பிப்.27ல் வெளியாகும் புதிய 'டேப்லெட்'...

Written By:

அசுஸ் நிறுவனம் மெமோ பேட்7 என்ற பெயரில் புதிதாக டேப்லெட் கணினியொன்றை இந்திய சாதனச்சந்தையில் வெளியிடவுள்ளதாகவும், அதன் விலை சுமார் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அசுஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட், வரும் பிப்ரவரி 27ஆம் தேதியே வெளியாகவுள்ளது.

பிப்.27ல் வெளியாகும் புதிய 'டேப்லெட்'...

இதுகுறித்து நாம் அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபொழுது சாதகமான பதிலே கிடைத்தது. மேலும் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பும் நமக்குக்கிடைத்துள்ளது.

பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தவிலை டேப்லெட் கணினிகளை வெளியிடுகின்றன. இந்த பந்தையத்தில் புதிதாக இணைந்திருக்கிறது, அசுஸ்!

சரி! இந்த புதிய டேப்லெட் கணினியின் நுட்பக்கூறுகளை பார்க்கலாமா? அதுபற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகக்கிடைக்கவில்லை. பின்வரும் நுட்பங்களுடையதாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

  • 7 அங்குல தொடுதிரை,
  • 1024 x 600 பி,
  • 1 ஜிபி ரேம்,
  • 1 GHz சிங்கிள் கோர் ப்ராசெசர்,
  • வைஃபை வசதி,
  • 1 எம்பி கேமரா,
  • நல்ல தரமுள்ள பேட்டரி,
  • விலை ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவே!

இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.

'ஹார்லெம் ஷேக்' தெரியுமா?

More Tablets Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot