Home
Computer

ஆப்பிள் மேக்புக் புரோ லேப்டாப்பின் 5 முக்கிய தகவல்கள்

By Siva

ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் லைன் அப் லேப்டாப் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது இதன் அடுத்த வடிவம் தயாராகிவிட்டது.

ஆப்பிள் மேக்புக் புரோ லேப்டாப்பின் 5 முக்கிய தகவல்கள்

விரைவில் வெளிவரவுள்ள இந்த ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப் இன் அறிமுக விழா கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கலிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது.

வரலாற்று மாற்றங்களுடன் சாம்சங் கேலக்ஸி சி7 ப்ரோ.!?

ஆயினும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பின் முக்கிய அம்சங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் ஏற்கனவே கசிந்த தகவல்களின் அடிப்படையில் இதில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.

முதல் முக்கிய மாற்றம் டிசைன் தான்

முதல் முக்கிய மாற்றம் டிசைன் தான்

ஆப்பிள் மேக்புக் புரோ மாடலின் 13 இன்ச் மற்றும் 15இன்ச் லேப்டாப் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்றதற்கு முழுமுதல் காரணம் அதன் வடிவமே. மெல்லியதான இலகுவான டிசைனில் இருந்தது போலவே ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பும் அதே மெல்லிய, இலகுவான அதே நேரத்தில் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் புக் போன்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன ரக கீபோர்டு

நவீன ரக கீபோர்டு

ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பில் புதியவகையான நவீன கீபோர்டு அமைக்கப்பட்டுள்ளது. OLED டச் கீபோர்டுகளுக்கு பதிலாக பல்திறன் கொண்ட கீபோர்டு இதில் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களின் பெரும் ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதில் உள்ள டச் பார் உங்களுக்கு பல ஷார்ட் கட்-களை அறிவிக்கும். உதாரணமாக வேர்ட் டாக்குமெண்ட்டை நீங்கள் ஓப்பன் செய்தால் அதில் உள்ள ஷார்ட்கட்-களான காப்பி, பேஸ்ட், போன்றவை உள்பட அனைத்து வகைகளுக்குமான ஷார்ட் கட் திரையில் தெரியும்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளதா?

பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உள்ளதா?

ஆப்பிள் ஐபோன் 5S மாடல் போனில்தான் பிங்கர் பிரிண்ட் சென்சார் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இதே பிங்கர் பிரிண்ட் சென்சாரை லேப்டாப்பில் அறிமுகப்படுத்துவதும் ஆப்பிள் நிறுவனம்தான். ஆம், ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பில் பிங்கர்பிரிண்ட் சென்சார் உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

ஹெட்போன் ஜேக் உண்டா? இல்லையா?

ஹெட்போன் ஜேக் உண்டா? இல்லையா?

ஆப்பிள் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் மாடல்கள் போலவே ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பிலும் ஹெட்போன் ஜேக் இல்லை என்றே கூறப்படுகிறது.

பிராஸசர், ஸ்டோரேஜ் பற்றிய தகவல்களை பார்ப்போமா?

பிராஸசர், ஸ்டோரேஜ் பற்றிய தகவல்களை பார்ப்போமா?

ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பில் இண்டெல் ஸ்கைலேக் பிராஸசர் அமைந்திருக்கும் என்றும், இதன் ஸ்டோரேஜ் திறன் 2TB SSD என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த மாடலின் விலையும் அதற்கேற்றது போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்டினா டிஸ்ப்ளே (Retina Display)

ரெட்டினா டிஸ்ப்ளே (Retina Display)

ஆப்பிள் மேக்புக் புரோ லைன் அப் லேப்டாப்பில் ஆப்பிள் நிறுவனத்தின் சொந்த உற்பத்தி டிஸ்ப்ளேவான ரெட்டினா டிஸ்ப்ளேதான் இருக்கும் என்பது ஊகம். இருப்பினும் இந்த மாடல் வெளிவரும்போது இதை உறுதி செய்து கொள்ளலாம்.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Apple has sent out invites for an event scheduled on October 27th indicating at a refreshed MacBook Pro lineup. Here are 5 things you should expect...
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X