NASA வியப்பூட்டும் பூமி தகவலை வைத்துப் பாடல் உருவாக்கியுள்ளது! 2020ல் சவுண்டு கொஞ்சம் ஜாஸ்தி!

|

நாசா எப்பொழுதும் பூமி தொடர்பான சில ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்தபடியே தான் இருக்கிறது. அப்படி, நாசா தற்பொழுது தனது யூடியூப் சேனலில் ஒரு புதிய வீடியோவை நேற்று அப்லோட் செய்துள்ளது. நாசா இதுவரை பூமி பற்றிச் சேகரித்த தகவல்களைக் கொண்டு ஒரு புதிய இசை பாடலை உருவாக்கியுள்ளது. பூமியின் தரவை வைத்து இசை பாடலா? அடடே, இது என்னப்பா புதுசா இருக்கேனு கேட்குறீங்களா? இந்த பாடலை கேட்டால் உங்களுக்கே விஷயம் புரியும்.

பூமி தரவுகளை கொண்டு புதிய பாடல்

பூமி தரவுகளை கொண்டு புதிய பாடல்

நாசா பூமி பற்றிய தகவல்களை 1964 ஆம் ஆண்டு முதல் சேகரிக்கத் துவங்கியுள்ளது. பூமியின் தரவு சேகரிக்கப்பட்ட அந்த வருடத்திலிருந்து தற்பொழுது வரை, அதாவது, 2020 ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட பூமி தரவுகளை வரிசைப்படுத்தி, இந்த புதிய பூமி பாடலை நாசா உருவாக்கியுள்ளது. நாசாவின் இந்த புதிய பாடல் நேற்று யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூமி தரவை இசையாக மாற்றினால் எப்படி இருக்கும்?

பூமி தரவை இசையாக மாற்றினால் எப்படி இருக்கும்?

பூமி தரவை இசையாக மாற்றினால் எப்படி இருக்கும் என்ற புதிய கோணத்தில் நாசா யோசித்துள்ளது பாராட்டத்தக்கது. வீடியோவில் வருடங்கள் நகர, நகரப் பூமியின் தகவல்களும் அதிகமாகிறது, பூமியின் தகவல்கள் அதிகமாக, அதிகமாகப் பாடலின் இசையும் அதிகரிக்கிறது. வீடியோவில் உள்ள இசை கோட்டை, ஒவ்வொரு பூமி வருடமும் கடந்து செல்லும்போது, டிரம்ஸ் சத்தமாகிறது. ஒவ்வொரு இசைக் கருவியும் ஒரு கதையைச் சொல்கிறது.

பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!பெருங்கடலில் மிதக்கும் உலகின் மிகப்பெரிய ராட்சஸ உயிரனம் கண்டுபிடிப்பு! வியப்பில் ஆழ்த்திய உருவம்!

நாசா எர்த் சயின்ஸ் மிஷன்களின் முடிவு பாடல் வடிவத்தில்

நாசா எர்த் சயின்ஸ் மிஷன்களின் முடிவு பாடல் வடிவத்தில்

நாசா துவக்க காலத்தில் பூமி பற்றிய தகவல்களைக் குறைவாகத்தான் சேகரித்துள்ளது, இதனால் பாடல் ஆரம்பத்தில் மெல்லிசையாகத் துவங்குகிறது. இசை கோட்டை வருடங்கள் கடக்கும்பொழுது அந்தந்த வருடத்தில் எந்த செயற்கைக்கோள்கள் தகவலைச் சேகரித்தது என்ற விவரத்துடன் இசை கோடுகள் மெல்ல நகர்கின்றன. இசையின் சுருதி அதிகமாவதற்குக் காரணம், நாசா எர்த் சயின்ஸ் மிஷன்களிலிருந்து அதிகமான தரவு சேகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த பாடல் உணர்த்துகிறது.

தகவலுக்கு ஏற்ப இசைக் கருவிகள்

தகவலுக்கு ஏற்ப இசைக் கருவிகள்

இந்த பாடலில் இடம் பெரும் ஒவ்வொரு இசைக் கருவியும், பூமியின் ஒவ்வொரு தகவலைக் குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் ஒவ்வொரு பணியின் துறையின் கீழ் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இசைக்குழு பிரிக்கப்பட்டு ஒரு பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, இந்த பாடலில் இடம்பெறும் இசைக் கருவிகள் எந்த தகவலைச் சேகரித்துள்ளது என்று பார்க்கலாம்.

Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!Whatsapp சாட்களை மறைப்பது எப்படி? உங்கள் ரகசிய சாட்களை இனி யாரும் பார்க்க வேண்டாம்.!

இசைக்கருவிகள் பிரதிபலிக்கும் தகவல்கள்

இசைக்கருவிகள் பிரதிபலிக்கும் தகவல்கள்

  • Strings = வளிமண்டலம் (Atmosphere)
  • High Woodwinds = புவியியல் (Geosphere)
  • Low Woodwinds = ஹைட்ரோஸ்பியர் (Hydrosphere)
  • High Brass = கிரையோஸ்பியர் (Cryosphere
  • Low Brass = பயோஸ்பியர் (Biosphere)
  • இது பூமியோட இசை

    நாசாவின் இந்த புதிய பூமி பாடலை நீங்களும் கேட்டு, உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். ஏப்ரல் 22ம் தேதியுடன் பூமி தினத்தின் 50 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது என்று வீடியோ பதிவில் நாசா குறிப்பிட்டுள்ளது. நாசாவின் கியூரியாஸ் யுனிவர்ஸ் போட்காஸ்டின் முதல் எபிசோட்டை கேட்க www.nasa.gov/curiousuniverse கிளிக் செய்யுங்கள். இசை பல பரிணாமங்களில் சுத்திட்டு இருக்குனு வடிவேலு நகைச்சுவையில் வந்தது ஒன்னும் சும்மா சொல்லலைப் போல... இது பூமியோட இசை.

Best Mobiles in India

English summary
NASA Released New Video Compossed By Earth Inforamtion Into Music : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X