அனைத்து சாம்சங் கருவிகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை நீட்டிப்பு.!!

Written By:

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளின் அதிகாரப்பூர்வ வெளியீடு பல முறை தாமதிக்கப்பட்டாலும், தனது பிரீவியூ ஆஃபர் மூலம் தனது போட்டி நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றது.

அனைத்து சாம்சங் கருவிகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை நீட்டிப்பு.!!

லைஃப் பிராண்டு ஸ்மார்ட்போன்களுடன் அந்நிறுவனம் இலவச ஜியோ சிம் கார்டுகளை வழங்கியதோடு 90 நாட்களுக்கு வரம்பற்ற அதிவேக இண்டர்நெட் வசதி வழங்கப்பட்டது. இந்தச் சலுகை எச்பி லாப்டசாப் மற்றும் தேர்வு செய்யப்பட்ட சாம்சங் கருவிகளுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதையும் பாருங்கள் : சாம்சங் போனுடன் இலவச ஜியோ சிம் பெறுவது எப்படி?

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அனைத்து சாம்சங் 4ஜி கருவிகளுக்கும் நீட்டிக்கப்பட இருக்கின்றது. இந்தச் சலுகையை பெற மைஜியோ எனும் செயலியினை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பிதிவிறக்கம் செய்ய வேண்டும். ஆப் டவுன்லோடு செய்ததும் ஜியோ சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி?

அனைத்து சாம்சங் கருவிகளுக்கும் ரிலையன்ஸ் ஜியோ சேவை நீட்டிப்பு.!!

மை ஜியோ ஆப் டவுன்லோடு செய்ததும் sign in மற்றும் sign up என இரு ஆப்ஷன்களோடு 'Get Jio SIM' என்ற ஆப்ஷனும் இருக்கும். Get Jio SIM ஆப்ஷனினை கிளிக் செய்து பார் கோடு தெரியும். பின் ரிலையன்ஸ் டிஜிட்டல் அல்லது ரிலையனஅஸ் டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர் சென்று சுய புகைப்படம், அடையாளம் மற்றும் இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட தரவுகளை காண்பித்து CAF எனும் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இதையும் பாருங்கள் : இலவச ஜியோ சிம், 4ஜி அன்லிமிட்டட் டேட்டா பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

படிவத்தை சமர்ப்பித்ததும் இலவச ஜியோ சிம் வழங்கப்படும். அனைத்துத் தரவுகளும் சரிபார்க்கப்பட்ட பின் நீங்கள் வழங்கிய மாற்று மொபைல் நம்பருக்கு உங்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின் ஜியோ சிம் கார்டினை மொபைலில் வைத்து 1977 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு ஆக்டிவேட் செய்ய வேண்டும்.

English summary
Reliance Jio Preview Offer now open to all Samsung smartphones Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot