அம்பானிக்கு சம்பாதித்தது பற்றவில்லை போல, அடுத்த மாஸ்டர் பிளான் ரெடி.!

|

முகேஷ் அம்பானி மீது விமர்சனங்களும் உண்டு, பெருமைப்பாடல்களும் உண்டு. அளவுக்கு அதிகமான பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று புரியாமல் ஜியோ என்ற பெயரின் கீழ் இலவச சலுகைகளை அல்லி வழங்கி கொண்டிருக்கிறார் என்ற விமர்சனங்களும் உண்டு, அதே ஜியோ நிறுவனத்தையும் சலுகைகளையும் இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஏற்பட்ட புரட்சிக்கான ஆரம்பம் என்று புகழ் பாடும் கூட்டமும் உண்டு (அந்த கூட்டத்தில் வல்லுனர்களும் உண்டு).!

எது எப்படியோ ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் - இங்கு யாருமே அப்பாவிகளோ, முட்டாள்களோ அல்ல, அதிலும் குறிப்பாக அம்பானி போன்றவர்கள் நிச்சயமாக இல்லை. இங்கு எல்லாமே வியாபாரம் தான். அப்படியாக ஜியோ 4ஜி சேவை தொடர்ந்து விரைவில் டிடிஎச் சேவை, மலிவான 4ஜி கருவிகள் இல்லாமல் முகேஷ் அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான் ரெடியாக உள்ளது. அது என்ன திட்டம்.?

கார் இணைப்பு சேவை :

கார் இணைப்பு சேவை :

வெளியான அறிக்கைகளின் கீழ் ரிலையன்ஸ் ஜியோ ஆனது ஜியோ கார் இணைப்பு சேவை ஒன்றை ஓபிடி எனப்படும் ஆன் போர்ட் டையாக்னைசிஸ் தொழில்நுட்பத்தின் கீழ் நிகழ்த்த திட்டமிட்டுள்ளது.

2020 :

2020 :

மேலும் இந்த திட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 90% கார்களை இண்டர்நெட் மூலம் இணைக்க ரிலையன்ஸ் ஜியோ குழு திட்டமிட்டுள்ளது.

தகவல்கள் :

தகவல்கள் :

இந்த சேவையை ஓபிடி மூலம் ஜியோ வழங்குமென்ற வதந்தி கிளம்பியுள்ளது மறுபக்கம் ரிலையன்ஸ் கார் மீது மென்பொருள் இடைமுகம் மூலம் தகவல்களை வெளிப்படுத்தும் ஒரு வன்பொருளை நிறுவலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துணை அமைப்பு :

துணை அமைப்பு :

இந்த சேவையின் மூலம் எரிபொருள் இன்ஜெக்ஷன், ஆக்ஸிஜன் சென்சார்கள் மற்றும் பல பல்வேறு கார்களுக்கான துணை அமைப்பை உங்களால் அணுக முடியும்.

தேவைகள் :

தேவைகள் :

இதன் மூலம் உங்கள் வாகனத்திற்கு என்னென்ன தேவைகள் வேண்டும், என்னென்ன தவறுகள் நடக்கின்றன என்பதை கண்டறிவதுடன் அதனை சரிப்படுத்தும் செயல்திறனும் வழங்கப்படும்.

நிபுணத்துவம் :

நிபுணத்துவம் :

அதாவது ஓபிடி-யை ஒரு காரின் பணியகத்தில் இருந்து நேரடியாக அணுக முடியாது அதில் இன்னும் சிறிது தொழில்நுட்ப நிபுணத்துவம் தேவைப்படுகிறது என்றும் இதுசார்ந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைஃபை ஹாட் ஸ்பாட் :

வைஃபை ஹாட் ஸ்பாட் :

அறிக்கையின்படி, ஜியோ கார் இணைப்பு சாதகமானது காரின் ஓபிடி போர்ட்டில் பிளக் மூலம் இணைக்கப் பெற்றிருக்கும். அதில் ஒரு சிம் ஸ்லாட் இருக்கும் உடன் அதில் ஜியோ சிம் நுழைக்கப்பட்டு வைஃபை ஹாட்-ஸ்பாட்டும் சேர்க்கப்படும்.

ஜியோ ஆப் :

ஜியோ ஆப் :

இது சார்ந்த ஜியோ ஆப் ஒன்று வெளியாகுமென்றும், அதன் மூலம் இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியுமென்ற தகவலும் வெளியாகியுள்ளது.

வீடியோ :

ஜியோ கார் கனெக்ட் சாதனம் சார்ந்த குறுகிய விமர்சனம் (வீடியோ)

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ டிடிச் : 5 பிளான்கள், 432+ சேனல்கள் (திட்டங்கள், விலைப்பட்டியல்).!

Best Mobiles in India

Read more about:
English summary
Reliance Jio plans to connect 90% of the cars to Internet by 2020. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X