சாம்சங் குரோம்புக் புரோவின் 5 ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 தோல்வியால் அந்நிறுவனத்திற்கு பொருளாதார ரீதியில் நஷ்டம் ஏற்பட்டதே தவிர நிறுவனத்தின் நம்பகத்தன்மைக்கு எவ்வித பிரச்சனையும் எழவில்லை.இதில் இருந்தே வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை அசத்தும் வகையில் சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் குரோம்புக் புரோ என்ற டிவைஸை வெளியிட வுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் புரோவிற்கு இணையானதாக இந்த சாம்சங் குரோம்புக் புரோ இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த அதிரடி : ஆண்ட்ராய்டு டூ டிவி..!
அடுத்த வாரம் சந்தைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சாம்சங் குரோம்புக் புரோ இதுவரை வெளியான நோட்புக்கில் இருந்து வித்தியாசமாகவும், டாப் ஹார்டுவேர் அம்சத்தையும் கொண்டதாக இருக்கும்.
டாப் இடத்தை எட்டிப்பிடிக்கும் ஜியோ : நமக்கு நல்லதா, கெட்டதா??
நீங்கள் ஒரு தரமான நோட்புக்-ஐ வாங்க விரும்பினால் குரோம்புக் மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடான மேக்புக் புரோவையும் ஒப்பிட்டு எது சிறந்தது என்பதை முடிவு செய்து வாங்குவது நலம்
இனி தற்போது சாம்சங் குரோம்புக் புரோவின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்
சாம்சங் குரோம்புக் புரோ லேப்டாப் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருந்தாலும் இந்த சாம்சங் குரோம்புக் புரோ தான் முதன்முதலில் ஸ்டைலஸ் (Stylus) பஃங்ஷன் கொண்ட லேப்டாப் என்பது குறிப்பிடத்தக்கது. வால்கம் ஆக்டிவ் ஸ்டைலஸ் டிஜிட்டிலைஷனை கொண்ட முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்ற இந்த சாம்சங் குரோம்புக் புரோ, வாங்குவதற்கு உரிய ஒரு சரியான உபகரணம் என்றே அனைவராலும் பரிந்துரை செய்யப்படுகின்றது. சாம்சங் குரோம்புக் புரோ லேப்டாப் குறித்து கசிந்துள்ள தகவலின்படி இந்த குரோம்புக் புரோ, 360 டிகிரி ஹிஞ்சை (hinge) கொண்டது. இது ஸ்க்ரீனை ஃபோல்ட் செய்ய உதவிகரமாக இருக்கும். 1.08 கிலோ மட்டுமே எடையாக கொண்ட இந்த சாம்சங் குரோம்புக் புரோ லேப்டாப் 13.9 மிமீ மட்டும் திக்னெஸ் கொண்டது. மல்டிமீடியா உபயோகிப்பாளர்களுக்கு இந்த லேப்டாபை ஒரு வரப்பிர்சாதம் என்றே கூறலாம். புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள் சாம்சங் குரோம்புக் புரோ சூப்பர் அமோல்ட் பேனலை கொண்டதோடு 13 அல்லது 12.3 இன்ச் டச் டிஸ்ப்ளேவை கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 2400 x 1600 பிக்சல் ரெசலூசனை கொண்ட இந்த சாம்சங் குரோம்புக் புரோ மல்டிமீடியா வேலைகளுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். சாம்சங் குரோம்புக் புரோ கண்டிப்பாக மிகச்சிறந்த ஹார்ட்வேர் அம்சத்தை பெற்றிருக்கும். அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவலின் அடிப்படையில் இந்த லேடாப் 6 கோர் ராக்சிப் பிராஸசர் மற்றும் 4K பிளேபேக் அம்சத்தையும் கொண்டது. மேலும் 4ஜிபி ரேம், 32 ஜிபி லோக்கல் ஸ்டோரேஜ், மற்றும் 10 மணி நேரம் சார்ஜ் நிற்கும் தன்மை ஆகியவற்றை தன்னத்தே பெற்றுள்ளது. சாம்சங் குரோம்புக் புரோ லேப்டாப், இதுவரை வெளியான தகவல்களில் இருந்து குரோம் ஓ.எஸ் இருக்கும் என்றும் ஆனால் அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்டு அப்ளிகேசனுக்கு இந்த லேப்டாப் சப்போர்ட் செய்யும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இரண்டு USB டைப் C போர்ட்ஸ், ஒரு ஹெட்போன் ஜாக் மற்றும் SD கார்ட் கனெக்ட் செய்ய என்று அனைத்து சிறப்பு அம்சங்களும் இதில் உண்டு. புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
சாம்சங் குரோம்புக் புரோ தான் பெற்ற முதல் சிறப்பம்சம்:

சாம்சங் குரோம்புக் புரோ ஒரு ஹைப்ரட் மிஷின் என்று எப்படி சொல்வது?

எத்தனை இஞ்ச் டிஸ்ப்ளேன்னு தெரியுமா?

அதுசரிங்க பாஸ், ஹார்ட்வேர் எப்படி இருக்கும்?

ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு தகவல்கள்:


Click it and Unblock the Notifications