Home
Apps

Paytm பயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி. டிசம்பர் வரை வட்டியின்றி வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி கொள்ளலாம்

By Siva

பிரதமரின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பு காரணமாக நாட்டில் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் Paytm தனது வாடிக்கையாளர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை வரும் டிசம்பர் மாதம் வரை வழங்க முடிவு செய்துள்ளது.

Paytm பயனாளிகளுக்கு ஒரு நற்செய்தி. டிசம்பர் வரை வட்டியின்றி வங்கி கணக்

இதன்படி உங்கள் பணத்தை வங்கியில் இருந்து மாற்ற் கொள்ள, ரீசார்ஜ் செய்ய, முக்கிய பொருட்களை ஆன்லைன் மூலம் பர்சேஸ் செய்ய நீங்கள் Paytm ஐ பயன்படுத்தினால் வரும் டிசம்பர் வரை 0% வட்டியில் வழங்கி வருகிறது.

ரிலையன்ஸ் ஜியோ சிம் டோர் டெலிவரி பெறுவது எப்படி.??

ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த உடனே Paytm தனது பரிவர்த்தனை கட்டணத்தை 1% மாற்றி தனது வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளித்த நிலையில் தற்போது பிரதமரின் அறிவிப்பு வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் நிலைமை சீரடையாததால் அந்த 1% சேவைக்கட்டணத்தையும் விட்டுக்கொடுத்து தற்போது 0% ஆக மாற்றியுள்ளது.

இதற்கு முன் Paytm டிரான்ஸ்பர் கட்டணமாக வசூல் செய்தது 1%

இதற்கு முன் Paytm டிரான்ஸ்பர் கட்டணமாக வசூல் செய்தது 1%

பிரதமரின் அறிவிப்புக்கு பின்னர் உங்கள் Paytm அக்கவுண்டில் உள்ள பணத்தை உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்ற 1% என்ற சலுகையை வழங்கி வந்தது. ஆனால் இதன் போட்டியாளர்களான மொபிக்விக் மற்றும் ஃப்ரீசார்ஜ் நிறுவனங்கள் 0% என்று அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

1%ஐ 0% ஆக மாற்றியது ஏன்?

1%ஐ 0% ஆக மாற்றியது ஏன்?

Paytm ஆப் நிறுவனத்தின் போட்டியாளர்கள் 0% என்று அறிவித்ததன் காரணமாக Paytm ஆப்-ம் தனது வாடிக்கையாளர்களுக்கு டிசம்பர் 31 வரை 0% டிரான்ஸ்பர் கட்டணம் என்று அறிவித்துவிட்டது. டிசம்பருக்கு பின்னரும் இதே சலுகை நீட்டிக்குமா? என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனாலும் பொறுத்திருந்து பார்ப்போம்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

போட்டி நிறுவனங்களால்தான் இந்த மாற்றமா?

போட்டி நிறுவனங்களால்தான் இந்த மாற்றமா?

இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மார்க்கெட்டில் ஒரு நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றால் அதன் போட்டியாளர்கள் கொடுக்கும் சலுகைக்கு இணையான சலுகையை தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இன்றைய மார்க்கெட்டிங் நிலைமை உள்ளது எனவேதான் மொபிக்விக் மற்றும் ஃப்ரீசார்ஜ் நிறுவனங்கள் 0% என்று அறிவித்த அதே சலுகையை Paytm நிறுவனமும் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

KYC ஃபார்ம் அவசியமா?

KYC ஃபார்ம் அவசியமா?

கண்டிப்பாக அவசியம். Paytm வாடிக்கையாளர்கள் தங்கள் KYC (Know Your Customer) ஃபார்மை பூர்த்தி செய்திருக்க வேண்டியது மிக்க அவசியம். அவ்வாறு இருந்தால் மட்டுமே 0% சிறப்பு சலுகை உண்டு. இல்லையென்றால் 1% பிராஸசிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் Paytm

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலில் Paytm

இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு Paytm பயனாளிகளும் மாதம் ஒன்றுக்கு ரூ.10,000 மட்டுமே பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும் KYC பார்ம் பூர்த்தி செய்தவர்கள் அன்லிமிட் பரிவர்த்தனைக்கும், தங்களது Paytm அக்கவுண்டில் ரூ.100,000 வரை வைத்து கொள்ளவும் அனுமதிக்கப்படுவர்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Paytm users can now transfer cash to any bank account at 0% interest. Hurry up before the offer ends on December 31.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X