புதுசா மதர்போர்டு வாங்க போறிங்களா! அப்ப இதை படிச்சிருங்க

புதுசா மதர்போர்டு வாங்க போறிங்களா

By Siva
|

ஒரு கம்ப்யூட்டரின் இதயம் போன்றது அதில் உள்ள மதர்போர்டு என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். கம்ப்யூட்டரில் உள்ள ஒவ்வொரு பாகத்திலும் உள்ள கனெக்சன் மற்றும் கம்யூனிகேசன் மதர்போர்டில் இருந்து தான் தொடங்கும்

புதுசா மதர்போர்டு வாங்க போறிங்களா! அப்ப இதை படிச்சிருங்க

ஒரு கம்ப்யூட்டரில் சரியான மதர்போர்டை தேர்வு செய்துவிட்டால் கிட்டத்தட்ட ஒரு பெரிய வேலை முடிந்துவிட்டது என்பதை முடிவு செய்து கொள்ளலாம். நீங்கள் சரியான மதர்போர்டை தேர்வு செய்வதில் திறமையானவர் என்றால் ஓகே, ஒருவேளை சரியான மதர்போர்டை செலக்ட் செய்வதில் உங்களுக்கு குழப்பம் இருக்கின்றதா? அப்படியெனில் இந்த கட்டுரையை முழுவதுமாக படியுங்கள்

முதலில் மதர்போர்டு எந்த சைஸில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு முதலில் சிபியூவின் அளவுக்கு தகுந்த மதர்போர்டை செலக்ட் செய்வது அவசியம்

தெலுங்கானா டி-வால்லெட்டை அறிமுகப்படுத்துகிறது : கே.டி. ராமா ​​ராவ்.!

இரண்டாவதாக மதர்போர்டு பலவித ஜெனரேஷன்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. எனவே கம்ப்யூட்டரில் உள்ள பிராஸசருக்கு தகுந்த மதர்போர்டை தேர்வு செய்ய வேண்டும். எந்தெந்த பிராஸசருக்கு எந்தெந்த மதர்போர்டு என்பது குறித்து அந்த பிராஸசர் நிறுவனத்தின் இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்

சிப்செட்: மதர்போர்டு என்பது பலவித சிப்செட்டுக்களால் ஆனது. இதிலும் சிபியூவுக்கு சப்போர்ட் செய்யும் சிப்செட்டுக்களை உபயோகிக்க வேண்டும் என்பது அவசியம்

கிராபிக்ஸ் கார்ட்: கிராபிக்ஸ் கார்டு எத்தனை வேண்டும் என்பதை முதலிலேயே முடிவு செய்து அதன்பின்னர் அதற்கேற்ற மதர்போர்டை வாங்க வேண்டும். ஒரு மதர்போர்டில் அதிகபட்சம் இரண்டு கிராபிக்ஸ் கார்டு வரை பயன்படுத்தலாம்

பிசி லேன்ஸ் (Pcle lanes): மதர்போர்டில் இருந்து மற்ற பொருட்களை இணைக்கும் வயர்தான் இந்த பிசி லேன்ஸ் என்ற இணைப்பு பொருள்' மின்சாரத்தை கடத்தும் இந்த லேன்ஸ், வெவ்வேறு வேகத்தில் மின்சாரத்தை கடத்தும் என்பதால் சரியான வேகத்தை கடத்தும் லேன்ஸ்களை வாங்க வேண்டும்

டிஸ்ப்ளே அவுட்புட்: டிஸ்ள்பேவுடன் இணைக்கும்போது அதில் எத்தனை அவுட்புட் இருக்கின்றது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு பொருட்களை வாங்க வேண்டும். பெரும்பாலான ஜிபியூ இரண்டு அல்லது மூன்று டிஸ்ப்ளேக்களுக்கு சப்போர்ட் செய்யும் வகையில் இருக்கும்

ஆடியோ கனெக்சன்: ஒரு கம்ப்யூட்டரில் எத்தனை ஆடியோ கனெக்சன் இருக்கின்றது என்பதை தெரிந்து அதற்கேற்ற ஆடியோ கனெக்டர்களை வாங்க வேண்டும். பெரும்பாலும் பல கம்ப்யூட்டர்களில் HDMI வகை ஆடியோ கனெக்டர்தான் இருக்கும்.

கம்ப்யூட்டரை குளிர்விக்க பயன்படும் ஃபேன்: ஏசி இல்லாத அறையாக இருந்தால் கண்டிப்பாக கம்ப்யூட்டரை குளிர்விக்க ஃபேன் வேண்டும். பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் இரண்டு அல்லது நான்கு ஃபேன்கள் இருக்கும். இந்த ஃபேன்கள் மதர்போர்டு உள்பட அனைத்து பொருட்களையும் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும்

மற்ற கனெக்டர்கள்: மதர்போர்டு உடன் கனெக்ட் செய்யப்படும் முக்கிய கனெக்டர்களான ATA, SATA Express, mSATA or M.2 ஆகிய டிரைவ்களுக்கு தகுந்த கனெக்டர்களை பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும் கூர்ந்து கவனித்து அதன்பின்னர் சரியான மதர்போர்டை செலக்ட் செய்தால் உங்கள் கம்ப்யூட்டர் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் என்பது உறுதி.

Best Mobiles in India

Read more about:
English summary
You need to know these factors before choosing the right motherboard for your computer. These factors will help you choose the best motherboard based on your requirement.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X