Home
Gadgets

நிறுவனத்தின் முதல் லைட்-வெயிட் டிசைன் ஹெட்செட், அதுவும் வெறும் ரூ.299/-க்கு.!

ஹெட்செட்டை பொறுத்தவரை, மிகவும் அழகான அடிப்படை வடிவமைப்பு மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் ஆகியவற்றை கொண்டுள்ளது.

By Muthuraj

இந்திய மொபைல் சந்தையில் மலிவு விலை பீச்சர் மொபைல்களை அறிமுகம் செய்ததின் வழியாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட டிடெல் (Detel) நிறுவனம், இன்று இந்தியாவில் அதன் முதல் ஹெட்செட்டை விற்பனைக்கு அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் முதல் லைட்-வெயிட் டிசைன் ஹெட்செட்; வெறும் ரூ.299/-க்கு.!

டிடெல் டி1 இயர்போன்ஸ் என்கிற பெயரின் கீழ் வெளியாகும் இந்த் ஹெட்போன்களின் விலை வெறும் ரூ.299/-மட்டுமே என்பதும், இது B2BAdda.com என்கிற வலைதளத்ஜில் பிரத்யேகமாக வாங்குவதற்கு கிடைக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே தளத்தில் தான் டிடெல் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

ஹெட்செட்டை பொறுத்தவரை, மிகவும் அழகான அடிப்படை வடிவமைப்பு மற்றும் ஒரு உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஹெட்செட்டில் அழைப்புகளை கட்டுப்படுத்தும், பாடல்களை பாஸ் மற்றும் பிளே செய்யவும் மற்றும் பாடல்களை மாற்ற உதவும், ஒரு பட்டனும் உள்ளது.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)

நிறுவனத்தின்படி, இந்த ஹெட்செட் ஆனது எக்ஸ்டரா பேஸ் மற்றும் ட்ரெபில் உடன், சிக்கல்களை குறைக்க உதவும்படியான ஒரு லைட் வெயிட் கேபிள் வடிவமைப்பையும் கொண்டுள்ளது. டிடெல் டி1 இயர்போன்ஸ் ஆனது 1.2 மீட்டர் நீளம் கொண்டிருக்கும் மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக்கிற்குபொருத்தமானதாக இருக்கும். உடன் இந்த பிராண்ட் இயர்போன்ஸ் மீது ஒரு ஆண்டு கால உத்தரவாதமும் கிடைக்கும்.

நிறுவனத்தின் முதல் லைட்-வெயிட் டிசைன் ஹெட்செட்; வெறும் ரூ.299/-க்கு.!

முன்னதாக, டிடெல் நிறுவனம் பல பீச்சர் போன்களை வெளியிட்டதும், அவைகளின் மிகப்பெரிய சிறப்பம்சங்களாக, டூயல் சிம் செயல்பாடு, நாட்டில் உள்ள பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் SOS அம்சம் ஆகியவைகளை கூறலாம்.

Best Mobiles in India

English summary
After Affordable Feature Phones, Detel Launches Detel D1 Earphones at Rs 299. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X