'யாருக்கு வேண்டுமானாலும்' மெசேஜ் அனுப்ப உதவும் 10 சாட் ஆப்ஸ்..!
நீங்கள் யார்..? உங்கள் பெயர்..? என்ன நீங்கள் எங்கிருந்து தொடர்பு கொள்கிறீர்கள்..? - போன்ற எந்த விதமான அடையாளத்தையும், தகவல்களையும் வழங்காமல் சாட் செய்ய உதவும் 10 ஆப்ஸ்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.
அவைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது..!

01. வுட் வுட் :
உங்கள் ஃபேஸ்புக் மாற்றியும் அதே சமயம் வுட் வுட்-இல் நண்பர்களாக இருப்பவிர்களிடம், நிரந்திரமில்லாத மெசேஜ்களை பரிமாறிக்கொள்ள வுட் வுட் உதவும் !

02. இக் இக் :
உங்களைப்போன்றே, யாருடன் தொடர்பு கொள்கிறோம் என்று தெரியாவர்களிடம் தொடர்பு கொள்ள உதவும் செயலி தான் - இக் இக்..!

03. ப்ஸ்ட் :
சாட் ஐடி மற்றும் சாட் ஹிஸ்ட்ரி இல்லாத ஒரு ஆப் தான் இந்த - ப்ஸ்ட்..!

04. ட்ரூத் :
உங்கள் அடையாளத்தை அறிவிக்காமல் உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ளவர்களிடம் பேச உதவும் ஆப் தான் - ட்ரூத்..!

05. விஸ்பர் :
மீமீஸ் (Memes) மூலம் உங்கள் மனதில் தோன்றுவதை பரிமாற உதவும் ஆப் தான் - விஸ்பர்..!

06. பாப்கார்ன் :
ஒரு மைல் சுற்றளவில் இருக்கும் மக்களுடன் தனிப்பட்ட முறையில் சாட் செய்ய உதவும் ஆப் தான் - பாப்கார்ன்..!

07. அனோமோ :
பொதுவான எண்ணங்களை கொண்ட மக்கள் சந்திக்கும் தளம் தான் இந்த அனோமோ ஆப்..!

08. கைன்ட்லி :
சமூகம் சார்ந்த சிக்கலான மற்றும் சங்கடமான கேள்வி பதில்களை நிகழ்த்த உதவும் ஆப் தான் - கைன்ட்லி..!

09. ரூம்வைன் :
உங்கள் அருகிலேயே வாழும் அந்நியர்கள்களுடன் சாட் செய்ய உதவும் ஆப் தான் - ரூம்வைன்..!

10. வொன்டர் :
எந்த விதமான அடையாளத்தையும் பகிர்ந்து கொள்ளாத இந்த வொன்டர் ஆப், உங்களை ட்விட்டரில் பின் தொடர்பவர்களை மட்டும் அடையாளம் காட்டிடும்.

மேலும் படிக்க :
2015-ஆம் ஆண்டில் நம்மையெல்லாம் முட்டாள் ஆக்கிய 10 புரளிகள்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications