டாப் இடத்தை எட்டிப்பிடிக்கும் ஜியோ : நமக்கு நல்லதா, கெட்டதா??

மற்ற நிறுவனங்களை மேலும் வெறுப்பேற்றும் விதமாக ஜியோ புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வரையிலான ஜியோ பயனர்களின் எண்ணிக்கை தான் இது. ஆனால் இது நமக்கு நல்லதா, கெட்டதா?

By Meganathan
|

இந்திய டெலிகாம் சந்தையில் புதுவரவு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ மிகக் குறைந்த காலகட்டத்திலேயே அதிகளவு பயனர்களைப் பெற்றது. இந்திய பயனர்களுக்கு ஏற்றச் சலுகையை வழங்கி ஒரு மாத காலத்திலேயே சுமார் 16 மில்லியன் பயனர்களை அடைந்ததாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

இதைத் தொடர்ந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஜியோ சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 24 மில்லியன் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோவைப் பொருத்த வரை இது மகிழ்ச்சியான தருணம் என்றாலும் இந்தச் சேவையைப் பயன்படுத்துவோருக்கு இது நல்லதா, கெட்டதா??

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

ரிலையன்ஸ் ஜியோ சேவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு அதன் பயனர்கள் 16 மில்லியனை எட்டியதும் ஜியோ 4ஜி டேட்டா வேகம் குறைந்து விட்டதாக அதன் பயனர்கள் குற்றம்சாட்டத் துவங்கினர்.

டிராய்

டிராய்

ஜியோ பயனர்களின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்தியாவிலேயே குறைந்த வேகம் வழங்கும் இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக ஜியோ இருக்கின்றது என மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோ

ஜியோ

இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஜியோ சார்பில் வெளியிட்ட அறிக்கையில் ஜியோ பயனர்கள் தினசரி அடிப்படை பயன்பாட்டு அளவைப் பயன்படுத்திய பின் வேகத்தைச் சரி பார்த்தனர். தினசரி ஜியோ 4ஜி வேகமானது 4ஜிபி வரை சீராக இருக்கும் அதன் பின் வேகம் சற்றே குறையத் துவங்கும்.

நிறுவனம்

நிறுவனம்

முன்பை விட அதிகப் பயனர்களை அடைந்திருக்கும் ஜியோ சேவைகளில் 4ஜி வேகம் இதன் பின் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிவேக இண்டர்நெட் வழங்கியதால் அதிகளவு பயனர்களை ஜியோ பெற்றுள்ளது.

வளர்ச்சி

வளர்ச்சி

எனினும் தற்சமயம் உலகின் மகிப்பெரிய இண்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனமாக ஜியோ இருக்கின்றது. சீனா மொபைல் மற்றும் வோடபோன் குளோபல் நிறுவனங்களுக்கு அடுத்த நிலையில் ஜியோ இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

அறிமுகச் சலுகை

அறிமுகச் சலுகை

ஜியோவின் இலவச அறிமுகச் சலுகை அந்நிறுவனத்திற்குச் சாதகமாக வேலை செய்துள்ளது. ஜனவரி 1, 2017 வரை ஜியோவின் கட்டண சேவைகள் துவங்க இருக்கின்றன. எனினும் ஜியோவில் வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Reliance Jio crosses 24 million users

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X