Home
Deal of the day

அடிமட்ட விலைக்கு 6000mAh பேட்டரி OnePlus போன்.. ரூ.6000 விலை குறைப்பு + ரூ.3200 வங்கி சலுகை.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தொடர்ந்து அதன் மிட்ரேன்ஜ் ஸ்மாட்போன்களின் அறிமுகத்தின் மீது கவனம் செலுத்தி வருகிறது. ஒன்பிளஸ் நார்ட் 6 மாடலை அறிமுகம் செய்த கையோடு இப்போது. அதே சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மற்றும் நார்ட் சிஇ 6 லைட் மாடல்களை மே 7 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கிடையில், ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில், இந்நிறுவனத்தின் "பழைய" ஸ்மார்ட்போன்களின் விலை தொடர்ச்சியாக விலை குறைப்புகளை சந்தித்து வருகின்றன. ஒன்பிளஸ் 13எஸ், ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்புகளை தொடர்ந்து தற்போது ஒன்பிளஸ் 13 மாடலின் மீது மிகப்பெரிய விலைக்குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட விலைக்கு 6000mAh பேட்டரி OnePlus போன்.. ரூ.6000 விலை குறைப்பு!

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் தற்போது ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரூ.6000 நேரடி விலை குறைப்பை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது ரூ.69,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நேரடி விலை குறைப்புடன் சேர்த்து, ஒன்பிளஸ் 13 மாடல் மீது ரூ.3200 பேங்க் டிக்ஸவுண்ட்டும் கிடைக்கிறது. ஆக தகுதியான பேங்க் கார்டுகளை கொண்டுள்ள வாடிக்கையாளர்களால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலையை மேலும் குறைக்க முடியும். இந்த சலுகை (இந்த கட்டுரையை எழுதும் நேரம் வரையிலாக) ஒன்பிளஸ் 13 மாடலின் அனைத்து கலர் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3168 × 1440 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 1600 நிட்ஸ் டிபிக்கல் ப்ரைட்னஸ், 4500 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், 2160 ஹெர்ட்ஸ் ஹை-ஃப்ரெக்வன்சி பிடபுள்யூஎம் டிம்மிங், டால்பி விஷன், கிரிஸ்டல் ஷீல்ட் சூப்பர் செராமிக் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.82 இன்ச் 2கே பிளஸ் எல்டிபிஓ அமோஎல்இடி பேனலை கொண்டுள்ளது.

சிப்செட்டை பொறுத்தவரை ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது 900மெகாஹெர்ட்ஸ் அட்ரெனோ 830 ஜிபியு உடனான 4.32ஜிகாஹெர்ட்ஸ்ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி வரையிலான எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் மற்றும் 512ஜிபி வரையிலான யுஎப்எஸ் 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்களை பொறுத்தவரை ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 1/1.4-இன்ச் சோனி எல்ஒய்டி-808 சென்சார், எப்/1.6 அபெர்க்ஷர், ஓஐஎஸ் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா + 114° அல்ட்ரா-வைட் கேமராவுடன் 1/1.27-இன்ச் சாம்சங் ஜேஎன்1 சென்சார் உடனான 50எம்பி கேமரா + 3x ஆப்டிகல் ஜூம், 6x இன்-சென்சார் ஜூம், 120x டிஜிட்டல் ஜூம் உடனான 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

முன்பக்கத்தில் சோனி ஐஎம்எக்ஸ்615 சென்சார் கொண்ட 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. இது எப்/2.4 அபெர்க்ஷர் உடன் வருகிர்து. இதனால் 4கே வரையிலான 30எஃப்பிஎஸ் வீடியோ ரெக்கார்டிங்கை செய்ய முடியும். பேட்டரியை பொறுத்தவரை 100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங், 50W வயர்லெஸ் சார்ஜிங், மேக்னட்டிக் சார்ஜிங் சப்போர்ட் உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்கள்: இது இன்-டிஸ்ப்ளே அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 + ஐபி69 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது. இது ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 4-மைக்ரோஃபோன்கள், யூஎஸ்பி டைப்-சி போர்ட், டால்பி அட்மோஸ் ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus 13 gets Rs 6000 Price Cut and Rs 3200 Bank Discount in Flipkart See Details and Full Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X