வாட்ஸ்ஆப் : டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை எனேபிள்/டிஸ்சேபிள் செய்வதெப்படி.?

வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

|

கூகுள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் பேஸ்புக் போன்ற தொழில்நுட்ப பெரு நிறுவனங்கள் எப்போதுமே அதிக பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்று என்பதை மனதிற்கொண்டு டூ ஸ்டெப் வெரிப்பிகேஷன் என்பதை செயல்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றன.

பெரு நிறுவனங்களே டூ ஸ்டெப் வெரிப்பிகேஷனை ஆதரிக்கிறது என்றால் அதிலுள்ள பாதுகாப்பு நன்மைகளை நான் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியான டூ ஸ்டெப் வெரிப்பிக்கேஷனை நீங்கள் இன்னும் செயல்படுத்தவில்லை என்றால் இந்த எளிய வழிமுறைகளை கொண்ட தொகுப்பு உங்களுக்கு உதவும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பேஸ்புக் நிறுவனதிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் இப்போது எல்லா பயனர்களுக்கும் (ஆண்ட்ராய்டு, ஐபோன், விண்டோஸ்) டூ ஸ்டெப் வெரிப்பிக் ஆதரவு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுக்காக்க விரும்பினால்

பாதுக்காக்க விரும்பினால்

வாட்ஸ்ஆப்பின் இந்த புதிய டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் ஒரு கட்டாயமற்ற அம்சமாகும். அதாவது நீங்கள் உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை அதிகமாக பாதுக்காக்க விரும்பினால் டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் நிகழ்த்திக் கொள்ளலாம்.

ஆறு இலக்க கடவுக்குறியீடு

ஆறு இலக்க கடவுக்குறியீடு

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் படி, பயனர் ஒருமுறை இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை 'எனேபிள்' செய்து விட்டால் வாட்ஸ்ஆப்பில் எந்தவொரு தொலைபேசி எண்ணை சரிபார்க்க முயற்சித்தாலும் ஏற்கனவே பயனரால் உருவாக்கப்பட்ட ஆறு இலக்க கடவுக்குறியீடு தேவைப்படும். உங்கள் வாட்ஸ்ஆப்பில் நீங்கள் இந்த டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அமைக்க விரும்பினால் பின்வரும் நடவடிக்கைகளை நீங்கள் நிகழ்த்த வேண்டும்.

வழிமுறை #01

வழிமுறை #01

1. உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை திறக்கவும்.
2. செட்டிங்ஸ் செல்லவும்
3. அக்கவுண்ட் செல்லவும்
4. டூ-ஸ்டெப் வெரிஃபிக்கேஷனை அணுகவும்

வழிமுறை #02

வழிமுறை #02

5. 'எனேபிள்' ஆப்ஷனை டாப் செய்யவும்
6. அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்
7. மீண்டும் ஒருமுறை ஆறு இலக்க கடவுக்குறியீடை பதிவிடவும்.
8. (விருப்பமிருந்தால்) அடுத்த ஸ்க்ரீனில் உங்களின் இமெயில் விலாசத்தை பதிவிடவும்.

டிஸ்சேபிள்

டிஸ்சேபிள்

கடைசிப்படியில் உங்களுக்கு விருப்பமென்றால் என்று குறிப்பிட்டுள்ள மின்னஞ்சல் முகவரியை உங்கள் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் உடன் இணைக்க காரணம் என்னவென்றால் ஒருவேளை பயனர் அளித்த ஆறு இலக்க கடவுக்குறியீடை மறந்துவிட்டால் அக்கவுண்ட் இணைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக ஒரு இணைப்பை அனுப்பி டூ-ஸ்டெப்னை 'டிஸ்சேபிள்' செய்துக்கொள்ள தான் என்பதை பயனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோசினிமாவின் 'ஸ்மார்ட் டவுன்லோட் ஆப்ஷன்' விளக்கமும்-பயன்பாடும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
How to Enable and Disbale Two Step Verification on WhatsApp. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X