8 வழிகளில் உலகையே மாற்றி அமைக்கும் வெர்ட்சுவல் ரியாலிட்டி

By Siva
|

வெர்ட்சுவல் ரியாலிட்டி என்பது கற்பனையை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு சாப்ட்வேர். இதன் மூலம் நாம் நினைத்தவற்றையும் கற்பனைக்கு அடங்காத பல விஷயங்களையும் நாம் கண்ணால் பார்க்கலாம்.

சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது!

இந்த பரபரப்பான உலகில் இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி எந்த அளவு நம் இயல்பு வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது என்பதை பார்ப்போம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெர்ட்சுவல் ரியாலிட்டி 1:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 1:

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மாணவர்கள் ஒரு பாடத்தை படிக்கும்போது வெறும் உரைநடையை நம்பியே இருக்க வேண்டும். எங்காவது ஒருசில படங்கள் இருக்கும்,. ஆனால் இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி மூலம் நாம் படிக்கும் பாடங்களை நம் கண் முன்னால் பார்க்கலாம்,. உதாரணமாக ஹரப்பா நாகரீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் இதன் மூலம் அந்த நாகரீகத்தை விஷூவலாக பார்க்க முடியும். இதனால் பாடங்கள் மாணவர்களின் மனதில் ஆழப் பதிவது மட்டுமின்றி படிப்பிலும் ஒரு ஆர்வம் இருக்கும். சோர்வு நெருங்காது.

வெர்ட்சுவல் ரியாலிட்டி 2:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 2:

மருத்துவ துறையில் வெர்ட்சுவல் ரியாலிட்டி மிகவும் இன்றியமையாத ஒன்றாகி விட்டது. ஒரு சர்ஜரியை நிஜமாக செய்யும் முன்னர் அந்த சர்ஜரி எப்படி செய்யப்பட்டது, இக்கட்டான நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை வெர்ட்சுவல் ரியாலிட்டி மூலம் தெரிந்து கொள்ளலாம். பல் மருத்துவ மாணவர்களுக்கு ' Hap Tel' என்ற டெக்னாலஜி உள்ள வெர்ட்சுவல் ரியாலிட்டி பயன்படுத்தினால் மிகுந்த பலன் கிடைக்கும்,. இதில் பல் வரிசைகள் முப்பரிமாண முறையில் தெரிவதால் எளிதில் மருத்துவ மாணவர்களுக்கு விளங்கும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெர்ட்சுவல் ரியாலிட்டி 3:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 3:

மாற்றுத் திறனாளிகள் குறிப்பாக வீல்சேரில் உட்கார்ந்து உலகையே தொலைத்தவர்களுக்கு வெர்ட்சுவல் ரியாலிட்டி ஒரு வரப்பிரசாதம். உட்கார்ந்த இடத்தில் இருந்தே அவர்கள் உலகின் பல இடங்களை நேரில் பார்ப்பது போன் வெர்ட்சுவல் ரியாலிட்டி மூலம் பார்த்து மகிழலாம். அதேபோல் வயதானவர்களையும் இது மகிழ்ச்சி அடைய வைக்கும்., மேலும் உட்கார்ந்து கொண்டே உங்களால் பேஸ்கட் பால், கிரிக்கெட் போன்ற விளையாட்டை நீங்களே விளையாடுவது போன்ற ரசித்து மகிழலாம்,

வெர்ட்சுவல் ரியாலிட்டி 4:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 4:

பயணம் செய்யும்போது போரடிக்காமல் நம்மை காப்பதில் வெர்ட்சுவல் ரியாலிட்டிக்கு பெரும் பங்கு உண்டு. மேலும் ஒரு HR மேனேஜர் தனது பணியை திறம்பட செய்ய இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி பெரிதும் உதவுகிறது. ஒரு விண்ணப்பதாரரின் பழக்க வழக்கங்கள், பாடி லாங்வேஜ் ஆகியவற்றை இதன்மூலம் எளிதில் அறிந்து கொள்ளலாம். நீங்கள் நேரில் கலந்து கொள்ளாமலே போர்ட் மீட்டிங்கில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்., வியாபாரத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஒரு வாடிக்கையாளர் என்னென்ன வகையில் டிசைனில் உடை உள்பட பலவிதமான பொருட்களை தேர்வு செய்கிறார் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெர்ட்சுவல் ரியாலிட்டி 5:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 5:

திரைப்படங்களை புதிய அனுபவத்தில் பார்க்கவும் வெர்ட்சுவல் ரியாலிட்டி பெரிதும் உதவுகிறது. ஒரு ஆக்சன் படத்தின் வரும் கார் மோதல் காட்சிகள் மற்றும் வெடி விபத்து காட்சிகள் ஆகியவற்றை நேரில் பார்த்தது போன்ற உணர்வை ஏற்படுத்த இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி பெரிதும் உதவுகின்றன., அதேபோல் ஆக்சன் கேம்ஸ்கள் விளையாடும்போதும் நமக்கு ரியாலிட்டி உணர்வுகள் கிடைக்கும்

வெர்ட்சுவல் ரியாலிட்டி 6:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 6:

கட்டிட கலைஞர்களின் உற்ற நண்பன் இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி என்று கூறினால் அது மிகையாகாது. பெரிய பெரிய பாலங்கள், மாற்றி அமைக்க வேண்டிய நகரங்கள் ஆகியவற்றுக்கு முன் இதன் மூலம் நீங்கள் பல விஷயங்களை கற்று கொள்ளலாம். ஒரு பில்டிங் கட்டுவதற்கு முன்னர் இதில் என்னென்ன தவறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை முன்னரே அறிந்து அந்த தவறுகள் நிஜத்தில் நடக்காவண்ணம் நாம் பார்த்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெர்ட்சுவல் ரியாலிட்டி 7:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 7:

சமூக வலைத்தளங்களை நாம் வித்தியாசமான முறையில் உபயோகப்படுத்த இந்த வெர்ட்சுவல் ரியாலிட்டி நமக்கு பெரிதும் உதவுகின்றது. இதன் மூலம் நமது பர்சனல் டேட்டாக்களை மட்டுமின்றி நமது நண்பர்களின் உதவிகரமான தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். மேலும் நண்பரின் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமலே வெர்ட்சுவல் ரியாலிட்டி மூலம் கலந்து கொண்ட உணர்வை பெறலாம்.

வெர்ட்சுவல் ரியாலிட்டி 8:

வெர்ட்சுவல் ரியாலிட்டி 8:

நீங்கள் ஒரு இடத்திற்கு போகவேண்டும் என்றால் அந்த இடத்தை என்ன தான் நீங்கள் கூகுளில் இருந்து ஒருசில தகவல்களை திரட்டியிருந்தாலும் வெர்ட்சுவல் ரியாலிட்டி உங்களுக்கு ஒரு பெர்சனல் செகரட்டரி போல செயல்படும். நீங்கள் போக வேண்டிய இடத்தின் தட்பவெப்ப நிலை, அந்த இடத்தின் தன்மை, அழகழகான போட்டோஷாப் கலையம்சத்துடன் கூடிய புகைப்படங்கள் ஆகியவற்றை உங்கள் கண் முன் நிறுத்தும் . அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள நல்ல ஓட்டல், தங்குமிடம், செக் இன் மற்றும் செக் அவுட் நேரம் ஆகியவற்றை உங்கள் விரல் நுனியில் இது கொண்டு வந்து வைக்கும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Most Read Articles
Best Mobiles in India

English summary
How virtual reality can really change the way we live by affecting different sectors of the society and thereby enhancing the standard of living.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more