விண்டோஸ் 10ஐ செட்டப் செய்ய உதவும் கோர்ட்டானா வாய்ஸ் அசிஸ்டெண்ட்

By Siva
|

தொழில்நுட்ப துறை நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக தொழில்நுட்ப ஆய்வாளர்கள் செயற்கை நுண்ணறிவுடன் செயல்படக்கூடிய அதாவது ஒரு மனித உதவியாளன் போன்ற வாய்ஸ் அசிஸ்டெண்ட்டை உருவாக்கி அதில் வெற்றி பெற்று வருகின்றனர்.

விண்டோஸ் 10ஐ செட்டப் செய்ய உதவும் கோர்ட்டானா வாய்ஸ் அசிஸ்டெண்ட்

இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் கோர்ட்டானா என்ற டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சாப்ட்வேரை உருவாக்கியுள்ளது. இந்த வசதியை கொண்டு விண்டோஸ் 10 ஐ கூட கம்ப்யூட்டர்களில் செட்டப் செய்யும் வசதியும் தற்போது வந்துள்ளது.

மைக்ரோசாப்ட் ஆய்வாளர்கள் இந்த கோர்ட்டானா சாப்ட்வேரை உபயோகித்து விண்டோஸ் 10-ன் புதிய அப்டேடை அமைக்கும்படி செய்துள்ளனர். எனவே விண்டோஸ் 10 பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தற்போது மிக எளிதில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.

குரல் மூலம் கட்டளையிட்டு ஒரு செயலை முடித்தாலும் அதன் பாதுகாப்பு தன்மையையும் மைக்ரோசாப்ட் செவ்வனே செய்திருப்பதால் பயனாளிகள் பாதுகாப்பு குறித்த அச்சமின்றி இந்த சாப்ட்வேரை பயன்படுத்தலாம்.

அளவுக்கு அதிகமாக வரும் நோட்டிபிகேசனை க்ளியர் செய்வது எப்படி?

பிரபல Vox மீடியா 'தி வெர்ஜ்' இதுகுறித்து கூறும்போது, 'கோர்ட்டானா மூலம் விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐ வாய்ஸ் கட்டளை கோர்ட்டானா மூலம் பெற பயனாளிகள் தயாராகிவிட்டனர்' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த கோர்ட்டானா பயனாளிகளுக்கு வைஃபை கனெக்ஷன் மற்றும் கீபோர்ட் ஆப்சன்களுக்கு மட்டும் உதவி செய்யவில்லை என்றும் கூடுதலாக மைக்ரோசாப்டில் சைன் இன் செய்யவும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கோர்ட்டானா வசதியை கொண்டே பயனாளிகள் விண்டோஸ் 10ஐ செட்டப் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவேளை இந்த வசதி வேண்டாம் என்று நினைக்கும் பயனாளிகள் இந்த வசதியை மியூட் செய்துவிட்டு கீபோர்டு மற்றும் மவுஸ் மூலம் வழக்கமான முறையில் விண்டோஸ் 10ஐ பெற்று கொள்ளலாம்.

புதிய மோட்டோ மொபைல்களின் அப்படியென்ன இரகசியம்!

இந்த புதிய வசதியில் ஸ்மூத்தான சவுண்ட் சிஸ்டம் இருப்பதால், அதிக பயனாளிகள் இந்த வசதியை உபயோகிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் இந்த டிஜிட்டல் வாய்ஸ் அசிஸ்டெண்ட் சரியாக வேலை செய்யாத அனுபவத்தையும் முன்பு பெற்றுள்ளோம். மிகத்துல்லியமாக இந்த வசதி இதற்கு முன்னர் செயல்படாமல் இருந்தாலும், தற்போது விண்டோஸ் 10-ல் வெளியாகியிருக்கும் இந்த வசதியில் அதுபோன்ற கசப்பான அனுபவங்கள் இருக்காது என்று நம்புவோம்.

Best Mobiles in India

Read more about:
English summary
As Windows 10 Creators update is being rolled out to devices,now users can set up Windows 10 just by using voice commands. Hopefully the new method will fuction smoothly. Users also have the option to mute Cortana.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X