நீங்கள் அனுப்பும் வாட்ஸ் அப் மெசேஜை படிக்கப்பட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

Written By:

ஃபேஸ்புக், டுவிட்டரை அடுத்து உலகில் மிக அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலி வாட்ஸ் அப் என்றால் அது மிகையில்லை. குறைந்த காலத்தில் மிக அதிக வரவேற்பை பெற்றதால்தான் வாட்ஸ் அப்-ஐ, ஃபேஸ்புக் நிறுவனத்தின் உரிமையாளர் மிகப்பெரிய தொகை கொடுத்து கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் மெசேஜை படிக்கப்பட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

இந்நிலையில் வாட்ஸ் அப்-இல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பதிவு செய்யும் மெசேஜ் அல்லது தகவலை நான் அனுப்பும் நபர் படித்தாரா? எந்த நேரத்தில் பார்த்தார், படித்தார் என்ற ஆப்சனை அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்சன் பலருடைய வரவேற்பை பெற்றிருந்தாலும் ஒருசிலருக்கு தர்ம சங்கடமாக இருந்தது. உதாரணமாக ஒரு முதலாளி தொழிலாளிக்கு வாட்ஸ் அப்-இல் ஒரு மெசேஜ் அனுப்பினால் அதை படித்துவிட்டு அப்பாவியாக நான் பார்க்கவே இல்லை என்று பொய் சொல்ல முடியாது. ஏனெனில் நீங்கள் பார்த்தவுடன் அதை அனுப்பியர் நீங்கள் பார்த்த நேரத்தை பார்க்க முடியும்.

ரிலைன்ஸ் ஜியோ (எ) பாரதி ஏர்டெல் : எது சிறந்தது??

எனவே இந்த ஆப்சனுக்கு ஒருசிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வாட்ஸ் அப், இந்த ஆப்சனை தேவைப்படுபவர்கள் மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற வகையில் டர்ன் ஆஃப் ஆப்சனை வழங்கியது.

சென்னையில் புதிய தொழில்நுட்பம் மூலம் அதிவேக இண்டர்நெட் வழங்கும் ஏர்டெல்!!

இந்நிலையில் ஒருவேளை நாம் மெசேஜ் அனுப்பும் நபர் டர்ன் ஆஃப் செய்திருந்தாலும் அவர் நம்முடைய மெசேஜை படித்தாரா? என்று தெரிந்து கொள்வதற்கு ஒருசில டிரிக்குகள் நம்மிடம் உள்ளது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
முதலில் ரீட் ரிசிப்ட் என்றால் என்ன என்று பார்ப்போம்

முதலில் ரீட் ரிசிப்ட் என்றால் என்ன என்று பார்ப்போம்

நாம் அனுப்பும் ஒரு மெசேஜ், அனுப்பப்பட்ட நபருக்கு போய் சேர்ந்தவுடன் அவர் அதை படித்துவிட்டால் அதில் இரண்டு டிக்'க்கள் நீல நிறத்தில் தோன்றும். இதிலிருந்தே அவர் நம்முடைய மெசேஜை படித்துவிட்டார் என்பதை உறுதி செய்து கொள்ளலாம். ஆனால் ரீட் ரிசிப்டை ஆஃப் செய்து வைத்திருந்தால் இரண்டு நீலக்கலர் டிக்குகள் நமக்கு தெரியாது. அவர் பார்த்தாரா? அல்லது பார்க்கவில்லையா? என்பதையும் கண்டுபிடிக்க முடியாது.

ரீட் ரிசிப்டை டிஸ் ஏபிள் செய்ய என்ன செய்யவேண்டும்?

ரீட் ரிசிப்டை டிஸ் ஏபிள் செய்ய என்ன செய்யவேண்டும்?

ரீட் ரிசிப்டை டிஸ் ஏபிள் செய்வது வெகு சிம்பிள். வாட்ஸ் அப் செட்டிங் சென்று Settings → Account → Privacy- Read Receipts - turn off செய்தால் போதும். உங்களுக்கு வந்த மெசேஜை நீங்கள் படித்துவிட்டீர்களா? என்பதை கண்டுபிடிக்க முடியாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சரி இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

சரி இப்போது அடுத்து என்ன செய்ய வேண்டிய மாற்றம் என்ன?

நீங்கள் அனுப்பும் மெசேஜை உங்கள் நண்பர் படித்துவிட்டாரா? அல்லது படிக்கவில்லையா? என்பதை தெரிந்து கொள்ள ஒரே ஒரு மாற்றம் செய்தால் போதும். அது என்ன மாற்றம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இதுக்குத்தான் குரூப் வேணும்ங்கிறது.

இதுக்குத்தான் குரூப் வேணும்ங்கிறது.

என்னதான் உங்கள் நண்பர் ரீட் ரிசிப்ட் ஆப்சனை டர்ன் ஆப் செய்து வைத்திருந்தாலும், அதே நபர் இருக்கும் குரூப்பில் அவர் ஒரு மெசேஜை படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை தெரிந்து கொள்ளும் ஆப்சன் உங்களுக்கு தெரியும். வாட்ஸ் அப் குரூப்பில் ரீட் ரிசிப்ட் டர்ன் ஆஃப் ஆப்சன் இல்லை என்பதால் அதில் இருந்து அவர் மறைந்து கொள்ள முடியாது.

குரூப்பை நம்புபவர்கள் கைவிடப்படார்

குரூப்பை நம்புபவர்கள் கைவிடப்படார்

எனவே உங்களுக்கு உங்கள் நண்பர் உங்கள் மெசேஜை படித்துவிட்டாரா அல்லது இல்லையா என்பதை தெரிந்து கொள்ள உடனே ஒரு குரூப் ஓப்பன் செய்யுங்கள். அந்த குரூப்பில் அந்த நபரை இணையுங்கள். இப்போது நீங்கள் அவருக்கு அனுப்பிய தனிப்பட்ட மெசேஜை அவர் படித்துவிட்டாரா? இல்லையா? என்பதை குரூப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Here is a simple trick to get read receipts on WhatsApp even if the feature is turned off. Take a look at it and know how to get it.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்