடாமல் பயணம் செய்ய போகுதா?

இந்த Pangeos மிதக்கும் நகரம், உலகம் முழுவதும் இடைவிடாமல் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு பெரிய மிதக்கும் நகரத்தை இயற்கை ஆற்றல் மூலம் இயக்கும் படி நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இது மெய்நிகர் முடிவற்ற பசுமை ஆற்றல் விநியோகங்களுடன் பொருத்தப்பட்டிருக்கிறதாம்.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

இந்த கப்பலுக்கு பெட்ரோல், டீசல்லாம் தேவையில்லை.! அலை அடிச்சா போதும்.!

இந்த கப்பலுக்கு பெட்ரோல், டீசல்லாம் தேவையில்லை.! அலை அடிச்சா போதும்.!

குறிப்பாக இதன் என்ஜின் கடல் அலைகள் மூலம் ஆற்றலைப் பெற்று, அதை சக்தியாக மாற்றி, இந்த ராட்சச உருவத்தை நகர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன், இந்த படகு முழுமையாக சோலார் பேனல்களால் மூடப்பட்டுள்ளது என்பதனால், சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியையும் திறம்படப் பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலின் கூரையில் இருந்து சோலார் சக்தியை இது ஈர்க்கும்.

கப்பலுக்குள் கார் ஓட்டலாமா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைக்கும் பிரமாண்ட படைப்பு.!

கப்பலுக்குள் கார் ஓட்டலாமா? டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைக்கும் பிரமாண்ட படைப்பு.!

இந்த இயற்கை சக்தியைக் கொண்டு, இந்த ராட்சத ஆமை வடிவ படகு அதிகபட்சமாக 5 நாட்ஸ் (5.7 mph/9.2 kph) வேகத்தில் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிதக்கும் நகரத்தில் எல்லா விதமான வசதிகளும் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மாபெரும் படகின் ஒவ்வொரு மூலைக்கும் பயணிக்க இதில் கார்ட் கார் வசதியும் அடக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

எப்போ இந்த மிதக்கும் நகரம் பயன்பாட்டிற்கு ரெடியாகும்?

எப்போ இந்த மிதக்கும் நகரம் பயன்பாட்டிற்கு ரெடியாகும்?

மிதக்கும் ஒரு ராட்சச கப்பலிற்குள் கார் ஓட்டும் அனுபவம் எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். இந்த மிதக்கும் நகரத்தின் டிசைனிங் நிறுவனத்தால் உட்புறங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை, என்பதனால், இன்டோர் அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த மிதக்கும் நகரம் 8 வருடத்தில் பூமியில் வளம் வரத் தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இதை உருவாக்க $8 பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று Lazzarini கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
World's Biggest Turtle Shaped Floating City Super Terayacht Titled Pangeos Can Accommodate 60000 Person

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X