முதன்முறையாக மேக் ஓ.எஸ் பயன்படுத்துவோர்களுக்கு சில டிப்ஸ்.!

Mac ஓ.எஸ் லேப்டாப்புகளை புதியதாக பயன்படுத்துவோர்களுக்கு சில டிப்ஸ்களை தற்போது பார்ப்போம்

By Siva
|

உலகில் பெரும்பாலும் இரண்டே இரண்டு ஓஎஸ் கொண்ட லேப்டாப்புகள்தான் பயன்படுத்தப்படுகிறது. ஒன்று விண்டோஸ் , இன்னொன்று Mac ஓ.எஸ். இவை தவிர வேறு ஓஎஸ்கள் கொண்ட லேப்டாப்புகள் இருந்தாலும், பெரும்பாலும் மேற்கண்ட இந்த இரண்டு ஓஎஸ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன.

முதன்முறையாக மேக் ஓ.எஸ் பயன்படுத்துவோர்களுக்கு சில டிப்ஸ்.!

வாட்ஸ்ஆப் : டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை எனேபிள்/டிஸ்சேபிள் செய்வதெப்படி.?

குறிப்பாக Mac ஓ.எஸ் லேப்டாப்புகள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவுதான். இருப்பினும் இந்த Mac ஓ.எஸ் லேப்டாப்புகளை புதியதாக பயன்படுத்துவோர்களுக்கு சில டிப்ஸ்களை தற்போது பார்ப்போம்

Mac ஓ.எஸ்-ல் சில ஷார்ட் கட்ஸ்கள்:

Mac ஓ.எஸ்-ல் சில ஷார்ட் கட்ஸ்கள்:

Mac ஓ.எஸ் லேப்டாப்களில் கமாண்ட் பட்டன் மிகவும் முக்கியமானது. ஸ்பேஸ்பார் அருகில் இருக்கும் இந்த பட்டன் தான் பெரும்பாலான ஷார்ட் கட்களுக்கு உபயோகமாகிறது.

விண்டோஸ் ஓஎஸ் லேப்டாப்புகளில் கண்ட்ரோல் பட்டனை அடிக்கடி பயன்படுத்துவது போல இந்த Mac ஓ.எஸ் லேப்டாப்புகளில் கமாண்ட் பட்டன் பயன்படுத்துவோம். இந்த Mac ஓ.எஸ் லேப்டாபுகளில் இருக்கும் ஒருசில ஷார்ட் கட் கீ களை தற்போது பார்ப்போம்

Command + C - காப்பி செய்வதற்கு

Command + V - பேஸ்ட் செய்வதற்கு

Command + Q - ஆப்-இல் இருந்து வெளியே வருவதற்கு

Command + W - விண்டோவை மூடுவதற்கு

Command + T - சபாரி பிரெளசரி புதிய டேப் ஓபன் செய்வதற்கு

Command + Shift + 4 - செலக்ட் செய்த பகுதியை ஸ்க்ரீன் ஷாட் எடுக்க

Command + ஸ்பேஸ் பார் - ஸ்பாட்லைட் சியர்ச்

வலது கிளிக் செய்ய இரண்டு விரல்கள் வேண்டும்

வலது கிளிக் செய்ய இரண்டு விரல்கள் வேண்டும்

இந்த Mac ஓ.எஸ் லேப்டாப்களில் வலது கிளிக் செய்வது மிக எளிது. லேப்டாப்புகளில் உள்ள மவுஸ் பகுதியில் ஒரே நேரத்தில் இரண்டு விரல்களை வைத்து அழுத்தினால் போதும் உடனே வலது கிளிக் ஆப்சன் வந்துவிடும்

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மினிமைஸ், மேக்சிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்கள்:

மினிமைஸ், மேக்சிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்கள்:

விண்டோஸ் லேப்டாப்புகளில் வலது ஓரத்தில் மினிமைஸ், மேக்சிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்கள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் Mac ஓ.எஸ் லேப்டாப்களில் வலதுக்கு பதிலாக இடது புறத்தில் அதே மினிமைஸ், மேக்சிமைஸ் மற்றும் குளோஸ் பட்டன்கள் இருக்கும். ஒருவேளை அதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டால் சிகப்பு நிறம் குளோஸ் பட்டனாகவும், ஆரஞ்சு நிறம் மினிமைஸ் செய்யும் பட்டனாகவும், பச்சை நிறம் மேக்சிமைஸ் செய்யும் பட்டனாகவும் புரிந்து கொள்ளலாம்.

ஷட் டவுன் மற்றும் ரீஸ்டார்ட் செய்வது எப்படி?

ஷட் டவுன் மற்றும் ரீஸ்டார்ட் செய்வது எப்படி?

முதன்முதலில் Mac ஓ.எஸ் லேப்டாப்பை பயன்படுத்துபவர்களுக்கு ஷட் டவுன் அல்லது ரீஸ்டார்ட் செய்வது எப்படி என்பதில் குழப்பம் ஏற்படும். குழம்ப வேண்டாம்.

ஸ்க்ரீனில் இடது ஓரத்தில் ஆப்பிள் என்ற சிம்பல் இருக்கும். அதை க்ளிக் செய்தால் ஒரு டிராப் டவுன் தோன்றும். அதில் ஷட் டவுன் மற்றும் ரீஸ்டார்ட் ஆகிய இரண்டு ஆப்சன்களும் இருக்கும். உங்களுக்கு எது தேவையோ அதை க்ளிக் செய்து கொள்ளலாம்.

பைல்களை தேட ஸ்பாட்லைட்டை பயன்படுத்துங்கள்:

பைல்களை தேட ஸ்பாட்லைட்டை பயன்படுத்துங்கள்:

Mac ஓ.எஸ் லேப்டாப்களில் பைல்களை எங்கே வைத்திருக்கின்றோம் என்று தேடுவதற்கு நமக்கு பயன்படுவது ஸ்பாட்லைட் சியர்ச். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது Command + ஸ்பேஸ் பார் ஆகியவற்றை அழுத்தினால் போதும். அதில் நீங்கள் தேட வேண்டிய பைலின் பெயரை குறிப்பிட்டால், அந்த பைலின் இருப்பிடத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

Best Mobiles in India

Read more about:
English summary
There are only two types of laptops: the ones which run Windows and the ones which run macOS. Of course, we are kidding. There are a bunch of other OSs that laptops run as well. However, many users prefer either Windows or macOS over the bunch of other OSs unless they know what exactly they are up to.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X