வந்துட்டான்.. Samsung ஸ்பெஷல் SALE.. என்னென்ன போன்கள் மீது 53% ஆபர், டேப்லெட் மீது 50% டிஸ்கவுண்ட்?
சாம்சங் நிறுவனம் தனது பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆன சாம்சங் ஃபேப் கிராப் ஃபெஸ்ட்-ஐ (Samsung Fab Grab Fest) தொடங்கி உள்ளது. இதன் கீழ் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டேப்லெட்டுகள், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் என பல வகையான சாம்சங் கேலக்ஸி தயாரிப்புகளின் மீது தள்ளுபடிகள், பேங்க் கேஷ்பேக் கிடைக்கிறது.
என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? தற்போது சாம்சங் தளங்களில் நேரலையில் உள்ள இந்த விற்பனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கேலக்ஸி ஸ்மார்ட்போன்களின் அதிகபட்ச சில்லறை விலையில் (எம்ஆர்பி) 53 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்று சாம்சங் தெரிவித்துள்ளது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.12,000 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம். இந்த சலுகைகளுக்கு தகுதியான மாடல்களின் பட்டியல் இதோ:

- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்டு 7 (Galaxy Z Fold 7)
- சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப் 7 (Galaxy Z Flip 7)
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா (Galaxy S25 Ultra)
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 (Galaxy S25)
- சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ் (Galaxy S25 Edge)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Galaxy S24 Ultra)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 (Galaxy S24)
- சாம்சங் கேலக்ஸி எஸ்24 எஃப்இ (Galaxy S24 FE)
- சாம்சங் கேலக்ஸி ஏ56 (Galaxy A56)
- சாம்சங் கேலக்ஸி ஏ55 (Galaxy A55)
- சாம்சங் கேலக்ஸி ஏ36 (Galaxy A36)
- சாம்சங் கேலக்ஸி ஏ35 (Galaxy A35)
- சாம்சங் கேலக்ஸி ஏ26 (Galaxy A26)
- சாம்சங் கேலக்ஸி ஏ17 (Galaxy A17)
என்னென்ன சாம்சங் லேப்டாப்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? சாம்சங் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட லேப்டாப் மாடல்களின் எம்ஆர்பி இல் இருந்து 59 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், கூடவே ரூ.17,490 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம் என்று தெரிவித்து உள்ளது. இந்த சலுகைகளுக்கு தகுதியான மாடல்கள் இதோ:
- சாம்சங் கேலக்ஸி புக் 5 ப்ரோ 360 (Galaxy Book 5 Pro 360)
- சாம்சங் கேலக்ஸி புக் 5 ப்ரோ (Galaxy Book 5 Pro)
- சாம்சங் கேலக்ஸி புக் 5 360 (Galaxy Book 5 360)
- சாம்சங் கேலக்ஸி புக் 5 (Galaxy Book 5)
- சாம்சங் கேலக்ஸி புக் 4 (Galaxy Book 4)
என்னென்ன சாம்சங் டேப்லெட்கள், வாட்ச்கள் மற்றும் பட்ஸ்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது? சாம்சங் நிறுவனம், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் எம்ஆர்பி இல் இருந்து 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும், கூடவே ரூ.20,000 வரை வங்கி தள்ளுபடியையும் பெறலாம் என்று தெரிவித்து உள்ளது. இந்த சலுகைகளுக்கு தகுதியான மாடல்களின் பட்டியல் இதோ:
- சாம்சங்கேலக்ஸி டேப் எஸ்11 அல்ட்ரா
- சாம்சங்கேலக்ஸி டேப் எஸ்11
- சாம்சங்கேலக்ஸி டேப் எஸ்10 எஃப்இ+
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 லைட்
- சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்9 எஃப்இ+
- சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11+
- சாம்சங் கேலக்ஸி டேப் ஏ11
- சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8 கிளாசிக்
- சாம்சங் கேலக்ஸி வாட்ச் 8
- சாம்சங் கேலக்ஸி வாட்ச் அல்ட்ரா
- சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3 ப்ரோ
- சாம்சங் கேலக்ஸி பட்ஸ் 3
- சாம்சங் கேலக்ஸி பட்ஸ் கோர்


Click it and Unblock the Notifications