சைக்கிள் பயணிகளுக்கு நண்பனாகும் கூகுள் மேப்ஸ்

சைக்கிள் பயணிகளுக்கு நண்பனாகும் கூகுள் மேப்ஸ்

By Siva
|

கூகுள் மேப் என்பது உண்மையிலேயே அனைத்து தரப்பினர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. வழி தெரியாத நபர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உலகம் முழுவதிலும் உள்ளவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

சைக்கிள் பயணிகளுக்கு நண்பனாகும் கூகுள் மேப்ஸ்

டிராபிக் நிலைமை, குறுக்கு வழிகள், பஸ் எண்கள் உள்பட பல விஷயங்களை யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இன்றி கூகுள் மேப் மூலம் பார்த்து கொள்ளலாம். மேலும் ஒரு வழியை தேடும்போது எந்த வாகனத்தில் பயணம் செய்ய போகிறீர்கள் என்று கேட்டறிந்து அதற்கேற்ற வகையில் வழியை காண்பிக்கும் கூகுள் மேப் உண்மையில் மிகச்சிறந்தது என்பதில் சந்தேகம் இல்லை.

நீங்கள் ஒருவேளை சைக்கிள் பயணியாக இருந்தால் நீங்கள் செல்லும் பாதை எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதை பூகோள வடிவமைப்பை வைத்து உங்களுக்கு கூகுள் மேப் வழிகாட்டும். இந்த உயர அளவுகள் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன் உபயோகிப்பாளர்களுக்கு பொருந்தும் வகையில் செயல்படுகிறது.

ரூ.799/-க்கு அச்சு அசலாக நோக்கியா 3310 போன்றே இருக்கும் தராகோ 3310.!

நீங்கள் உங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் நீங்கள் பயணத்தை தொடங்கும் இடத்தை குறிப்பிட்டு உங்கள் இருப்பிடத்தை கூகுள் மேப் அறிய உதவுங்க்ள். பின்னர் நீங்கள் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்து பயணம் செய்யும் வாகனம் என்ற ஆப்சனில் சைக்கிள் என்ற ஐகானை தேர்வு செய்யுங்கள்

இப்போது நீங்கள் செல்லும் பாதையின் உயர அளவு மேப்பின் இடது ஓரத்தில் தெரியும். பின்னர் அதே பகுதியை மேலும் ஒருமுறை க்ளிக் செய்தால் அந்த பாதை மிகத்தெளிவாக அருகில் உள்ளது போல் தோன்றி நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு இடத்தின் உயரத்தையும் அது காண்பிக்கும்.

மேலும் மிக உயரமான இடம் வரும்போது சைக்கிள் ஓட்டுவதை நிறுத்திவிட்டு சைக்கிளை தள்ளிக்கொண்டு நடந்து செல்ல வேண்டும் என்பதையும் அது உங்களுக்கு தெரிவிக்கும்

இந்த உயர்ந்த அல்லது தாழ்ந்த இடம் குறித்த டேட்டா கண்டிப்பாக நீங்கள் சைக்கிளில் உயர்ந்த பகுதியில் செல்லும்போது உங்களுக்கு கைகொடுக்கும் வகையில் இருக்கும். உயரமான இடத்தில் சைக்கிளில் செல்லும்போது எப்படி செல்ல வேண்டும், அதேபோல் தாழ்மையான இடத்தில் செல்லும்போது சைக்கிளை எப்படி ஹேண்டில் செய்ய வேண்டும் என்பது போன்ற குறிப்புகள் அதில் உங்களுக்கு கிடைக்கும்.

இதேபோன்று பைக் உள்பட எந்த வாகனத்தில் சென்றாலும் அந்தந்த வாகனத்திற்கு ஏற்ப எந்த மாதிரியான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது உங்கள் முன் தோன்ற வைப்பதே கூகுள் மேப்ஸ் தரும் சிறப்பு அம்சம் ஆகும்.

Best Mobiles in India

English summary
Google Maps is one of the best apps we could ever ask for. Thanks to Google! Undoubtedly, it makes our life easier often by providing inputs about the traffic, shortest route, bus numbers and more.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X