Home
Apps

கூகுளின் டூவோ வீடியோ செயலியில் உள்ள 5 முக்கிய அம்சங்கள்

By Super Admin

ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு 'ஸ்கைப், ஆப்பிள் நிறுவனத்தின் 'பேஸ்டைம்' உள்பட பல வீடியோ கால் செயலிகள் இயங்கி வரும் நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது புதியதாக 'டூவோ' என்ற வீடியோ செயலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கூகுள் அறிமுகம் செய்துள்ளதால் இந்த செயலி மிக விரைவில் பயனாளிகளிடம் சென்றடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுளின் டூவோ வீடியோ செயலியில் உள்ள 5 முக்கிய அம்சங்கள்

நீங்கள் டூவோ செயலியை பயன்படுத்த வேறு எதுவும் செய்ய வேண்டாம். ஒரே ஒருமுறை உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி ரிஜிஸ்ட்ரேஷன் செய்தால் மட்டுமே போதும். நீங்களும் ஒரு டூவோ பயனாளி ஆகிவிடுவீர்கள்

அனைத்து சாம்சங் கருவிகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை நீட்டிப்பு.!!

உங்கள் நண்பர்கள், காதலி மற்றும் குடும்பத்தினர்களுடன் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டு பேசுவது போன்ற உணர்வை தரும் இந்த டூவோவில் வேறு என்னென்ன இருக்கின்றது என்பதை பார்ப்போமா!!

கூகுள் அக்கவுண்ட் இல்லையா! கவலை வேண்டாம்:

கூகுள் அக்கவுண்ட் இல்லையா! கவலை வேண்டாம்:

இந்த டூவோ செயலியை பயன்படுத்த உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்கள் மொபைல் நம்பரை பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்தால், உங்களுக்கு ஒரு வெரிபிகேஷன் கோட் எஸ்.எம்.எஸ் ஆக வரும். அதை பதிவு செய்தால் மட்டும் போதும்.

'நாக் நாக்' என்றால் என்ன?

'நாக் நாக்' என்றால் என்ன?

உங்கள் மொபைலில் டூவோ மூலம் கால் வரும்போதே அழைப்பவரின் முகத்தை நீங்கள் பார்க்க முடியும். நீங்கள் அந்த அழைப்பை அட்டண்ட் செய்ய வேண்டுமா? அல்லது தவிர்க்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யலாம். இந்த வசதிக்கு 'நாக் நாக்' என்று பெயர்.

வேண்டாதவர்களை பிளாக்கும் செய்யலாம்:

வேண்டாதவர்களை பிளாக்கும் செய்யலாம்:

உங்களுக்கு அடிக்கடி தொந்தரவு செய்பவர்களை நீங்கள் பிளாக் செய்யவும் இதில் வசதி உள்ளது. அதே நேரத்தில் நீங்கள் அந்த நபரை பிளாக் செய்தது அவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் அவருக்கு ரிங் அடித்து கொண்டே இருக்கும்.

 'நாக் நாக்'-ஐயும் பிளாக்கும் செய்யலாம்

'நாக் நாக்'-ஐயும் பிளாக்கும் செய்யலாம்

நாக் நாக்' வசதி என்பது நீங்கள் உங்கள் அழைப்பை எடுக்கும் முன்பே உங்களை பார்க்கும் வசதி என்பதை பார்த்தோம். இதை நீங்கள் விரும்பவிலை என்றால் இதை பிளாக் செய்யும் வசதியும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் உங்கள் காண்டாக்டில் உள்ள ஒரு நபரை மட்டும் குறிப்பிட்டு நாக் நாக்-ஐ பிளாக் செய்ய முடியாது. மொத்தமாக பிளாக் செய்யவோ, அல்லது பிளாக் செய்யாமல் இருக்கவோ மட்டும்தான் முடியும்.

உளவு பார்க்கவும் முடியாது

உளவு பார்க்கவும் முடியாது

டூவோ செயலி மூலம் நீங்கள் பேசும் வீடியோ அழைப்பை நீங்களும், உங்களுடன் உரையாடுபவரும் மட்டுமே பார்க்க முடியும். மூன்றாவது நபரோ அல்லது யாராவது நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று உளவு பார்க்கவோ முடியாது. ஒரு நாட்டின் அரசாங்கமே கேட்டாலும் உங்கள் உரையாடலை கூகுள் பகிராது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Google Duo is a new video calling app from Google that lets you call between iOS and Android. Take a look at the reasons to try this app and the features of the same.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X