கூகுள் காலண்டரில் நிகழ்ச்சி நிரலை இணைக்க ஐந்து எளிய வழிகள்

By Siva
|

ஒருசில ஆண்டுகளுக்கு முன்னர் நாம் ஒரு நிகழ்சியை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும் என்றால் சுவற்றில் தொங்கும் காலண்டரில் குறித்து வைத்து கொள்வோம். அல்லது டைரியில் அந்த குறிப்பிட்ட தேதியில் எழுதி வைப்போம்.

கூகுள் காலண்டரில் நிகழ்ச்சி நிரலை இணைக்க ஐந்து எளிய வழிகள்

ஆனால் தற்போதைய டெக்னாலஜி உலகில் நடைபெற இருக்கும் முக்கிய நிகழ்ச்சியை குறித்து வைத்து கொள்ள ஏராளமான ஆப்ஸ்கள் வந்துவிட்டது. அதை டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால், அது உங்களுக்கு நிகழ்ச்சிக்குரிய நாளை இமெயில் அல்லது மெசேஜ் அல்லது நோட்டிபிகேசன் மூலம் ஞாபகப்படுத்தும்

வேலை செய்யும் அருகாமை ஏடிஎம்-களை கண்டுபிடிக்க ஒரு ஸ்மார்ட் ஐடியா.!

ஆனால் நாம் எதற்காக இதற்கென ஒரு ஆப்ஸை இன்ஸ்டால் செய்ய வேண்டும். நாம் பல ஆண்டுகளாக உபயோகப்படுத்தி வரும் கூகுளிலேயே காலண்டர் என்ற ஒரு ஆப்சன் உள்ளது., இதுவே நமக்கு போதுமானதும் கூட. கிட்டத்தட்ட அனைவருக்குமே ஜிமெயிலில் அக்கவுண்ட் இருக்கும்.

ரிலையன்ஸ் டிடிஎச் - ஏர்டெல் டிடிஎச், எது பெஸ்ட்.? சபாஷ் சரியான போட்டி.!

அதேபோல் நாம் எல்லோரும் கிட்டத்தட்ட கூகுள் குரோமை பயன்படுத்துவோம். பிறகென்ன....நமது நிகழ்ச்சி நிரல்களை இந்த கூகுள் காலண்டரிலேயே பதிவு செய்து கொள்ளலாம். அதை எப்படி பதிவு செய்வது என்பதை ஐந்து எளிய வழிகளில் பார்ப்போம்.

ஜிமெயில் அக்கவுண்டில் லாக்-இன் செய்யுங்கள்

ஜிமெயில் அக்கவுண்டில் லாக்-இன் செய்யுங்கள்

கூகுள் காலண்டரில் உங்களுடைய முக்கியமான நிகழ்ச்சி நிரல்களை பதிவு செய்ய முதலில் நீங்கள் உங்களுடைய கூகுள் அக்கவுண்டை லாக்-இன் செய்ய வேண்டும். இதை நீங்கள் கூகுள் குரோம் அல்லது வேறு ஏதாவது பிரெளசரிலும் இதை செய்யலாம்,

கூகுள் காலண்டரை க்ளிக் செய்யுங்கள்

கூகுள் காலண்டரை க்ளிக் செய்யுங்கள்

உங்கள் கூகுள் அக்கவுண்டுக்குள் நீங்கள் சென்றவுடன் அதில் வலது ஓரத்தில் ஒரு சதுர ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்தால் கூகுளின் அப்ளிகேசன்கள் தோன்றும், அதில் கூகுள் காலண்டரை தேர்வு செய்து அதை க்ளிக் செய்ய வேண்டும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலை பதிவு செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலை பதிவு செய்யுங்கள்

கூகுள் காலண்டரை தேர்வு செய்த பின்னர் உங்கள் முன் மாதக் காலண்டர் ஷீட் போன்று தோன்றும் அதில் மேல்புறத்தில் இடது பக்கத்டில் கிரியேட் என்று இருப்பதை க்ளிக் செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலின் தேதியை பதிவு செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலின் தேதியை பதிவு செய்யுங்கள்

கிரியேட்-ஐ க்ளிக் செய்தவுடன் உங்களுக்கு பாப் அப் மெனு ஒன்று தோன்றும். அதில் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய நிகழ்ச்சி, நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம் அதன் முக்கியத்துவம், நிகழ்ச்சியின் பெயர் என்ன என்பதை பதிவு செய்செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலை சேவ் செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலை சேவ் செய்யுங்கள்

நிகழ்ச்சி நிரலின் தேதி, நேரம் மற்றும் நிகழ்ச்சி குறித்த தகவல்களை பதிவு செய்த பின்னர் மறக்காமல் சேவ் செய்யுங்கள். அவ்வளவுதான் கூகுள் காலண்டர் உங்களை மறக்காமல் ஞாபகப்படுத்திவிடும்

நீங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்த நிகழ்ச்சி உங்கள் ஸ்மார்ட்போனிலும் நோட்டிபிகேசனாக தோன்றும். ஆனால் நீங்கள் இரண்டிலும் ஒரே ஜிமெயில் அக்கவுண்டில் லாக்-இன் செய்திருக்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Follow these steps to add events in Google calendar

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X