Home
How to

சிக்கல் செய்யும் ஜியோ சிம், 'அசால்ட்' ஆக சரிசெய்வது எப்படி..?

By Muthuraj

சமீபத்தில், இந்தியா முழுவதும் பெரும்பாலான மக்கள் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு பெற்று மற்றும் சிம் ஆக்டிவேஷன்காக காத்திருக்கிறார்கள்.

மறுபக்கம் செயல்படுத்தப்பட்ட ஜியோ சிம் கார்டுகளில் மெதுவான வேகம், இணைப்பு பிரச்சினைகள் அதனால் மற்ற நெட்வொர்க்குகளுடான அழைப்புகளின் போது சிக்கல்கள் என பல பிரச்சனைகளை ஆன்லைன் கருத்துக்களத்தில் ஜியோ பயனர்கள் முன்வைக்கின்றனர்.

ஜியோ 4 ஜி சிம் சார்ந்த பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டாலும் சில பொதுவான பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை பற்றிய தொகுப்பே இது.!

சிக்கல்#01

சிக்கல்#01

ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை : முதலில் ஜியோ சிம் சப்போர்ட் செய்யும் 4ஜி கருவியினை வைத்திருக்க வேண்டும். ஒரு வேலை 3ஜி போன் வைத்திருக்கும் பட்சத்தில் அதிலும் ஜியோ சிம் பயன்படுத்த முடியும். ஆனால் அனைத்து ஜியோ சலுகைகளையும் பெற முடியாது. தீர்வு: ரிலையன்ஸ் ஜியோ சிம் சீராக வேலை செய்ய சரியான 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிக்கல்#02

சிக்கல்#02

டூயல் சிம் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யவில்லை : பெரும்பாலான பயனர்களும் டூயல் சிம் கொண்ட தங்களது ஸ்மார்ட்போன்களில் ஜியோ சிம் சரியாக வேலை செய்யவில்லை எனக் குற்றம் சாட்டி வருகின்றனர். தீர்வு: ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டினை பிரைமரி சிம் கார்டு ஸ்லாட்டில் பொருத்த வேண்டும். இவ்வாறு செய்வதால் சீரான ஜியோ சேவையினை பெற முடியும்.

சிக்கல்#03

சிக்கல்#03

ஜியோ சிம் பெயர் காட்டவில்லை : சில பயனர்கள் தங்களது கருவியில் ஜியோ சிம் பெயரே காட்டவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இந்தப் பிரச்சனை பெரும்பாலும் டூயல் சிம் போன்களில் அதிகம் ஏற்படுகின்றது. தீர்வு: இந்தப் பிரச்சனைக்கு சிம் கார்டினை கழற்றி, மீண்டும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிக்கல்#04

சிக்கல்#04

சிக்னல் கிடைக்கவில்லை : ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டு பெயர் தெரிந்தும், கருவியில் ஜியோ சிக்னல் கிடைக்கவில்லையெனில் சில வழிமுறைகளைப் பின்பற்றி இதனைச் சரி செய்ய முடியும். தீர்வு: இதற்கு செட்டிங்ஸ் > மொபைல் நெட்வர்க்ஸ் > ப்ரீபர்டு நெட்வர்க் டைப் சென்று எல்டிஇ ஒன்லி ஆப்ஷனினை கிளிக் செய்ய வேண்டும்.

சிக்கல்#05

சிக்கல்#05

அழைப்புகள் : ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம் கார்டு மூலம் சில சமயங்களில் அழைப்புகளை மேற்கொள்ள முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது டெலி-வெரிபிகேஷன் நிறைவடையாததால் ஏற்படலாம். இந்த வழிமுறையினை சரியாக பின்பற்றும் வரும் இந்தப் பிரச்சனையை சரி செய்ய இயலாது. தீர்வு: ஜியோ 4ஜி சிம் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள ஜியோஜாயின் ஆப் பயன்படுத்தலாம். இந்த ஆப் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க

மேலும் படிக்க

2ஜி டேட்டா பேக் கொண்டு 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்வது எப்படி?

More from GizBot

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G SIM 5 Common Problems and Fixes. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X