டேப்லெட் கணினிகளில் இவற்றை செய்யமுடியாது!

|
டேப்லெட் கணினிகளில் இவற்றை செய்யமுடியாது!

கடந்த 2012ஐ பொருத்தவரையிலும் டேப்லெட் வகை கணினிகளின் விற்பனை மிகவும் அதிகரித்தது. எளிதாக பயன்படுத்தும் வகையிலாக உள்ளதால் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்கின்றனர் இத்துறையில் உள்ளவர்கள்.

இது சார்ந்த வர்த்தகம் கடந்த வருடம் விண்ணைத்தொட்டது நினைவிருக்கலாம். விற்பனை வளர்ச்சியின் காரணமாகவே சாம்சங் மற்றும் நோக்கியா நிறுவனங்களும் டேப்லெட் வடிவமைப்புகளில் குதித்துள்ளது. என்னதான் இருந்தாலும் டேப்லெட் கணினிகளில் இவற்றை செய்யமுடியாது என சிலவற்றை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

லேப்டாபிலுள்ள தரவுகளை ஆன்ட்ராய்டு போன்களுக்கு மாற்றுவது எப்படி?

டேப்லெட் கணினிகள் குறைந்த அளவே நினைவக வசதியைக் கொண்டிருக்கும். இதனால் அதிக அளவிலான தரவுகளை சேமிக்கமுடியாது. அதிக அளவிலான நினைவகம் தேவைப்பட்டால், மிகுந்த விலைகொடுக்க நேரிடும்.

சில டேப்லெட் கணினிகள் USB வசதியைக் கொண்டிருப்பதில்லை இதனால் டாங்கில்கள் பயன்படுத்தி இணையத்தை பெறமுடியாத சூழல்.

ரேம் அளவுகள் மிகவும் குறைவாக இருப்பதாலும், செயலிகளின் வேகம் குறைவாக இருப்பதாலும் இந்த டேப்லெட் கணினிகள் குறைந்த செயல்திறன் கொண்டவைகளாகவே உள்ளன.

டேப்லெட் வகை கணினிகள் சாதாரண கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன்படுத்துவதைப் போன்ற மென்பொருள்களை பயன்படுத்த முடியாது.

அச்சிடுவது போன்றவற்றில் பல சிக்கல்கள் உள்ளன.

எனவே, டேப்லெட் வகை கணினிகளை வாங்க உள்ளவர்கள் சற்றே கவனத்துடன் இருக்கவேண்டிய தருணமிது.

Go to More gadgets gallery...

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X