ஃபேஸ்புக் மெசஞ்சர் தரும் ஆச்சரியமான இலவச கேம்ஸ்கள்

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக கேம்ஸ்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

By Siva
|

ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதுப்புது வசதிகளை செய்து தந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது புதியதாக கேம்ஸ்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் தரும் ஆச்சரியமான இலவச கேம்ஸ்கள்

முன்பெல்லாம் கேம்ஸ் விளையாட பிரத்யேகமாக ஆப் டவுண்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். ஆனால் தற்போது எவ்வித கேம்ஸ் ஆப்ஸ்களயும் இன்ஸ்டால் செய்யாமல் உங்கள் மொபைல் போனில் உள்ள ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆப்-இல் இருந்தே கேம்ஸ் விளையாடலாம்.

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.?

இப்போதைக்கு 17 விதமான கேம்ஸ்களை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் நாளடைவில் அதிக அளவிலான கேம்ஸ்கள் பயனாளிகளுக்கு கிடைக்கும். இதை கையாண்டு விளையாடுவதும் மிக எளிது. நீங்கள் ஒரு கேம்ஸ்-ஐ விளையாட வேண்டும் என்று முடிவெடுத்தால் ஆன்லைனிலேயே உங்கள் போட்டியாளரை தேர்வு செய்யலாம்.

இப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.!

அவரிடம் இருந்து மெசேஜ் வந்துவிட்டால் நீங்கள் உடனே உங்கள் விளையாட்டை ஆரம்பித்து திறமையை காட்டலாம். Pac-Man, Galaga, மற்றும் Space Invaders உள்பட 17 வகை கேம்ஸ்கள் இதில் உள்ளது. இவற்றில் ஐந்து கேம்ஸ்கள் குறித்து தற்போது பார்ப்போம்

பேக் மேன் (Pac-Man)

பேக் மேன் (Pac-Man)

அனைவரும் விரும்பி விளையாடும் கேம்ஸ்களில் ஒன்றுதான் இந்த Pac-Man. கிளாசிக் கேம்ஸ்களில் ஒன்றான இந்த கேமை நீங்கள் ஃபேஸ்புக் மெசெஞ்சரில் இருந்து மிக மிக எளிதாக விளையாடலாம். திரையில் தோன்று ஒவ்வொரு டாட்ஸ்களை அல்லது பழங்களை நீங்கள் சாப்பிடவேண்டும். எவ்வளவு டாட்களை சாப்பிடுகிறீர்களோ அவ்வளவு பாயிண்ட் உங்களுக்கு கிடைக்கும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேலகா 9Galaga)

கேலகா 9Galaga)

முந்தைய பேக்மேன் கேம்ஸ் போலவே இதுவும் ஒரு கிளாசிக் கேம்ஸ்தான். பழங்காலமான பொற்காலத்தில் நடைபெறுவதாக உள்ள கேம்தான் இது. ஃபேஸ்புக் மெசெஞ்சரில் கிடைக்கும் இந்த கேம் ஜப்பானை சேர்ந்த நாம்கோ நிறுவனத்தின் வெளியீடு ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்பேஸ் இன்வேடர்ஸ் (Space Invaders)

ஸ்பேஸ் இன்வேடர்ஸ் (Space Invaders)

ஷூட்டர் கேம்ஸ்களில் மிக முக்கிய கேம்-ஆன இந்த கேம் ஒரு 2D கேமாக இருந்தாலும் விளையாடும்போது நேரம் போனதே தெரியாமல் இருக்கும். லேசர் துப்பாக்கி மூலம் வேற்று கிரகத்தில் இருந்து வந்தவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதே இந்த கேம்-இன் கான்செப்ட்

உங்கள் நண்பர்களுடன் வார்த்தை விளையாட்டு விளையாட வேண்டுமா? (Frenzy)

உங்கள் நண்பர்களுடன் வார்த்தை விளையாட்டு விளையாட வேண்டுமா? (Frenzy)

உங்கள் நண்பருடன் வார்த்தை ஜாலங்களில் ஈடுபட விரும்புவோர் இந்த கேம்-ஐ தேர்வு செய்யலாம். இதற்கு மொழி புலமையும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நியூடாய் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த கேம் குறுக்கெழுத்து போட்டி போன்று அறிவுக்கு வேலை கொடுக்கும் ஒரு கேம் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ட்லெஸ் லேக் (Endless Lake)

எண்ட்லெஸ் லேக் (Endless Lake)

டெம்பிள் ரன் போலவே கதாநாயகனுக்கு வழிகாட்டும் கேம் இது. ஆனால் இது தண்ணீரில் வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கேம்கள் உள்பட மொத்தம் 17 விதமான கேம்ஸ்களை ஃபேஸ்புக் மெசஞ்சரில் விளையாடி மகிழுங்கள்

Best Mobiles in India

English summary
In an attempt to make users spend more time on its app, Facebook is rolling out a new update for its Messenger app (both iOS and Android) which brings a new feature called 'Instant Games."

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X