நெட் பேங்க் மூலம் ஆப்ஸ் அல்லது கேம்ஸ் விலைக்கு வாங்குவது எப்படி?

By Siva
|

ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்கள் வந்ததில் இருந்தே புதிது புதிதாக ஆப்ஸ்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கான ஆப்ஸ்கள் இலவசமாக டவுன்லோடு செய்யப்பட்டு கொண்டிருந்தாலும் ஒருசில ஆப்ஸ்களை குறிப்பாக கேம்ஸ் ஆப்ஸ்களை விலை கொடுத்துதான் வாங்க வேண்டும்.

நெட் பேங்க் மூலம் ஆப்ஸ் அல்லது கேம்ஸ் விலைக்கு வாங்குவது எப்படி?

ஆண்ட்ராய்டு போன்களுக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்தும் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்தும் இந்த கேம்ஸ் ஆப்ஸ்களை வாங்க வேண்டும். இந்நிலையில் இதுவரை விலைக்கு வாங்க வேண்டிய ஆப்ஸ்களை கிரெடிட் கார்டு கொண்டு மட்டுமே உபயோகித்து வாங்க வேண்டிய நிலை இருந்தது.

ரூபாய் நோட்டுத் தடை மொபைல் வாங்குவோருக்கு நல்லது தான்.!!
ஆனால் இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலானோர்களிடம் டெபிட் கார்டு மட்டுமே உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற இந்தியர்களின் வசதிக்காக தற்போது ஆன்லைன் மூலம் ஆப்ஸ்களை பர்சேஸ் செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலம் ஆப்ஸ்களை விலைக்கு வாங்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

நெட் பேங்க் மூலம் ஆப்ஸ் அல்லது கேம்ஸ் விலைக்கு வாங்குவது எப்படி?

ஸ்டெப் 1: நீங்கள் எந்த ஆப்-ஐ பர்சேஸ் செய்ய வேண்டுமோ அந்த ஆப்-ஐ தேர்வு செய்யுங்கள்:

கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் சென்று நீங்கள் வாங்க வேண்டிய ஆப்-ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அதில் உள்ள பர்சேஸ் என்ற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்

ஸ்டெப் 2: நெட் பேங்கின் மூலம் பணம் செலுத்துதல்

பின்னர் அந்த ஆப்-ஐ விலைக்கு வாங்குவதற்கு பணம் செலுத்தக்கூடிய முறையான நெட் பேங்கிங் என்ற ஆப்சனை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில் கிட்டத்தட்ட இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளின் பெயர்களும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெப் 3: ஆப் பர்சேஸை முடியுங்கள்:

நெட் பேங்கிங் மூலம் அந்த ஆப்-இன் விலை எவ்வளவோ அதற்குரிய தொகையை நெட் பேங்கிங் மூலம் செலுத்துங்கள். தற்போது நீங்கள் விரும்பிய ஆப், டவுன்லோடு செய்ய அனுமதிக்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Google Play Store has been with us for almost a decade now, however, we Indians haven't enjoyed much when it comes to purchasing items. Read on.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X