ரிலைன்ஸ் ஜியோ (எ) பாரதி ஏர்டெல் : எது சிறந்தது??

By Meganathan
|

அதிகாரப்பூர்வ வெளியீட்டிற்கு முன்பே பலரையும் வியப்பில் கவர்ந்த ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் 4ஜி பயனர்களின் எண்ணிக்கையையும் கணிசமாக அதிகரித்து வருகின்றது. வெளியான ஒரு மாத காலத்திலேயே 16 மில்லியன் பயனர்களைச் சேர்த்திருக்கும் ஜியோ டெலிகாம் சந்தையில் புதிய சாதனையையும் படைத்திருக்கின்றது.

இந்தியா முழுக்க பலரும் ரிலையன்ஸ் ஜியோ சேவைகளை பயன்படுத்தத் துவங்கியிருக்கும் நிலையில் பெரும்பாலானோர் ஜியோ 4ஜி சேவையில் முழுமையான திருப்தியடைவில்லை, மாறாகப் பலரும் வேகம் குறைவாக இருக்கின்றது என்றும் நெட்வர்க் கோளாறுகள் ஏற்படுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர்.

பாரதி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ இடையேயான போட்டி வலுவான ஒன்றாக இருக்கின்றது. இரு நிறுவனங்களும் சரி சமம் வாய்ந்த போட்டியை சந்திக்கும் நிலையில் இரண்டு நிறுவன சேவைகளில் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனம் எது?

எந்த பேண்ட் பயன்படுத்தப்படுகின்றது?

எந்த பேண்ட் பயன்படுத்தப்படுகின்றது?

இந்தியாவின் 22 இல் சுமார்15 வட்டாரங்களில் ஏர்டெல் நெட்வர்க் 2300MHz ஸ்பெக்ட்ரம் மூலம் பிராட்பேண்ட் வயர்லெஸ் 4ஜி சேவையினை வழங்கி வருகின்றது. மற்ற நகரங்களில் சேவையை வழங்க ஏரடெல் 97MHz இல் 1800MHz வாங்கியுள்ளது.

ரிலையனஸ் ஜியோவை பொருத்த வரை நாடு முழுக்க 2300MHz ஸ்பெக்டரம் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. கூடுதலாக இந்நிறுவனம் 1800MHz ஸ்பெக்ட்ரமுடன் 800MHz ஸ்பெக்ட்ரம் வாங்கியுள்ளது.

சக்தி வாய்ந்த பேண்ட்

சக்தி வாய்ந்த பேண்ட்

சக்திவாய்ந்த 4ஜி எல்டிஇ பேண்ட் என்றால் 1800MHz பேண்ட் தான் என அனைவரும் அறிந்ததே. சமீபத்திய ஆய்வு ஒன்றில் உலகின் 44 சதவீதம் 4ஜி நெட்வர்க் 1800MHz பேண்ட் மூலம் இயங்கி வருவது தெரியவந்திருக்கின்றது. 2300MHz பேண்ட்'ஐ விட 1800MHz பேண்ட் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

1800MHz பேண்ட் ஏன் சிறப்பானதாக இருக்கின்றது?

1800MHz பேண்ட் ஏன் சிறப்பானதாக இருக்கின்றது?

1800MHz பேண்ட் 2300MHz பேண்ட்களை விட 30 சவீதம் குறைவான டவர்களை பயன்படுத்துகின்றது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் 1800MHz பேண்ட் சிறப்பான சேவையை வழங்குகின்றது.

TDD/FDD தொழில்நுட்பம்

TDD/FDD தொழில்நுட்பம்

ஏர்டெல் நிறுவனம் TDD-LTE தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது, ரிலையன்ஸ் 800MHz பேண்ட் சார்ந்த FDD-LTE தொழில்நுட்பம் பயன்படுத்துகின்றது.

FDD கருவிகள்

FDD கருவிகள்

TDD கருவிகளுடன் ஒப்பிடுகையில்
Reliance Jio is Offered Only in 4G LTE 1800MHz பேண்ட் சார்ந்த FDD தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்திருக்கின்றது.

வித்தியாசம்

வித்தியாசம்

இரு பெரு நிறுவனங்களுக்கிடையே இருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இது தான். ஏர்டெல் நிறுவனம் அனைத்து நெட்வர்க் - 2ஜி, 3ஜி, மற்றும் 4ஜி எல்டிஇ சேவைகளையும் வழங்கி வருகின்றது, ரிலையன்ஸ் 4ஜி எல்டிஇ சேவையை மட்டுமே வழங்கி வருகின்றது.

நம்பிக்கை

நம்பிக்கை

வாய்ஸ் கால் எனப்படும் அழைப்புகளைப் பொருத்த வரை இனி வரும் காலங்களில் VoLTE சார்ந்த அழைப்புகள் தான் மிகப் பெரிய வளர்ச்சியாக இருக்கும் என ரிலையன்ஸ் நம்புவதாகத் தெரிகின்றது.

டவுன்லோடு வேகம்

டவுன்லோடு வேகம்

எதுவானாலும் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் ஏர்டெல் சேவைகளை விட அதிகமானதாகவே இருக்கின்றது. ஒட்டு மொத்த வேகத்தைப் பொருத்த வரையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி வகிக்கின்றது.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

டவுன்லோடு வேகம் ஒரு பக்கம் இருக்க இரு நிறுவனங்களின் சேவைகளிலும் பயனர் குற்றச்சாட்டு தொடர்ந்து தீர்க்கப்படாமலே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Important Differences Between Reliance Jio and Airtel 4G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X