Home
News

ரிலையன்ஸ் ஜியோ சிம் டோர் டெலிவரி பெறுவது எப்படி.??

இனிமே ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை டோர் டெலிவரியில் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்...

By Meganathan

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு டோர் டெலிவரி செய்யப்படும் எனக் கடந்த மாதம் ஒரு தகவல் வெளியானது. பின் இத்தகவலை ரிலையனஸ் ஜியோ மறுத்தது. இதனால் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் மீண்டும் கூட்டம் களைக்கட்டத் துவங்கியது.

ரிலையன்ஸ் ஜியோவின் ஃபேஸ்புக் போஸ்ட் பயனர்கள் புதிய ஜியோ சிம் கார்டினை பெற முடியும் எனக் குறிப்பிட்டுள்ளது. துவக்க கட்டமாகச் சுமார் 12 நகரங்களில் அமல்படுத்தப்பட்டது.

நீங்களும் ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை டோர் டெலிவரியில் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இங்குப் பாருங்கள்..

ஜியோ ஃபேஸ்புக் பேஜ்

ஜியோ ஃபேஸ்புக் பேஜ்

முதலில் உங்களின் ஃபேஸ்புக் லாக் இன் செய்து ரிலையன்ஸ் ஜியோவின் அதிகாரப்பூர்வ பேஜ் சென்று "Get Your Jio SIM Home Delivered" என்ற விளம்பரத்தை கிளிக் செய்யுங்கள்.

பதிவு செய்யும் ஆப்ஷன்

பதிவு செய்யும் ஆப்ஷன்

இதே விளம்பரத்தில் சைன் அப் செய்யக் கோரும் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் இங்கு உங்களின் சில தனிப்பட்ட தகவல்களை இங்குப் பதிவு செய்ய வேண்டும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தனிப்பட்ட தகவல்கள்

தனிப்பட்ட தகவல்கள்

ஜியோவிற்கு உங்களின் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி மற்றும் நீங்கள் வசிக்கும் நகரத்தின் பெயர் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட வேண்டும். தற்சமயம் சென்னை, அகமதாபாத், பெங்களூரு, தில்லி, சண்டிகர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நவி மும்மை, பூனே மற்றும் விசாகபட்டினம் போன்ற நகரங்களில் ஜியோ சிம் டோர் டெலிவரி செய்யப்படுகிறது.

டோர் டெலிவரி ஆப்ஷன்

டோர் டெலிவரி ஆப்ஷன்

உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்ததும் ஷெட்யூல் சிம் டெலிவரி ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இனி ஜியோ சிம் கார்டு விரைவில் டெலிவரி செய்யப்பட்டு விடும்.

குறிப்பு

குறிப்பு

அடையாள சான்றுகளைப் பொருத்த வரை ஆதார் கார்டு வைத்திருப்பதோடு, நீங்கள் வழங்கிய முகவரியில் நீங்களும் கட்டாயம் இருப்பது அவசியம் ஆகும். ஜியோ சிம் கார்டுகள் வழங்கப்பட்ட முகவரி அல்லாத வேறு முகவரியில் டெலிவரி செய்யப்பட மாட்டாது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
How to Get Reliance Jio SIM by Home Delivery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X