4G லேப்டாப்புகள் புதிய டிரெண்ட்டா? சியாமி மற்றும் ஜியோவின் புதிய 4G லேப்டாப்புகள் அறிமுகம்

4G லேப்டாப்புகள் புதிய டிரெண்ட்டா? சியாமி மற்றும் ஜியோவின் புதிய 4G லேப்டாப்புகள் அறிமுகம்

By Siva
|

ஆசியாவின் ஆப்பிள் என்று கூறப்படும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியாமி நிறுவனம் தனது தயாரிப்பான மி நோட்புக் ஏர் என்ற 12.5 இன்ச் நோட்புக்கை அப்கிரேட் செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இந்த புதிய லேப்டாப் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் இது 13.3 இன்ச் டிஸ்ப்ளேவுடன் இண்டல் கோர் ஐ5 பிராஸசர் கொண்டது என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 12.5 இன்ச் மாடல் ஆறாவது ஜெனரேசன் ஆன இண்டெக்ஸ் M3 பிராஸசர் என்பது குறிப்பிடத்தக்கது.

4G லேப்டாப்புகள் புதிய டிரெண்ட்டா? சியாமி மற்றும் ஜியோவின் புதிய 4G

சியாமி நிறுவனத்தின் அதிகாரபூர்வ தகவலின்படி இந்த அப்கிரேட் மி நோட்புக் ஏர் என்பது ஏழாவது தலைமுறை இண்டெல் கோர் M3 பிராஸசர் என்பது உறுதியாகியுள்ளது. முந்தைய தலைமுறை மாடலுடன் இதை ஒப்பிடும்போது அனைத்து அம்சங்களிலும் 12% அதிகளவிலான முன்னேற்றம் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இந்த மி நோட்புக் ஏர் மாடலில் உள்ள சிறப்பு என்பது என்னவெனில் இதில் 4G சிம்கார்டு போடும் வசதியும் உண்டு என்பதுதான். இந்த வசதி முந்தைய மாடலில் இருந்தாலும் இந்த மாடலின் உள்ள அனுபவம் வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

இந்த 4G சிம்கார்ட் டைப் லேப்டாப் என்பது சியாமி நிறுவனம் மட்டுமின்றி சமீபத்தில் இந்தியாவில் 4G புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவும் களத்தில் உள்ளது. ஜியோ நிறுவனமும் 4G சிம்கார்ட் உடன் கூடிய லேப்டாப்பை கிட்டத்தட்ட மேக்புக் வடிவத்தில் சவால் தரும் விலையில் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லேப்டாப்புகளிலும் 4G சிம்கார்ட் வசதியா? என்று ஆச்சரியத்துடன் கேட்கும் நபர்களுக்கு கூறிக் கொள்வது என்னவெனில் இந்த இரண்டு மாடல்கள் மட்டுமின்றி எதிர்காலத்தில் இன்னும் பல நிறுவனங்கள் 4G சிம்கார்ட் டைப் லேப்டாப்புகளை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது என்பது ஒரு ஆச்சரியமான செய்தி ஆகும்.

லேப்டாப்புகளுக்கு 4G வசதி எதற்கு?

லேப்டாப்புகளுக்கு 4G வசதி எதற்கு?

தற்போதுள்ள லேப்டாப்புகளில் இண்டர்நெட் கனெக்சன் கொடுக்க வேண்டும் என்றால் டோங்கில் என்று கூறப்படும் டேட்டா கார்ட் அல்லது மொபைல் இண்டர்நெட்டில் உள்ள டெதரிங் என்ற ஆப்சன்கள் மூலமாகத்தான் இண்டர்நெட் கனெக்சன் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.

இவை இரண்டும் இல்லாவிட்டால் இண்டர்நெட் கனெக்சன் என்பது கிட்டத்தட்ட இல்லை எனலாம். எனவே மொபைல் அல்லது டோங்கிள் இல்லாமல் இனிவரும் காலங்களில் லேப்டாப்புகளில் இண்டர்நெட் கனெக்சன் வசதி பெறவே எதிர்காலத்தில் அதிகளவு 4G சிம் வசதியுடன் கூடிய லேப்டாப் மாடல்கள் வரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

4G லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்ய இது சரியான நேரமா?

4G லேப்டாப் இந்தியாவில் அறிமுகம் செய்ய இது சரியான நேரமா?

இந்தியாவில் 4G லேட்பாபு அறிமுகம் செய்ய வேண்டிய காலம் இதுவே சரியானது என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியவில் ஜியோ அறிமுகம் ஆன பின்னர் 4G குறித்த விழிப்புணர்வு அதிகளவு ஏற்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தற்போது 4G சேவையை போட்டி போட்டுக்கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றனர்.

எனவே இந்த நேரத்தில் LTE இன்பில்ட் கொண்ட லேப்டாப்புகள் 4G வசதியுடன் அறிமுகமாவது சரியான நேரமாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் இந்த மாடல் லேப்டாப் அதிக அளவில் விற்பனை ஆக அதிக வாய்ப்புகள் இருப்பாதாக தொழில்நுட்பத்தை கணிப்பவர்கள் கூறி வருகின்றனர்.

4G லேப்டாப்களின் உற்பத்தி ஆரம்பத்தில் குறைவாக இருக்க காரணம்

4G லேப்டாப்களின் உற்பத்தி ஆரம்பத்தில் குறைவாக இருக்க காரணம்

4G சிம்கார்ட் கொண்ட லேப்டாப் உற்பத்தியை இப்போதைக்கு மிகச்சில நிறுவனங்களே ஆரம்பித்துள்ளன. இந்த மாடலுக்கு ஏற்படும் டிமாண்ட் மற்றும் சப்ளை விகிதத்தை பொறுத்தே இந்த வகை லேப்டாபுகளின் உற்பத்தி அதிகமாவதோ அல்லது குறைவானதாகவோ இருக்கும்.

அதுமட்டுமின்றி லேப்டாபு தயாரிப்பு நிறுவனங்கள் செல்லுலார் நிறுவனங்களிடம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய நிலையும் உள்ளதால் இதன் தயாரிப்பும் இப்போதைக்கு குறைவாகவே உள்ளது

ரூ.19,900/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும், இதுவே அதிகம்.!ரூ.19,900/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும், இதுவே அதிகம்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Will the 4G laptops become a trend right now in India? Read further to know more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X