Home
Mobile

நினைச்சத விட ரூ.5000 கம்மி.. 7000mAh பேட்டரி உடன் புது OnePlus 5ஜி போன்.. எந்த மாடல்?

இந்நேரம் உங்களில் பலருக்கும் - ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற மே 7 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளது என்பது தெரிந்து இருக்கலாம். குறிப்பிட்ட தேதியில் - ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 மாடலுடன், ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது

இவ்விரு மாடல்களில் "பட்ஜெட் வாசிகளின்" கண்கள் எல்லாம் லைட் மாடல் மீதுதான் இருக்கிறது. ஏனென்றால் இதுதான் இருப்பதிலேயே மிகவும் மலிவுக்கு வரும். இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டும்படியாக, ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 6 லைட் மாடலின் விலை வரம்பை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

நினைச்சத விட ரூ.5000 கம்மி.. 7000mAh பேட்டரி உடன் புது OnePlus போன்!

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.20,000 - ரூ.25,000 விலை வரம்பில் உள்ள வேகமான ஸ்மார்ட்போனாக இருக்கும் ஒன்பிளஸ் கூறியுள்ளது. அதாவது இதன் விலை ரூ.25,000 க்கும் குறைவாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.30,000 க்குள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட்டில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்: நார்ட் சிஇ 6 லைட் ஸ்மார்ட்போன் ஆனது டைமென்சிட்டி 7400 அப்பெக்ஸ் சிப்பில் இயங்கும் என்பதை இந்த ஸ்மார்ட்போனுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோசைட் வெளிப்படுத்துகிறது.

இது 10,30,000-க்கும் அதிகமான ஆன்டுடு (AnTuTu) ஸ்கோரை பெற்றுள்ளதாகவும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. ஆக இந்த ஸ்மார்ட்போன், இந்த விலை பிரிவில் உள்ள மற்ற உயர் நடுத்தர சிப்களுக்கு இணையான ஒரு சிப்பை பெறுகிறது

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) உடன் வருவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும், உள் சோதனைகளின் அடிப்படையில், ஐந்து ஆண்டுகள் வரை தடையற்ற பயன்பாட்டை இது வழங்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

கேமிங் செயல்திறன் ஓரளவு யதார்த்தமாக உள்ளது. சப்வே சர்ஃபர்ஸ் போன்ற எளிமையான கேம்களில் இந்த ஃபோனால் 144fps வேகத்தை எட்ட முடியும், ஆனால் BGMI மற்றும் கால் ஆஃப் டூட்டி மொபைல் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும் கேம்களில் இதன் வேகம் 90fps ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் ஒரு வழக்கமான ஹோல்-பஞ்ச் கட்அவுட் கொண்ட ஒரு பிளாட் ஆன பேனலாக இருக்கும். பேட்டரியை பொறுத்தவரை இது 7000mAh பேட்டரியை கொண்டிருக்கும். இது இரண்டு நாட்கள் வரை பயன்பாட்டையும், 1,200 சார்ஜ் சுழற்சிகளுக்கு பிறகும் பேட்டரி ஹெல்த்தை சீராக வைத்திருக்கும் என கூறப்படுகிறது.

கடைசியாக கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நார்ட் சிஇ 6 லைட் ஆனது ஒரு எளிமையான கேமரா செட்டப்பை கொண்டிருக்கும். இதில் டூயல் ரியர் செட்டப் இடம்பெறும். அதில் 50MP ப்ரைமரி சென்சார் உள்ளது. மேலும் இது 4கே வீடியோ மற்றும் 4கே மோஷன் போட்டோக்களை ஆதரிக்கும்.

நார்ட் சிஇ 6 VS நார்ட் சிஇ 6 லைட் - என்னென்ன வேறுபாடுகள் இருக்கும்? லைட் மாடல், நார்ட் சிஇ 6 உடன் ஒற்றுப்போகும் சில பொதுவான அம்சங்களை கொண்டிருந்தாலும், சில "குறைப்புகளையும்" பெற்றுள்ளது. ஸ்டாண்டர்ட் சாதாரண நார்ட் சிஇ 6 மாடல் ஆனது இன்னும் பெட்டர் ஆன ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 சிப்பை பேக் செய்கிறது.

மேலும் ஷார்ப் ஆன 1.5கே டிஸ்பிளே மற்றும் ப்ரைமரி கேமராவில் டூயல்-ஆக்சிஸ் OIS ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஆட்டோஃபோகஸ் உடன் கூடிய 32MP செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது - இதெல்லாம் லைட் மாடலில் இல்லை.

மேலும் நார்ட் சிஇ 6 மாடலில் உள்ள பேட்டரி 8,000mAh ஆக சற்று பெரியதாக உள்ள. ஒட்டுமொத்தமாக லைட் வெர்ஷன் ஆனது முக்கிய அனுபவத்தை அப்படியே வைத்திருந்தாலும், குறைந்த விலை வரம்பிற்குள் இருப்பதற்காக கேமரா ஹார்டுவேர் மற்றும் சில பிரீமியம் அம்சங்களை குறைத்துள்ளது. ரூ.20,000 - ரூ.25,000 பிரிவில் வரும் நார்ட் சிஇ 6 லைட் மாடலானது - ரெட்மி நோட் 15, லாவா அக்னி 4 மற்றும் மோட்டோரோலா எட்ஜ் 70 ஃபியூஷன் ஆகிய மாடல்களை ஒருகை பார்க்கும் ஒன்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 6 Lite May 7 India Launch Round Up Price Range Specifications Differences vs Nord CE 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X