ரூ.799/-க்கு அச்சு அசலாக நோக்கியா 3310 போன்றே இருக்கும் தராகோ 3310.!

|

"என்னாது.. நோக்கியா 3310 மொபைலின் விலை ரூ.3310/- ஆ.??" என்று ஷாக் ஆனவர்களில் நீங்களும் ஒருவர் என்றால், "இதற்கு கூட இரண்டாயிரம் போட்டு நான் ஒரு ஸ்மார்ட்போனி வாங்கிடுவேன்" என்று மனக்கணக்கு போடுபவர் என்றால், ஆனால் அதே சமயம் நோக்கியாவின் கிளாஸிக் மொபைலை மிஸ் பண்ணவும் மனசு இல்லையென்றால் கவலையை விடுங்க.!

நோக்கியா 3310 கருவி போன்றே ஆச்சு அசலாக வெளியாகும் ஒரு க்ளோன் கருவிதான் - தராகோ 3310. இந்த க்ளோன் கருவியின் விலை என்ன.?? இக்கருவி பார்க்க மட்டுமே நோக்கிய 3310 போல உள்ளதா.?? அல்லது அம்சங்களிலும் சமமாக உள்ளதா என்பது பற்றிய விரிவான தொகுப்பே இது.!

நோக்கியா 3310

நோக்கியா 3310

நோக்கியா 3310 - இந்த ஆண்டு இந்தியாவில் மே மாதத்தில் வெளியான மிகவும் அதிகமான எதிர்பார்ப்புடைய மொபைல்களில் ஒன்றாகும். இது ரூ.3310/-க்கு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அசல் ஆன்மா

அசல் ஆன்மா

இந்த புதிய போன் 2எம்பி பின்புற கேமரா, மைக்ரோயூஸ்புபி ஆதரவு, 2.4 இன்ச் வண்ண டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அதன் கிளாசிக் அசல் ஆன்மாவையும் தக்கவைத்துள்ளது.

ரூ.799/- ரூபாய்க்கு

ரூ.799/- ரூபாய்க்கு

ஒருவேளை ரூ.3310 என்ற விலை நிர்ணயம் இந்த தொலைபேசிக்கு அதிகமாக தெரிந்தால் டார்கோ என்ற பெயரில் ஒரு நிறுவனம் ரூ.799/- ரூபாய்க்கு நோக்கியா 3310 கருவி போன்றே அச்சு அசலான ஒரு க்ளோன் கருவி உங்களை திருப்திப்படுத்தலாம்.

ரேம்

ரேம்

கிட்டத்தட்ட அசல் போலவே தெரியும் இந்த கருவி ப்ளிப்கார்ட் வலைத்தளத்தில் கிடைக்கிறது. இருப்பினும் சில தெளிவான சமரசங்கள் இக்கருவியில் உள்ளன. இது நோக்கியாவின் எஸ்30 + இயக்க முறைமையில் இயங்காது, 16எம்பி ஒரிஜினல் 3310 கருவியுடன் ஒப்பிடும் போது ஒன்றுமே இல்லாத 1எம்பி ரேம் மட்டுமே இது கொண்டுள்ளது.

0.3எம்பி பின்புற கேமரா

0.3எம்பி பின்புற கேமரா

வெறும் 8ஜிபி வரை மட்டுமே விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆதரவு கொண்ட இக்கருவி சாதாரணமான 0.3எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. இருப்பினும் மறுபக்கம் சில விஷயங்கள் மிகவும் ஒத்திருக்கின்றன.

2ஜி ஆதரவு

2ஜி ஆதரவு

அசல் 3310 போலவே, டாராகோ ஒரு மைக்ரோயூஎஸ்பி போர்டுடன் சார்ஜ் செய்யப்படுகிறது மற்றும் அசல் போன்றே பொத்தான்கள் வடிவமைப்பு கொண்டு 2ஜி ஆதரவு மற்றும் வைஃபை ஆதரவும் கொண்டுள்ளது.

வண்ண டிஸ்ப்ளே

வண்ண டிஸ்ப்ளே

நோக்கியா 3310 (2017 பதிப்பு) 2.4 இன்ச் வண்ண டிஸ்ப்ளே, மைக்ரோ எஸ்டி அட்டை ஆதரவு (32 ஜிபி வரை), 22 மணி நேர பேச்சு நேரம் மற்றும் ஒரு 30 நாட்கள் காத்திருப்பு நேரம் மற்றும் ஒரு 2 எம்பி பின்புற கேமரா, ஒரு 1200எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.

இயக்க முறைமை

இயக்க முறைமை

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஐகானிக் ஸ்நேக் விளையாட்டின் நவீனமயமான பதிப்புடன் வருகிறது மற்றும் நோக்கியாவின் எஸ்30 + இயக்க முறைமையில் இயங்குகிறது. இது 2ஜி மற்றும் டூயல்சிம் ஆதரவோடு வரும் இக்கருவியை 3ஜி / 4ஜி அல்லது வைஃபை ஆதரவுடன் போர்ட் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Darago 3310, a Nokia 3310 clone, to sell in India at Rs 799. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X