லேப்டாபிலுள்ள தரவுகளை ஆன்ட்ராய்டு போன்களுக்கு மாற்றுவது எப்படி?

Written By:

இப்பொழுதெல்லாம் ஆன்ட்ராய்டு வகை ஸ்மார்ட்போன்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதே மாதிரி லேப்டாப்புகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது எனலாம்.

லேப்டாபிலுள்ள தரவுகளை ஆன்ட்ராய்டு போன்களுக்கு மாற்றுவது எப்படி?

இங்கே நாம் பார்க்கவிருப்பது லேப்டாபிலுள்ள தரவுகளை ஆன்ட்ராய்டு போன்களுக்கு மாற்றுவது எப்படி என்பதைத்தான். தகவல்கள் பின்வருமாறு,

1) உங்களுடைய லேப்டாப் கணினியை ஆன்ட்ராய்டு சாதனத்துடன் USB கேபிள் வழியாக இணைக்கவும். சரியாக இணைப்பை ஏற்படுத்தினீர்களா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

2) உங்களுடைய ஆன்ட்ராய்டு போனின் நோடிபிகேசன் பகுதியை திறக்கவும். இது சாதாரணமாக முன் திரையின் மேல்பகுதியில் இருக்கும். இதில் USB இணைக்கப்பட்டது என்ற செய்தி வருகிறதா என்பதை கவனிக்கவும்.

3) பின்னர் உங்களுடைய லேப்டாப்பின் விண்டோஸ் எக்ஸ்புளோரர் என்ற அமைப்பை திறக்கவும். அதாங்க மை கம்ப்யூட்டர். அதில் தெரியும் ஆன்ட்ராய்டு போனுக்கான பொத்தானை அழுத்தவும்.

4) பின்னர் திறக்கப்படும் திரையில், லேப்டாப்பில் உள்ள தேவையான பைல்களை மட்டும் தெரிவுசெய்து ஆன்ட்ராய்டு போனுக்கு அனுப்பவும்.

5) அவ்வளவே! இந்த சுலபமான வேலையை முடித்ததும். USB ஸ்டோரேஜ் முறையை நிறுத்தவும். பின்னர் ஆன்ட்ராய்டு சாதனத்துடனான லேப்டாப்பின் இணைப்பை நீக்கவும்.

புஜி ஜெராக்ஸ் நிறுவனத்தின் அலுவலக படங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot