சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது!

By Meganathan
|

ரகசியமாக கசிந்திருக்கும் தகவல்கள் உண்மையெனில் சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி ஏ8 (2016) அடுத்து வரும் மாதங்களில் வெளியாகலாம். வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ8 கருவியின் விலையும் கசிந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது!

வெளியாகியிருக்கும் தகவல்களில் கேலக்ஸி ஏ8 (SM-A810F) கருவியானது தென் கொரியாவில் இருந்து புது தில்லிக்கு வந்திருக்கின்றது. எனினும் இந்திய விலையைப் பொருத்த வரை ரூ.13,635 என்றும் தென் கொரியாவில் இந்தக் கருவி இந்திய மதிப்பில் ரூ.39,000 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த விலை சுங்கத்துறை காரணமாக இருக்கலாம் என்றும் இவை அதிகாரப்பூர்வ விலை கிடையாது என்றும் கூறப்படுகின்றது.

தென் கொரியாவில் செப்டம்பர் 2016 இல் சாம்சங் கேலக்ஸி ஏ8 (2016) அறிமுகம் செய்யப்பட்டது. தென் கொரியாவில் KRW 649,000 அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,905.31 ஆகும். எனவே கருவியின் விலையில் அதிகளவு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சாம்சங் புதிய கருவியின் தகவல்கள் ரகசியமாய் கசிந்துள்ளது!

2015 ஆம் ஆண்டு வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ8 கருவியின் மேம்படுத்தப்பட்ட மாடலாக கூறப்படும் இந்தக் கருவியில் 5.7 இன்ச் FHD super AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்தக் கருவியில் இரண்டு நானோ சிம் கார்டு ஸ்லாட், 4ஜி, வை-பை, ப்ளூடூத், என்எஃப்சி, ஜிபிஎஸ் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 (2016) price leaks ahead of India launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X