Home
Mobile

பெண்கள் பாதுகாப்பை வெறும் ரூ.649/-ல் உறுதி செய்த இந்திய நிறுவனம்; அதெப்படி?

. இந்த புதிய மடல்கள், டிஜிட்டல் கேமராவைக் கொண்டு வெளியாகும் டிடெல் பிராண்டின் முதல் பீச்சர் போன்கள் ஆகும்.

By Muthuraj

டிடெல் நிறுவனம், இந்திய சந்தையில் நான்கு புதிய பீச்சர் போன்களை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. டி1 பூம், டி4 ப்ரைம், டி120 மற்றும் டி500 என்கிற பெயரின்கீழ் வெளியாகியுள்ள இந்த போன்களின் 'பேனிக் பட்டன்' இடம்பெற்றிப்பது சிறப்பம்சம்.

பெண்களின் பாதுகாப்பைப் பற்றிய இந்திய அரசாங்கத்தின் விதிகளை மனதில் வைத்து இந்த பீச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளதாக டிடெல் நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய மடல்கள், டிஜிட்டல் கேமராவைக் கொண்டு வெளியாகும் டிடெல் பிராண்டின் முதல் பீச்சர் போன்கள் ஆகும்.

ரூ.599 முதல் ரூ.649/- வரை.!

ரூ.599 முதல் ரூ.649/- வரை.!

டி1 பூம் மற்றும் டி4 ப்ரைம் ஆனது முரளியே ரூ.599/- மற்றும் ரூ.699/- என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. மறுகையில் உள்ள டி120 மற்றும் டி500 ஆகிய இரண்டுமே ரூ.649/-க்கு அறிமுகமாகியுள்ளது. இந்த நான்கு போன்களுமே B2BAdda.com-ல் பிரத்தியேகமாக வாங்குவதற்கு கிடைக்கின்றன

பேனிக் பட்டன் - ஏன்? எதற்கு?

பேனிக் பட்டன் - ஏன்? எதற்கு?

கூறப்படும் பேனிக் பட்டன் ஆனது கீபேடில் உள்ள எண் 5-ல் உட்பொதிக்கப்ட்டுள்ளது. ஒரு பயனர் அதை அழுத்தும் பட்சத்தில், 112 என்கிற எமர்ஜென்சி நம்பருக்கு அழைப்பு மேற்கொள்ளப்படும். இதைத் தொடர்ந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு ஐந்து எஸ்எம்எஸ்கள் அனுப்பப்படும். உடன் பயனரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மூன்று முதல் ஐந்து எஸ்எம்எஸ்கள் வரை அனுப்பப்படும்.

நேர்மையான அம்சங்கள்

நேர்மையான அம்சங்கள்

அம்சங்களை பொறுத்தவரை, டி1 பூம் ஆனது ஒரு பெரிய ஸ்பீக்கர் கொண்டுள்ளது. அறிமுகமான நான்கு பீச்சர் போன்களுமே 1.8 அங்குல டிஸ்பிளே மற்றும் டூயல் சிம் கார்டு ஆதரவை கொண்டுள்ளது. உடன் அனைத்துமே டிஜிட்டல் கேமரா, வீடியோ ரெக்கார்டர், ஆடியோ / வீடியோ பிளேயர்கள், 16ஜிபி வரை நீட்டிக்கும் மெமரி கார்டு ஸ்லாட், கால் பிளாக்லிஸ்ட்,எஸ்ஓஎஸ்( போன்களுக்கான யூஎஸ்பி), வயர்லெஸ் எஃப்எம் மற்றும் ஒரு டார்ச் ஆகியவைகளை கொண்டுள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
பேட்டரித்திறன்.!

பேட்டரித்திறன்.!

மேலும் இந்த நான்கு பீச்சர் போன்களுக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதம் கிடைக்கிறது. டி1 பூம் மற்றும் டி4 ப்ரைம் ஆனது முரளியே 1600எம்ஏஎச் மற்றும் 650எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க, மறுகையில் உள்ள டிடெல் டி120 மற்றும் டி500 ஆகிய இரண்டுமே 1050எம்ஏஎச் பேட்டரி சக்தியூட்டப்படுகின்றது. ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, கன்னடம், தெலுங்கு, பெங்காலி மற்றும் இன்னும் பல பிராந்திய மொழிகளுக்கான ஆதரவு கொண்டுள்ள இந்த பீச்சர் போன்கள் பல்வேறு வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Detel Launches Four Feature Phones With Panic Button in India Under Rs 700. Read more about this in Tamil GizBo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X