இந்தியாவில் பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை, உங்க ஏரியாவிற்கு வருமா.?

Written By:

மொபைல் வழியாக தரவு வழங்கி இலவசமாக இணைய அணுகல் பெற வழிவகுக்கும் பேஸ்புக்கின் இந்த திட்டம் முதலில் இண்டர்நெட்.ஆர்க் என்று அறிமுகமாகி பின்னர் ப்ரீ பேஸிக்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது எக்ஸ்பிரஸ் வைஃபை என்று உருவாகியுள்ளது.

பேஸ்புக் மூலம் அனுமதிக்கப்பட்ட ஒரு சிறிய எண்ணிக்கையிலான தளங்களுக்கு மட்டுமே இலவச இணைய அணுகலை வழங்கியது தான் ப்ரீ பேஸிக்ஸ் திட்டத்தின் பிரச்சனையாய் கூறப்பட்டது. மக்களுக்கு இணைய அணுகல் வழங்குவதில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில்இன்னும் ஒரு பிரச்சனையாகவேத்தான் உள்ளது மற்றும் ஃபேஸ்புக் போன்ற நிறுவனங்களின் பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை போன்ற திட்டங்கள் நாட்டின் எல்லை வரை சென்று வளர்ச்சியை உண்டாக்கும் என்று நம்பப்படுகிறது.

இப்போது, இந்த சமூக நெட்வொர்க் அதன் பிரச்சனைகளை ஒரு வித்தியாசமான அணுகுமுறை மூலம் கட்டுப்பாடுகளை கொண்டு வரும் அதே வெளியில் அதே வகையான பொது வைஃபை சேவையை கொண்டு வருகிறது. அப்படியான பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைகள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அதிக செலவு இல்லாத

அதிக செலவு இல்லாத

எக்ஸ்பிரஸ் வைஃபை ஆனது பொது வைஃபை பயன்படுத்தலின் ஒரு முன்மாதிரியாகும். பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபையானது மக்கள் தங்கள் தொலைபேசிகள் - அல்லது கணினிகள் மற்றும் பல்வேறு ஸ்மார்ட் டிவைசஸ் - மூலம் விநியோகிக்கப்படும் அதிக செலவு இல்லாத இணையத்துடன் இணைந்துக்கொள்ள முடியும்.

கிராமப்புற பகுதி

கிராமப்புற பகுதி

பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை-யின் முழு கவனமும் கிராமப்புற பகுதிகளில் உள்ளது. 125 இடங்களுக்கும் அதிகமான கிராமப்புற இடங்களுக்கு பேஸ்புக் விரைவில் அதன் சேவையை கொண்டுள்ள செல்லவுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

தரவு பொதிகள்

தரவு பொதிகள்

இண்டர்நெட்.ஆர்க் போல் எக்ஸ்பிரஸ் வைஃபை இலவச இணைய வசதியாக இருக்காது. இப்போதைக்கு தெளிவான விவரங்கள் இல்லை ஆனால் வாடிக்கையாளர்கள் டிஜிட்டல் உறுதி சீட்டு வழியாக தரவு பொதிகள் வாங்க முடியும் வண்ணம் சேவை அமையும்.

சோதனை

சோதனை

பேஸ்புக் நிறுவனம் அதன் எக்ஸ்பிரஸ் வைஃபை சேவையை இந்தியாவில் சரியாக எந்த இடத்தில் சோதனை செய்து வருகிறது என்பதை பகிர்ந்துக்கொள்ளவில்லை.

திறந்த அமைப்பு

திறந்த அமைப்பு

இந்த பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை முழு இண்டர்நெட் அணுகலை வழங்குமா அல்லது ப்ரீ பேஸிக்ஸ் போன்று தேர்வு செய்யப்பட்ட தளங்களின் அணுகலை வழங்குமா என்பதில் விளக்கம் இல்லை. இது இலவசம் இல்லை என்பதால் ப்ரீ பேஸிக்ஸ் போல இல்லாமல் ஒரு திறந்த அமைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டண விகிதங்கள்

கட்டண விகிதங்கள்

பேஸ்புக் இது ஒரு "நீடித்த முன்மாதிரி"யாக இருக்கும் என்று மட்டுமே கூறியுள்ளது, எக்ஸ்பிரஸ் வைஃபை கட்டண விகிதங்கள் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ளவில்லை.

புதிய லாப்டாப் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இணைய சேவை வழங்குநர்

இணைய சேவை வழங்குநர்

ஐஎஸ்பி-க்கள் (இணைய சேவை வழங்குநர்) மூலமாக எக்ஸ்பிரஸ் வைஃபை நெட்வொர்க் அமைக்கப்படுகிறது. இது ப்ரீ பேஸிக்ஸ் சேவைக்கு நிகழ்த்தப்பட்ட அதே வழிமுறையாகும்.

இலக்கை அடையும்

இலக்கை அடையும்

தற்போது இந்தியாவில் குறிப்பாக கிராமப்புறங்களில் குறிப்பிட்ட அளவிலான இலக்கை அடையும் ஒரு சில பொது வைஃபை நெட்வொர்க்குகள் மட்டுமே உள்ளன. பேஸ்புக் எக்ஸ்பிரஸ் வைஃபை இந்த நிலையை மாற்றும் என்று நம்பப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

விஎல்சி மீடியா பிளேயர் உதவியுடன் பெரிய வீடியோக்களை கம்ப்ரஸ் செய்வது எப்படி.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Facebook Express Wifi in India is not free but affordable. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot