ஊரடங்கு சமயத்தில் அதிகரிக்கும் வாட்ஸ்ஆப் ஹேக்.! உஷார்.!

|

வாட்ஸ்ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்,இந்நிலையில வாட்ஸ்ஆப் வெரிஃபிகேஷன ஸ்கேம் (whatsapp verification scam)என்ற பெயரில் வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கில் அதிகரித்துள்ளது.

வாட்ஸ்ஆப் தேவை

எனவே இந்த ஊரடங்கு நேரத்தில் வாட்ஸ்ஆப் தேவை அதிகரித்துள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி வாட்ஸ்ஆப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய. சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம்

பரிந்துரைத்துள்ளது.

 மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை

குறிப்பாக மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ்ஆப் மாறியிருக்கும் சுழுலில், வாட்ஸ்ஆப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

NASA செவ்வாய்யில் கண்டுபிடித்த அறிய டிராகன் படம்! ஆர்பிட்டர் படங்களின் லிஸ்டில் இது புதுசு!

ஒடிபி(otp)எண்

ஒடிபி(otp)எண்

அதாவது வாட்ஸ்ஆப் கணக்கை தொடங்குவதற்கு ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஒடிபி(otp)எண் கட்டாயத் தேவையாக இருக்கும் சூழுலில் யாரோ ஒரு மர்மநபர், ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார், அதில் ஒரு ஒடிபி தவறுதாலாக உங்களுக்கு வந்துவிட்டது என்று குறப்பிடப்பட்டிருக்கும். இந்த ஒடிபி ஆனது தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கானது என கூறி அவர் உங்களிடம் அந்த 6 இலக்க ஒடிபி எண்ணை தனக்கு அனுப்புமாறு சொல்வார்.

வாட்ஸ்ஆப் கணக்கு

பினபு அவரை நம்பி நீங்கள் அதை அனுப்பிவிட்டால், அந்த நொடியே உங்களுடைய வாட்ஸ்ஆப கணக்கின் ஒட்டுமொத்த

கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும். பின்னர் உங்களுடைய வாட்ஸ்ஆப்-க்கு வரும் அனைத்து குறுஞ்செய்திகள் புகைப்படங்களை நீங்கள் பார்ப்பதுபோல் நேரடியாக அவராலும் எளிமையாக பார்க்க முடியும். அதேபோல் உங்களுடைய வாட்ஸ்ஆப் கணக்கு மூலம் தவறான செய்திகள் செய்திகளை கூட பகிரமுடியும்.

iPhone SE 2020 நம்பமுடியாத மலிவு விலையில் வயர்லெஸ் சார்ஜிங் உடன் அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

எந்த ஓடிபி எண்களையும்

எனவே எந்த ஓடிபி எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள் வாட்ஸ்ஆப் வெரிஃபிகேஷன் ஸ்கேம்-ல் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உங்களுடைய வாட்ஸ்ஆப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும், டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன் (two-step verification) ஆப்ஷனை எனேபிள்(enable) செய்துகொள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது.

NASA வியப்பூட்டும் பூமி தகவலை வைத்துப் பாடல் உருவாக்கியுள்ளது! 2020ல் சவுண்டு கொஞ்சம் ஜாஸ்தி!

அடையாளமாகக் கொண்ட

வாட்ஸ்ஆப் செயலியை திறந்ததும் மேலே உள்ள 3புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை கிளிக் செய்யவும். அதில் வரும் செட்டிங்க்ஸ் ஆப்ஷனை தேர்வு டு-ஸ்டெப் வெரிஃபிகேஷன்-ஐ கிளிக் செய்து எனேபிள் ஆப்ஷனை தேர்வு செய்யவும். அப்போது நீங்கள் ஒரு 6இலக்க ரகசிய (pin) எண்ணை அமைக்க வேண்டும். இதை எனேபிள் செய்தபிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்ஆப் கணக்கிற்குள் நுழையவேண்டும் என்றால், இந்த

பின் நம்பரை கட்டாயம் கொடுக்க வேண்டும், இதன்மூலம் உங்களது வாட்ஸ்ஆப் கணக்கை பாதுகாக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WhatsApp Scam Increased in Coronavirus Lockdown: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X