அம்மா சத்தியமா ரூ.40000 நேரடி தள்ளுபடி.. அடிமட்ட விலையில் 200MP கேமரா கொண்ட சாம்சங் 5ஜி போன்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் சாம்சங் நிறுவனத்தின் 200எம்பி கேமரா ஸ்மார்ட்போன் (Samsung 200MP Camera Smartphone) ஒன்று, எந்த விதமான பேங்க் கிரெடிட் கார்டு சலுகையும் (Bank Credit Card Offer) இல்லாமல், நேரடியாக ரூ.40,000 விலை குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கிறது.
அது சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் 5ஜி (Samsung Galaxy S25 Edge 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது பிளிப்கார்ட்டில், இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.1,09,999 க்கு பதிலாக ரூ.40,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.69,999 க்கு வாங்க கிடைக்கிறது.

இதேபோல கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஆப்ஷன், அதன் அசல் அறிமுக விலையான ரூ.1,21,999 க்கு பதிலாக ரூ.40,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.81,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இந்த சலுகை சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் டைட்டானியம் ஜெட்பிளாக் (Titanium Jetblack) மற்றும் டைட்டானியம் சில்வர் (Titanium Silver) ஆகிய 2 கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது. இந்த நேரடி விலை குறைப்பு இன்னும் எத்தனை நாட்கள் அல்லது மணிநேரங்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. எனவே ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் உடனே முந்திக்கொள்ளவும்.
சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (Samsung Galaxy S25 Edge Full Specifications): டிஸ்பிளேவை பொறுத்தவரை இது QHD+ ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2,600 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் உடனான 6.7-இன்ச் AMOLED பேனலை கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் செராமிக் 2 ப்ரொடெக்ஷனால் பாதுகாக்கப்படுகிறது.
சிப்செட்டை பொறுத்தவரை இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை கொண்டுள்ளது. இது மற்ற கேலக்ஸி எஸ்25 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அதே சிப் ஆகும். ஸ்டோரேஜை பொறுத்தவரை இது 256GB மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் 12GB LPDDR5x ரேம்-ஐ கொண்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை பின்புறத்தில் 200MP ப்ரைமரி சென்சார் மற்றும் 12MP அல்ட்ராவைடு சென்சார் (மேக்ரோ மோட் உடன்) உள்ளது. முன்பக்கத்தில் 12MP செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொருத்தவ்ரு இது 25W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 3,900mAh பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சார்ஜிங் வேகத்தில் சுமார் 30 நிமிடங்களில் 55 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று சாம்சங் கூறுகிறது.
சாஃப்ட்வேர்-ஐ பொறுத்தவரை இந்த போன் கேலக்ஸி ஏஐ அம்சங்களை கொண்ட ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் வருகிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது 163 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது மற்றும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பிறகான ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5ஜி, வைஃபை 7 மற்றும் ப்ளூடூத் 5.4, டைட்டானியம் அலாய் பிரேம் ஆகியவற்றுடன் வருகிறது.
சாம்சங் தொடர்பான மற்ற லேட்டஸ்ட் அப்டேட்களை பொறுத்தவரை, சாம்சங் நிறுவனமானது, மிட்-ரேன்ஞ் பிரியர்களுக்கான 2 புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவைகள் - சாம்சங் கேலக்ஸி எம்47 (Samsung Galaxy M47) மற்றும் கேலக்ஸி எப்70 ப்ரோ (Samsung Galaxy F70 Pro) மாடல்கள் ஆகும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாகவே, அறிவிக்கப்படாத இந்த கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் பிஐஎஸ் (BIS) என்கிற இந்திய தர நிர்ணய அமைப்பின் (Bureau of Indian Standards) இணையதளத்தில் வெளிவந்துள்ளன. கூடவே கேலக்ஸி எம்47 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன. கூடுதல் விவரங்களை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications