Home
Deal of the day

போட்டு தாக்கு.. ரிலீஸ் ஆகி 3 மாதமே ஆன லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் மீது ரூ.9000 விலை குறைப்பு!

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 (Amazon Great Indian Festival Sale 2025) விற்பனையில், கடந்த ஜூன் 2025 இறுதியில் அறிமுகமாகி ஜூலை மாதம் முதல் விற்பனைக்கு வந்த ஒரு லேட்டஸ்ட் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.9000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அது சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி (Samsung Galaxy M36 5G) ஸ்மார்ட்போன் ஆகும். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் வெளியீட்டு விலை ரூ.22,999 ஆகும்.

லேட்டஸ்ட் Samsung 5ஜி போன் மீது ரூ.9000 விலை குறைப்பு!

ஆனால் அறிமுக சலுகையின் கீழ் கடந்த ஜூலை மாதத்திலேயே இது ரூ.16,499 க்கு வாங்க கிடைத்தது. தற்போது அமேசான் இந்தியா (Amazon India ) வலைத்தளத்தில் அதைவிட மலிவான விலைக்கு - ரூ. 13,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது அசல் விலையில் இருந்து நேரடியாக ரூ.9000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.

மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 ஓஎஸ் உடன் வருகிறது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) உடனான 50 எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8 எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்

முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13எம்பி செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5,000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி மீதான விலை குறைப்பு ஒருபக்கம் இருக்க, சாம்சங் நிறுவனம் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆன சாம்சங் ஃபேப் கிராப் ஃபெஸ்ட்-ஐயும் தொடங்கி உள்ளது. இதன் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் என பல வகையான சாம்சங் கேலக்ஸி தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள், பேங்க் கேஷ்பேக் கிடைக்கிறது.

குறிப்பாக தற்போது சாம்சங் தளங்களில் நேரலையில் உள்ள இந்த விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) 53 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.12,000 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இந்த சலுகைகளுக்கு தகுதியான மாடல்களின் பட்டியலை உள்ளடக்கிய கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Best Mobiles in India

English summary
Latest Samsung 5G Phone Launched 3 Months Ago Get Rs 9000 Price Cut in Amazon Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X