சரவண ராஜன், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட பத்திரிகையாளர் மற்றும் ஆட்டோமொபைல் எழுத்தாளராக பணிபுரிந்து வருகிறார். தினச்சுடர், தினமலர் உள்ளிட்ட அச்சு ஊடகங்களில் தனது பயணத்தைத் தொடங்கி, ஒன்இந்தியா மூலம் டிஜிட்டல் ஊடகத்துக்கு வந்தார். டிரைவ்ஸ்பார்க் தமிழில் உதவி ஆசிரியராக சேர்ந்து பல்வேறு பொறுப்புகளுடன் தற்போது டிரைவ்ஸ்பார்க் தளத்தின் மேலாண்மை ஆசிரியராக உள்ளார். யமஹா, டிவிஎஸ் டீலர்ஷிப்களில் பெற்ற சர்வீஸ் அனுபவத்துடன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு கார்களை நேரடியாகப் பயன்படுத்தியும், கார் மற்றும் பைக் மீடியா டிரைவ், ரோடு டெஸ்ட், ரிவ்யூ மற்றும் அறிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் நடைமுறை அனுபவம் பெற்றவர். கார்கள், பைக்குகள், மின்சார வாகனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தொழில்நுட்பம் குறித்து நம்பகமான செய்தி மற்றும் பகுப்பாய்வுகளை வழங்கி வருகிறார்.